• This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

ரோட்டு கடை இறால் தொக்கு ஆறு மாதத்திற்கு கெடாமல் செய்வது எப்படி

ரோட்டு கடை இறால் தொக்கு ஆறு மாதத்திற்கு கெடாமல் செய்வது எப்படி.....

பொதுவாக அசைவ பிரியர்களுக்கு கடல் உணவு வகைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அதன் ருசியும் சத்துக்களும் ஏராளம். 

கடல் உணவுகளில் இறால் அதிக புரதச்சத்து மிகுந்தது. இறாலில் பல வகைகள் உண்டு. அதில் வீட்டில் வளர்க்கப்படும் இறால்களை விட கடலில் கிடைக்கும் இறால்களில் சுவை அதிகம். அதிலும் சிறிய வகை இறால்களில் சத்தும் ருசியும் அதிகம். ஆனால் சிறிய வகை இறால்களை சுத்தம் செய்தல் கொஞ்சம் கடினமான வேலையாகும். ஆயினும் அதில் உள்ள சத்துக்காகவும் ருசிக்காகவும் இதை செய்யலாம். 

கடல் உணவுகளை  சமைப்பதில் மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியது அதை சுத்தப்படுத்துதல். ஏனெனில் அவை துர்நாற்றத்தை அதிக அளவில் கொண்டிருக்கும். அந்த துர்நாற்றம் ஒழுங்காக சுத்தம் செய்யாவிடில் மொத்த உணவையும் கெடுத்து விடும். எனவே எப்போதும் கடல் உணவு வகைகளில் சமைக்கும் முன்பு நம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் சுத்தப்படுத்துதல்.

 இரண்டாவது சமைக்கும் முறை. கடல் உணவுகளை சரியான முறையில் சமைக்காவிட்டால் உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். செரிமான பிரச்சனை ஏற்படக் கூடும். மேலும் ருசியும் கெட்டுவிடும். குறிப்பிட்ட நேரத்தில் சமைத்தல் கடல் உணவுகளை பொறுத்தவரையில் மிகுந்த சுவையை அளிக்கும்.

 இறால் தொக்கு மிகவும் சுவையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம். இந்த இறால் தொக்கு ஆறு மாதத்திற்கு வரை வீட்டிலே பதப்படுத்தி சுவை மாறாமல் உண்ணலாம். 


தேவையான பொருட்கள்:

இறால் - ஒரு கிலோ 
வெந்தயம் - 2  தேக்கரண்டி
மல்லி - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
தக்காளி - 4
பூண்டு - 100 gram
இஞ்சி - சிறிதளவு
மிளகாய் தூள் - 100 கிராம்
காஷ்மீர் மிளகாய் தூள் - சிறிதளவு 
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
எலுமிச்சை பழம் - ஒன்று 

செய்முறை :

 ஒரு கிலோ இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்கு கழுவ வேண்டும்.  மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு திரும்பவும் கழுவி அதை நன்கு உலர்த்த வேண்டும். ஈரப்பதம் இல்லாமல் உணர்த்துவதற்கு துணியிலோ அல்லது பேப்பரிலோ போட்டு அதன் ஈரம் உறிஞ்சும் வரை  சிறிது நேரம் வைத்து உலர வைக்க வேண்டும். ஈரப்பதம் நீங்கிய பின் உபயோகப்படுத்தினால் மட்டுமே நீண்ட நாட்களுக்கும் வரும். ருசியும் நன்றாக இருக்கும். முதலில் இஞ்சியை தோல் நீக்கி கழுவி  தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பூண்டை ஒன்றும் பாதியுமாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை இஞ்சி உடன் சேர்த்து அரைத்தாலும் நன்றாகவே இருக்கும். ஆனால் ஒன்றும் பாதியுமாக தட்டி வைத்துக் கொண்டால் அது வாயில் படும்போது சுவை நன்றாக இருக்கும்.  சிறிய வகை பூண்டுகளை தேர்ந்தெடுத்தால் நல்ல வாசனையுடன் இருக்கும்.

மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் மற்றும்  மல்லி இவை ஐந்தையும் எண்ணெய்  சேர்க்காமல் நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் சூடு ஆறியவுடன் அரைத்து பொடியாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நல்ல பழுத்த தக்காளியை தனியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பு சூடானதும் வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய்  சூடானதும் அதில் இறாலை உப்பு சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பொதுவாக நாட்டுக்கோழியை தவிர மற்ற எந்தவித அசைவ உணவுகள் சமைக்கும் பொழுது கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்ற வாசனை மிக்க எண்ணெய் வகைகளை பயன்படுத்த மாட்டார்கள். ஏனெனில் இதில் வரும் வாசனை அசைவ உணவுகளின் நறுமணத்தை தடுத்துவிடும். 

எனவே  இந்த வாசனை வேண்டியவர்கள் மட்டும் கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையெனில் வாசனை இல்லாத ஒரு சமையல் எண்ணெயை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இப்பொழுது இறால் முழுவதுமாக வேகக்கூடாது. ஓரளவுக்கு நிறம் மாறியவுடன் இறக்கி விட வேண்டும். அதாவது பாதி அளவு மட்டுமே  வெந்து இருக்க வேண்டும். முழுவதுமாக வெந்து இருக்க கூடாது. அப்படி இருந்தால் அது ரப்பர் போன்று ஆகிவிடும்.

 இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் வரவேண்டும் என்பதற்காக ஈரப்பதம் நீங்குவதற்காக பொரித்துக் கொள்கிறோம். உடனுக்குடனே பயன்படுத்துவது என்றால் பொரித்துக் கொள்ள தேவையில்லை. 

பின்பு  அதே எண்ணெயில் அரைத்த இஞ்சியையும் தட்டிய பூண்டையும் வதக்க வேண்டும். அதன் பச்சை வாடை போகும் அளவிற்கு வதங்கியவுடன் அதன் பின் அரைத்த தக்காளியை அதில் இட்டு பின்பு வதக்க வேண்டும். எண்ணெய்  தனியாக பிரிந்து வரும் அளவிற்கு தக்காளி வதக்க வேண்டும்.

 வதங்கிய பின்பு மல்லி, சீரகம், கடுகு, மிளகு மற்றும் வெந்தயம் பொடியை அதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து   எண்ணெயில் நன்கு கிளற  வேண்டும். காஷ்மீர் மிளகாய் தூள் சேர்க்கும் பொழுது தொக்கு நன்கு நிறமாக வரும்.  எனவே மிளகாய் மற்றும்  காஷ்மீர் மிளகாய் ஆகியவற்றை அளவு பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல நிறம் வேண்டியவர்கள் காஷ்மீர் மிளகாய் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். கல் உப்பு சேர்த்துக் கொண்டால் சுவை நன்றாக இருக்கும். இப்பொழுது ஒரு பழ எலுமிச்சை சாறு கொட்டை இல்லாமல் அதில்   சேர்க்க வேண்டும். (எலுமிச்சைச் சாறுக்குப் பதிலாக  எலுமிச்சை பழ அளவு புளியை கெட்டியாக கரைத்து ஊற்றினாலும் நன்றாக இருக்கும். எலுமிச்சைச்சாறு அல்லது புளி இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.)  

எண்ணெய்யும் மசாலாவும் தனியே பிரிந்து வருமாறு வதக்கிய பின்பு இப்பொழுது இறாலை சேர்த்து கிளறி  ஏழு நிமிடங்கள் வேக வேண்டும். இறாலை பொரிக்கும் பொழுது அதில் உப்பு சேர்த்து இருப்பதால் இப்பொழுது உப்பு பார்த்துவிட்டு பின்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இறால் மசாலில் நன்கு ஊறி எண்ணெய்  தனியாக பிரிந்து மசாலாவுடன் இறால் சேர்ந்து சுருண்டு வரும்.

இரண்டு  நிமிடங்களுக்கு  அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.  இப்பொழுது குமிழ் குமிழாக மசாலா வெடிப்பது போன்று தோன்றும். அது தக்காளி அரைத்து ஊற்றி இருப்பதால் அப்படி இருக்கும். மிதமான சூட்டில் இரண்டு மூன்று நிமிடங்கள் அதாவது எண்ணெய்  தனியாக பிரிந்து வரும் வரை வைத்த பின்பு அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான இறால் தொக்கு ரெடி.


