அதுபோல எடை குறைந்த அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உடல் எடையை அதிகரிக்க மற்றும் குழந்தையின் உடல் வெப்பநிலையை சராசரி நிலைக்கு கொண்டு வர கங்காரு பராமரிப்பு மருத்துவர்களால் இளம் தாய்மார்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
37 அல்லது அதற்கும் குறைந்த வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் இரண்டு கிலோவுக்கு குறைவாக பிறக்கும் குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகள் ஆகும். இந்த குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க இன்குபேட்டர் போன்ற பராமரிப்பு முறையில் வைத்துப் பேணப்படுகிறது. ஓரளவிற்கு உடல் எடை அதிகரித்த பின் இந்த கங்காரு தாய் பராமரிப்பு முறை KMC முறை பரிந்துரைக்கப்படுகிறது.
போதிய உடல் சுத்தத்துடன் குழந்தையை தாய் தனது மார்பில் அரவணைத்துக் கொள்ள வேண்டும். குழந்தை எவ்வித ஆடையும் இல்லாமல் இருக்க வேண்டும். தாயின் உடல் வெப்பநிலை குழந்தைக்கு சீராக பரவும் பொழுது குழந்தை இதமான உணர்வை அடைகிறது. மேலும் தாயின் இதயத்துடிப்பு குழந்தைக்கு கேட்கும் பொழுது தாயின் கருவறைக்குள் இருக்கும் பாதுகாப்பான உணர்வை குழந்தை அடைகிறது.
தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஏற்படும் இந்த உணர்வு குழந்தை ஆரோக்கியமான நிலையை அடைய உதவுகிறது. முதல் மூன்று மாதங்களுக்கு இதை அதிகமாக செய்யும் பொழுது குழந்தையின் எடை ஆரோக்கியத்துடன் சீராக அதிகரிக்கிறது.
சராசரி கால இடைவெளிகளில் கொடுக்கப்படும் தாய்ப்பால் மற்றும் கங்காரு முறை பராமரிப்பு தொடர்ந்து செய்யும் பொழுது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதோடு நல்ல ஆரோக்கிய நிலையை அடையும். அதனால் வேறு மருத்துவ முறைகள் கையாளுவதை விட இம்முறை சிறந்த தீர்வை தரும்.






No comments:
Post a Comment