தேசிய மாணவர் படையின் தற்போதைய தலைமை அதிகாரி லெட்டினன்ட் ஜென்ட்ரல் குர்பீர்பால் சிங்.
புது தில்லியை தலைமை மையமாகக் கொண்டுள்ள இந்த அமைப்பு தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று அமைப்புகளை உடையது. இந்தியா முழுவதும் 17 மையங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 10 முதல் 13 லட்சம் மாணவ மாணவியர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
ராணுவத்திலும் காவல் துறையிலும் சேர்ந்து பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு கல்வி பருவத்திலேயே அதற்கான பயிற்சியை தேசிய மாணவர் படை அளிக்கிறது. இதில் பலவித முகாம்கள் உள்ளன ஒவ்வொரு முகாமிலும் மாணவர்களுக்கு தேவையான திறன் வளர்ப்பு பயிற்சிகள், ராணுவ பயிற்சிகள் உட்பட அனைத்தும் அளிக்கப்படுகிறது.
தேசிய மாணவர் படையின் பகுதி நேர அதிகாரியாக பள்ளி கல்லூரியில் இருந்து ஆர்வமுள்ள ஆசிரியர்கள் விருப்பத்தின் பெயரில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் குவாலியரில் மூன்று மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டு பகுதி நேர அலுவலராக அமர்த்தப்படுவர்.
இதில் அளிக்கப்படும் சான்றிதழ்கள் மேற்படிப்பிற்கும், வேலைவாய்ப்பிற்கும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நாட்டுப்பற்றை மாணவர்களிடையே இளம் பருவத்திலேயே உருவாக்கவும், அவர்களை ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றுள்ள குடிமக்களாக உருவாக்குவதிலும் தேசிய மாணவர் படை முனைப்புடன் செயல்படுகிறது.






No comments:
Post a Comment