 இது மிகவும் சுவையாக இருக்கும். தேவைப்படும்போதும் செய்து கொள்ளலாம். இல்லை என்றால் மொத்தமாகவும் செய்து வைத்து உபயோகப்படுத்தலாம்.

 நீண்ட நாட்களுக்கு உபயோகப்படுத்துவதாக இருந்தால் எலுமிச்சை பழத்திற்கு பதிலாக புளியை சேர்த்துக் கொள்ளலாம். இறால் வாயு பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால்  நாம் அதிக அளவு சேர்க்கும் பூண்டும் இஞ்சியும்  அதைத் தடுக்கிறது. 

பூண்டு இன்னும் அதிகப்படுத்தினால் சுவை இன்னும் நன்றாகவே இருக்கும். இது அசைவ பிரியர்களுக்கு நல்ல விருந்து. இந்த இறால் தொக்கு சோறு, சப்பாத்தி, இட்லி, தோசை என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்

நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த விரும்புவர்கள் அதை அடிக்கடி வெயிலில் வைத்து எடுத்தால் சுவையுடனும் கெடாமலும் அப்படியே இருக்கும். இதை அப்படியே கண்ணாடி பாட்டிலில் காற்று போகாதவாறு மூடி வைக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியிலும் வைத்து பதப்படுத்தலாம். கண்ணாடி பாட்டிலில் இதை வைக்கும் பொழுது அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பாத்திரங்கள் அலுமினிய பாத்திரங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும்.

இது போன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

தனிமையில் இருந்தால் ... இதை படியுங்கள்..

பொதுவாக தனிமை என்றால் தனிமைப்படுத்துதல் அல்லது தனியாக இருப்பது மட்டுமல்ல.


என்னதான் ஒரு நெருக்கமான சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் உங்கள் மனது வேண்டியவரையோ வேண்டிய பொருட்களையோ நாட தான் செய்யும். எங்கிருந்தாலும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உங்கள் மனது எந்தவித குறுக்கீடும் இல்லாமல் தனக்கு தேவையானதை நினைத்துக் கொள்கிறது. தனக்கு தேவையானதை அடையவும் முற்படுகிறது. அதனால்தான் மனது ஒரு குரங்கு போல என்பார்கள். நம் மனதால் ஒரு நேரத்தில் ஒரு எண்ணத்தை மட்டும் நினைத்துக் கொண்டு இருக்கவே முடியாது அதை போல் ஏதாவது ஒரு விஷயத்தில் திருப்தி  அடையவும் முடியாது. எப்பொழுதும்  குரங்கு போல தாவித்தாவி பாய்ந்து கொண்டே இருக்கும்.
 
உங்களைப் பற்றி நீங்களே இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால் தனிமையை நாடுங்கள். தனிமையில் நிறைய சிந்தியுங்கள் உங்களால் உங்களைப் பற்றி தெரியாத சில விஷயங்கள் கூட தனிமை உங்களுக்கு காட்டி கொடுத்து விடும்.  தனிமையில் சிந்திப்பது என்பது நீங்கள் உங்களிடமே பேசுவது போன்றது.

நீங்கள் தனியாக இருப்பதாக உணர்கிறீர்களா.. உங்களை தனிமைப்படுத்தப்பட்டதாக நினைக்கிறீர்களா... அல்லது நீங்கள் தனிமை விரும்பி என உங்களை வகைப்படுத்துகிறீர்களா... 

கவனியுங்கள் ....  உங்களை உங்களால் மட்டுமே தனிமைப்படுத்த முடியுமே தவிர வேறு யாராலும் அதை பண்ண முடியாது. கோபம், மகிழ்ச்சி, கவலை, துக்கம் இது போன்று தனிமையும் ஒரு உணர்வே.

 அதை யாராலும் யாருக்கும் கொடுக்க முடியாது. உங்களிடம் இருந்து உங்கள் தனிமையை எடுக்கவும் முடியாது. நெரிசலான கூட்டமான இடங்களில் இருக்கும் பொழுதும் கூட உங்களை நீங்கள் தனிமையாக உணர முடியும். தனியாக யாரும் இல்லாத அரவமற்ற இடத்தில் இருந்தாலும் உங்களை தனிமை இல்லாத பிசியான ஒருவராக உணர முடியும்.

