அரசுப்பள்ளிகளில் இவ்வளவு நன்மைகளா... !

தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பு

இந்தியாவில் எழுத்தறிவு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு ஒரு முக்கியமானதாகும் ஏனென்றால் நமது தமிழக அரசு கல்விக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது தமிழ்நாட்டில் கல்வியானது ஐந்து ஆண்டுகள் தொடக்கக் கல்வியையும் மூன்று ஆண்டுகள் நடுநிலைக் கல்வியையும் இரண்டு ஆண்டுகள் மேல்நிலைக் கல்வியும் மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்நிலைக் கல்வியையும் ஆக மொத்தம் 12 ஆண்டுகள் கொண்டது அதாவது கல்வித் திட்டமானது 10+2 என்ற பள்ளி படிப்பை கொண்டது. தனியார் பள்ளிகளில் 3 1/2 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்க ப்படுகிறது ஆனால் தமிழக கல்வித்துறையில் ஐந்து வயதிற்கு மேற்பட்டு குழந்தைகளுக்கு முதலாம் ஆண்டு பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

இதில் பத்தாவது 11 வது பன்னிரண்டாவது மாநில அளவில் தேர்வானது நடத்தப்படுகிறது இதில் பன்னிரெண்டாவது மதிப்பெண்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தேர்வாக பார்க்கப்படுகிறது எனவே பள்ளி கல்லூரி பள்ளி கல்வியை பொறுத்தவரையில் 12 ஆம் வகுப்பு மாதிரி பெண்கள் தங்களின் துறைகளை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தேர்வாக கொள்ளப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் தமிழை முதன்மையாகக் கொண்டு பாடங்கள் பயிற்று வைக்கப்படுகின்றன தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் கல்வி தொடர்வதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் தமிழ் வழிக் கல்வியை அரசு அதிக அளவில் ஆதரிக்கிறது தமிழில் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிப்பதற்காக தமிழ் வழியில் படித்து தேர்ச்சி அடைபவர்களுக்கு தனி இடவித்திக்கீடு அளிக்கப்பட்டுள்ளது
கல்வித்துறை அமைச்சகமே தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தலைமையாக பார்க்கப்படுகிறது கல்வித் துறை அமைச்சரே இதன் தலைமை பொறுப்பாளர். கல்வித்துறையின் கீழ் பல்வேறு வகையான இயக்கங்கள் உள்ளன.  இவ்வகை இயக்கங்கள்  கல்வித்துறையின் கல்வி மற்றும் தேர்வு பணிகள் வேலைவாய்ப்பு பாடநூல் மற்றும் பாடங்கள் வடிவமைப்புத்தல் இன்னும் பல அமைப்புகளுக்கு பொறுப்பாகின்றன அதன் இயக்கங்கள் பின்வருமாறு

அரசு தேர்வு இயக்ககம் பள்ளி கல்வி இயக்ககம்
தொடக்கக்கல்வி இயக்ககம் இடைநிலை கல்வி வாரியம்
அரசு தேர்வு வாரியம்
தமிழ்நாட்டு பாடநூல் கழகம்

தமிழ்நாட்டில் மொத்தம் 200500 க்கும் மேற்பட்ட பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு வகையான
அரசுப்பள்ளிகளில்
இவ்வளவு நன்மைகளா... !

தமிழ்நாடு அரசின் கல்வித்துறையின் நிர்வாகத்தில் இயங்கும் பள்ளிகளில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழக அரசு பள்ளிகளில் வழங்கும் நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

1ஆம் வகுப்பு முதல்  12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணமில்லாத இலவச கல்வி.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியில் முன்னுரிமை  வழங்கப்படுகிறது.

இதில் மிக முக்கியமாக ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை ஓமியோபதி மருத்துவம், சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில 
7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள திறமையான மாணவர்களும் மேற்படிப்பு படிக்க எளிதாகிறது. 52 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

பெண் கல்வி இடைநிற்றலை தவிர்த்து பெண் கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.
அதாவது நமது கல்வித்துறை பெண் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியை ஊக்குவிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும்  நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இது மட்டும் இன்றி பல வகையான இலவச பொருட்கள் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. அவை பின் வருமாறு:

பன்னிரண்டாம் வகுப்பு வரை விலையில்லா புத்தகங்கள் மற்றும் விலையில்லா  குறிப்பேடுகள்.

 பாட நூல்களுக்காக எந்தவித பணமும் செலவழிக்க தேவை இல்லாததால் அனைத்து தரப்பு மாணவர்களும் குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களும் கல்வி கற்பது மிகவும் எளிதாகிறது.

விலையில்லா சீருடைகள்.

விலையில்லா புத்தகப்பை.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும்  மாணவ மாணவியர்களுக்கு இலவச காலுறையுடன் கூடிய  காலணிகள். மலையோரம்  உள்ள அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச காலுறையுடன் கூடிய  காலணிகள்.

ஆரம்ப பள்ளிக்கு படிக்கும் குழந்தைகளுக்கு இலவச வண்ண பென்சில்கள்.

கணித உபகரணப் பெட்டி.

புவியியல்  வரைபட நூல்.

தினந்தோறும்  முட்டையுடன் சத்துணவு.

விலையில்லா மிதிவண்டி...

விலையில்லா மடிக்கணினி... 

மலையோரத்தில் மற்றும் குளிர் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்வெட்டர்.

மலையோரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ரெயின்கோட். 

தற்பொழுது தமிழக அரசினால் காலை சத்துணவு திட்டமும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அங்கன்வாடி திட்டம் எனப்படும் ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு எழுத்து மற்றும் பேச்சு பயிற்சி அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடி திட்டம் படிப்பு மட்டுமல்லாமல் பிற சமூகம் சார்ந்த நலன்களிலும் அக்கறை கொள்கிறது. இது பால்வாடி என நம்மிடையே அறியப்படுகிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் தமிழக முழுவதும் சிறப்பாக செயல்படுகிறது. இது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு ஆரம்பக் கல்விக்கான தேடலை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அக்குழந்தைகளின் பசியையும் நிவர்த்தி செய்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதிக அளவு கவனம் கொடுக்கப்படுகிறது.

இலவச பேருந்து பயண அட்டை...

அது மட்டும் இல்லாமல் இலவச பேருந்து பயண அட்டை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதனால் கிராமப்புற மற்றும் தூரத்தில் உள்ள மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்பது ஊக்குவிக்கப்படுகிறது.


 போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு உதவி செய்யப்படுகிறது.

 அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கு தேன்சிட்டு மாத இதழ் வழங்கப்படுகிறது...

இது போன்ற அரசு பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம் நம் மாணவர்களின் திறனை மேம்படுத்துவோம். கல்வி வளமிக்க வளமான நாட்டை உருவாக்குவோம்.

 இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களைப் பெற எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.

Share:

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Labels

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.