நீட் தேர்வு என்பது மருத்துவ இளநிலை படிப்புக்கான (MBBS and BDS) தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆகும். National Eligibility cum Entrance Test என்பதே NEETன் விரிவாக்கம் ஆகும். அந்த வகையில் தற்போது மருத்துவர் ஆவதற்கு தகுதி தேர்வான நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வுக்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல் வேதியல் உயிரியல் ஆகிய பாடங்களை கட்டாய பாடங்களாகக் கொண்டு படித்திருத்தல் அவசியம். இவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். இந்தத் தேர்வு நடக்கும் சில மாதங்களுக்கு முன்பு தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வழங்கப்படும் அதை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் சரியான நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
உள்ளடக்கம்:
தேர்வு முறை
இட ஒதுக்கீடு
NCC தேசிய மாணவர் படை
ஏன் இட ஒதுக்கீடு இல்லை
தேர்வு முறை:
நீட் தேர்வு முழுவதுமாக ஆஃப்லைனில் மட்டுமே நடக்கும் ஆன்லைன் தேர்வு கிடையாது இந்தத் தேர்வு இயற்பியல் வேதியியல் தாவரவியல் மற்றும் விலங்கியல் போன்ற பாடங்களில் இருந்து ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் 45 வினாக்கள் இடம்பெறும். மொத்தம் 180 வினாக்கள் பல் குறி வினாக்களாக கேட்கப்படும். தேர்வின் மொத்த நேரம் மூன்று மணி நேரம். ஒரு வினாவிற்கு நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் ஒவ்வொரு தவறான வினாவிற்கும் ஒரு மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த சில நாட்களில் இந்த தேர்தல் நடத்தப்படும். தேர்வு முடிந்த பின்னர் தேர்வு மதிப்பெண்கள் தேசிய மருத்துவ மற்றும் பல் மருத்துவ கலந்தாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். தேசிய தரவரிசைப்படி இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் தகுதிக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
இட ஒதுக்கீடு:
இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் பொதுவாக அந்தந்த மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகின்றன. இடஒதுக்கீட்டுக் கொள்கைகளில் பட்டியல் சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), எலும்பியல் மாற்றுத் திறனாளிகள் (ODA) மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) என்று பிரிக்கப்பட்டு அவர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் அரசு பணியிலும் சரி கல்வியிலும் சரி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
NCC தேசிய மாணவர் படை:
தேசிய மாணவர் படை என்று அழைக்கப்படும் NCC பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் நாட்டுப்பற்றை உருவாக்கவும் இந்திய பாதுகாப்புத் துறைகளில் சேருவதற்கான ஆர்வத்தை உருவாக்கவும் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
NCC சான்றிதழ்கள் A, B, மற்றும் C எனும் மூன்று வகைப்படும். இதில் கல்லூரியின் இறுதியில் பெறப்படும் சான்றிதழ் C உயர்ந்த ஒன்று ஆகும். இதில் A சான்றிதழ் பள்ளிகளிலும் B மற்றும் C சான்றிதழ் கல்லூரிகளிலும் தேர்வு வைத்து தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்லூரியின் இறுதி வருடத்தில் தேசிய மாணவர் படை மையத்தினால் நடத்தப்படும் இறுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு C சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழ் வேலை வாய்ப்பில் அதாவது அரசு வேலைவாய்ப்பிற்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த சான்றிதழ் வைத்து இருப்பவர்களுக்கு கூடுதல் மதிப்பிடங்களுடன் தனி இட ஒதுக்கீடும் பல துறைகளில் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சீருடை பணியாளர்கள் நடத்தும் அனைத்து எழுத்து தேர்விலும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் 10 வரை அளிக்கப்படுகிறது. அது போல கப்பற்படை விமானப்படை தரைப்படை என அனைத்து பாதுகாப்பு துறைகளிலும் கூடுதல் மதிப்பெண்கள் மற்றும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல Staff Selection Board நடத்தும் தேர்வில் எழுத்து தேர்வு அல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
இது போல் NCC சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அது போன்று அந்தந்த மாநிலங்களும் NCC சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, கூடுதல் மதிப்பெண்கள் என அனைத்தும் அளித்து வருகின்றது.
ஏன் இட ஒதுக்கீடு இல்லை...?
இவ்வளவு உயர்ந்த சான்றிதழான C சர்டிபிகேட் வைத்திருக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் தனியாக இட ஒதுக்கீடு அல்லது கூடுதல் மதிப்பெண்கள் உள்ளதா என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை மாணவர்களின் மருத்துவ திறமையை சோதிக்கும் ஒரு தேர்வாக மட்டுமே உள்ளது. மற்றப்படி விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் பொழுது திறமையான மாணவர்கள் தவிர்க்கப்பட நேரிடலாம். எனவே நீட் தேர்வில் கொடுக்கப்படும் தரவரிசைப் படி மட்டுமே மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மருத்துவர் பதவி மற்ற பதவிகள் போல் அல்லாமல் மிகவும் நுண்ணறிவு உடைய உயிர் காக்கும் தொழில்... இந்த உயிர் காக்கும் தொழிலுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையிலான மருத்துவர் தேர்ந்தெடுப்பது சரியானது அல்ல. எனவே தான் எந்த ஒரு கூடுதல் மதிப்பெண்களோ அல்லது இட ஒதுக்கீடு பிற துறைகளில் சாதிக்கும் மாணவர்களுக்கு வழங்கவில்லை.
அந்த நீட் தேர்வில் வகுப்புவாரியாக SC, ST, OBC, EWS, and PwD போன்ற வகுப்புவாரியான இட ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு, யோகா, NCC போன்ற துறைகளுக்கு தனியாக இட ஒதுக்கீடு எதுவும் இல்லை.
இதுபோன்ற தகவல்களை அறிந்திட எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.






No comments:
Post a Comment