 தனிமை உணர்வு எப்பொழுது வருகிறதென்றால் உங்களை நீங்கள் உணர முடியாத நிலையில்,  உங்களை நீங்கள் சோம்பேறியாக வைத்திருக்கும் பொழுது நீங்கள் அடுத்தவரின் கட்டளைக்கு இயங்கும் பொழுது, நீங்கள் அடுத்தவரின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முயன்று அது முடியாத பொழுது உங்கள் தனிமையை நீங்கள் உணர்கிறீர்கள். ஆக உங்களின் ஒரு வகை உள்ளுணர்வே உங்களின் தனிமையை தீர்மானிக்கிறது.

உங்களை மற்றவர்களால் தனிமைப்படுத்த இயலாது ஆயினும் நீங்கள் மற்றவர்களால் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறீர்கள் என்றால் அவர்களின் தனியுரிமையில் அதாவது பிரவேசியை நீங்கள் பாதிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

 அதாவது நீங்கள் அடுத்தவர்களின் தனிமையை பாதிக்காத வரை உங்களுடைய தனிமை பாதிப்பிற்கு உள்ளாகாது.

 உதாரணமாக உங்களுக்கு காய்ச்சல் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்களை யாராவது விசாரிக்க வேண்டும் அல்லது மாத்திரை மருந்து கொடுக்க யாராவது இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். ஆனால் யாரும் இல்லை  எனில்  அந்த இடத்தில் நீங்கள் தனிமையை உணர்வீர்கள். அதுபோல உங்களுக்கு  வேண்டியவர் அல்லது யாரிடமிருந்து உரிமையை விரும்புகிறீர்களோ அவர் உங்களிடம் சொல்லாமல் ஏதாவது செய்து விட்டால் அங்கு நீங்கள் உங்கள் தனிமையை  உணர்வீர்கள்.

 இந்த இரண்டு உதாரணங்களிலும் ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள் முதல் உதாரணத்தில் தனிமையை நீங்கள் உருவாக்கிக் கொள்வது. இரண்டாவது உதாரணத்தில் தனிமையை நீங்கள் எடுத்துக் கொண்டது. ஆக உங்களை தனிமைப்படுத்துதல் என்பது உங்களால் மட்டுமே முடியும். அதை  வேறு யாராலும் உங்களுக்கு கொடுக்க முடியாது. 

அதுபோல தனிமை என்று உணர்வை சந்தோஷமானதாகவோ வருத்தமானதாகவோ எடுத்துக் கொள்ளவும் உங்களால் மட்டுமே முடியும்.

 இங்கு தனித்திருப்பது என்பது நீங்கள் செய்வது. தனிமைப்படுத்தப்படுவது என்பது உங்களை மற்றவர்கள் செய்வதாக நீங்களே நினைத்துக் கொள்வது.. 

 இளமையில்  தனிமையே நாடுவர்.  முதுமையில் வரும் தனிமை மிகவும் கொடுமையானது. வயதான காலத்தில் கேட்பாரற்று நகரும் நாட்களில் வரும் தனிமை  நோயை விட கொடுமையானது. அதே நேரத்தில் இளமையில் நம்மை சுற்றி நிறைய பேர் இருந்தாலும் சில சமயம் மனம் தனிமையை நாடும். அந்த தனிமை இனிமையானது...

நீங்கள் கவலையில் இருக்கிறீர்களா.. தனிமையை நாடுங்கள்... சிந்தியுங்கள் அதிலிருந்து வெளிவருவது எப்படி என்று நீங்களே உங்களுக்கு சொல்லித் தருவீர்கள்...

 மகிழ்ச்சியில் இருக்கிறீர்களா அப்பொழுதும் தனிமையை நாடுங்கள் மகிழ்ச்சியில் சில நேரம் தவறுதலான முடிவுகளை எடுக்க நேரிடும்..

