இதை பயன்படுத்துவதால் அதிகளவு நன்மைகள் இருந்தாலும் ஒரு சில தீமைகளும் இருக்கின்றன.
நன்மைகள்:
முதலில் விலையானது செங்கற்களை விட குறைவு. அதாவது இந்தியாவில் ஒரு கண மீட்டருக்கு குறைந்தபட்சமாக 2000 ரூபாய் முதல் கிடைக்கிறது.
இந்தக் கற்களை செங்கற்கள் மாதிரி உபயோகப்படுத்த முடியாது. இந்த கற்களை ஒட்டுவதற்கு என்று தனிப்பட்ட பசை உள்ளது.
செங்கற்களை ஒப்பிடும்போது குறைந்த நாட்களில் குறைந்த தொழிலாளர்களை வைத்து எளிதில் முடிக்க முடியும்.
இது கோடை காலம் குளிர்காலம் இரண்டிலும் வீட்டு சுவர்களை குளுமையாக வைத்துக் கொள்ளும்.
தீமைகள்:
ஏஏசி ப்ளாக் எல்லோராலும் எளிதாக கட்டி விட இயலாது. தகுதி வாய்ந்த நிபுணர்களால் மட்டுமே கட்டிட இயலும்.
ஏஏசி ப்ளாக் வைத்து கட்டும் பொழுது சிறிய தவறு ஏற்பட்டால் கூட அது கட்டிடத்தில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.
மேலும் இந்த வகை கட்டிடங்கள் தட்பவெப்ப நிலை மழை நீர் மற்றும் சில நுண்ணுயிர்களால் எளிதில் பாதிக்கப்படும். எனவே வீடு கட்டும் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் பின்பு உங்கள் இல்லத்தை கட்டத் தொடங்குங்கள்.
இது போன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்து கொள்வதற்கு எங்கள் பக்கத்தை தொடரவும்






No comments:
Post a Comment