நீங்கள் எவ்வளவு தெளிவாக இருந்தாலும் எவ்வளவு உறுதியாக ஒரு முடிவை எடுத்தாலும் உங்களுக்கு  சரியான முறையில் வழிநடத்துதல் கிடைத்தாலும் சரி...    எதையும் தீர்மானிக்கும் முன்பு சற்று நேரம் தனிமையை நாடுங்கள்... தனிமையை விட சிறந்த தோழன் எதுவும் இல்லை...

இனிமையானதும் கொடுமையானதும் இரண்டற கலந்த  ஒரு உணர்வு தனிமை...

இந்தப் பூவுலகில் யாரும் யாரையும் தனிமைப்படுத்த இயலாது. அதேபோல யாருக்கும் யாரும் துணையாகவும் இருக்க முடியாது. எல்லாம் நமது உள்ளுணர்வின் வெளிப்பாடு.... தனிமையாக இருக்கும் பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா.. கோபமாக இருக்கிறீர்களா.. வருத்தத்துடன் இருக்கிறீர்களா.. இதில் எது நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுது வெளிப்படுகிறதோ அதுவே உங்கள் குணம். உங்களது உண்மையான குணம் தனிமையில் இருக்கும் பொழுது மட்டுமே வெளிப்படுகிறது.

 நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால் சாதாரணமாகவே நீங்கள் ஒரு மகிழ்ச்சியான நபர். உங்களது மகிழ்ச்சியை யாராலும் கொடுக்கவும் முடியாது.. மாற்றவும் முடியாது.. தனிமை என்பது வேறு ஒன்றும் அல்ல உங்களின் பிம்பமே...

 இது போன்ற பதிவுகளில் தனிமையாக இணைந்திருப்போம். தொடர்ந்து பயணியுங்கள் எங்கள் பக்கத்தில்.. மேலும் சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்...
Share:

பாலூட்டும் இளம் தாய்மார்கள் மறந்தும் இத பண்ணிடாதீங்க...

உங்கள் குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குள் தான் இருக்கிறது என்றால் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது. 

பொதுவாக பெண்கள் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளும் பராமரிப்பு முறைகளை  கர்ப்ப காலத்திற்குப் பின்பு அதை கைவிட்டு விடுகின்றனர். கர்ப்ப காலத்திற்கு பின்பும் குழந்தைக்கும் தாய்க்கும் அதிக கவனிப்பு மிகவும் அவசியம். 

முதலில் குழந்தை பிறந்த 30 நாட்கள் வரை தாய் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு காரம் புளிப்பு பாதி அளவே இருக்க வேண்டும். 30 நாட்கள் கழித்த பின்பு சாதாரண உணவு வகைகளை எடுத்துக் கொள்ள தொடங்க வேண்டும்.  ஏனெனில் இவைகள் குழந்தையின் செரிமானத்தை பாதிக்கலாம். எனவே எளிய உணவு வகைகளை மிகக் குறைந்த அளவில் உப்பு காரம் புளிப்பு சேர்த்து உண்ண வேண்டும். 30 நாட்கள் கழித்து சிறிது சிறிதாக அதிகரித்து சாதாரண உணவுகளை பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குள் இருக்கும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் உணவுதான் குழந்தைக்கும் அந்த தாய்க்கும் நெடுங்காலத்திற்குரிய ஊட்டச்சத்தை அளிக்கின்றன. அந்த வகையில் சில விஷயங்கள் செய்யும் போது நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். 


பச்சிளம் குழந்தையை பராமரித்தல் நம் முன்னோர்கள்  ஒரு கலையாக செய்து வந்தனர். வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பொழுது குழந்தையை குளிக்க வைப்பதில் இருந்து மொத்த பராமரிப்பும் அவர்களுடைய பொறுப்பில் இருந்து விட்டது.

 ஆனால்  தற்போதைய காலங்களில்  குடும்பங்கள் மிகவும் குறுகிய நிலையில் உள்ளன. பெரும்பாலும் வேலைக்கு செல்லும் குடும்பத்தார்களுக்கு இது போன்ற விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


இதுவும் நோய் பரப்புவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.


பச்சிளம் குழந்தை வைத்திருப்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்  இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 

 மாலை நேரங்களில் சூரியன் மறைந்த பின்பு ஏற்பட்டிருக்கும் இருள் குழந்தைகளுக்கு ஒத்து வர நீண்ட நாட்கள் எடுக்கும். எனவே குறைந்தது மூன்று மாதங்கள் வரை குழந்தைகளை மாலை நேரங்களில் வெளியே கொண்டு செல்வது கூடாது. அதேபோல் குழந்தைகளை இருளில் வைத்திருக்கவும் கூடாது.

 பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது ஈரத் தலையுடன் பால் கொடுக்க கூடாது இது குழந்தைகளுக்கு எளிதில் சளி பிடிக்க நேரிடலாம்.

பொதுவாக குழந்தைகளுக்கு தங்களுக்கு ஏற்படும் உபாதைகளை வெளியில் சொல்ல இயலாமல் அழுது கொண்டே இருப்பர். அல்லது அவர்களின் நடவடிக்கைகளில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படலாம். எனவே பெரியவர்கள் அல்லது தாய் மட்டுமே அதை உணர்ந்து அவர்களுக்கு பிரச்சினையை சரி செய்ய இயலும். எனவே எப்பொழுதும் குழந்தையின் நடவடிக்கைகளில் அதிகம் கவனம் தேவை


 தாய்மார்கள் மிகவும் குளிர்ந்த வகை உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. சில வகைப் பொருள்களினால் குழந்தைகளுக்கு மாந்தம் எனப்படும் வயிற்று பேதி உருவாகும் எனவே அதை தாய்மார்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.  அதில் முக்கியமான ஒன்று மாம்பழம். ஆனால் இது போன்ற உணவுகளை சிறிது சிறிதாக சேர்த்து குழந்தைக்கு பழக்கப்படுத்த வேண்டும். இல்லையெனில் மொத்தமாக குழந்தைக்கு சேராமல் போய்விடும். 

குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது குழந்தையை பொதுவாக மடியில் வைத்திருப்போம். அப்பொழுது தலையை சொரிய கூடாது. தலையை சொரியும்போது தலையில் இருந்து பொடுகு அல்லது பேன் குழந்தைக்கு எளிதில் பரவக்கூடும்.

 பொதுவாக குழந்தை மடியில் அல்லது அருகில் வைத்து இருக்கும் பொழுது  நாம தலையில் கையை வைக்கவே கூடாது. பெரும்பாலான நோய் தொற்று தலைவலியாகவே குழந்தைகளுக்கு பரவுகின்றன மேலும்  சிறு முடி கூட குழந்தைக்கு நோய் தொற்றை ஏற்படுத்தலாம்.

குழந்தையை குளிக்க வைக்கும் பொழுது பெரும்பாலான தாய்மார்கள் குழந்தையின் தலையை கீழே வருமாறு உடற்பகுதி அதாவது கால் மேலே வருமாறு தமது காலில் வைத்து குளிப்பாட்டுவர். அது தவறு குழந்தையின் தலை கீழ்நோக்கி இருக்கும்பொழுது குழந்தையின் எடை முழுவதும் கீழ் நோக்கி செல்கிறது. இதனால் குழந்தையின் குடல் ஏறுவதற்கு வாய்ப்பு உளளது. மேலும் குழந்தையின் இந்த  நிலை குழந்தைக்கு அசௌகரியத்தை உண்டு பண்ணும். சில குழந்தைகளுக்கு குமட்டல் வரவும் ஏதுவாகிறது.

நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த நாட்டு மருந்து சிலவற்றை வீட்டில் வைத்திருப்பது நல்லது. ஏனெனில்  காய்ச்சல் வயிற்று வலி போன்ற உபாதைகளுக்கு உடனே மருத்துவரை அணுகாமல் சில விஷயங்களை வீட்டிலே செய்து பார்த்துவிட்டு பலனளிக்காவிட்டால் மருத்துவரை நாடுவது நலம். 

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு நிற்காமல் போகிறது என்றால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் பெரும்பாலான குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படும் பொழுது அவர்களின் நீர்ச்சத்து முழுவதுமாக குறைந்து  உயிரிழப்பு நேரிட  வாய்ப்ப அதிகம்.

பாலூட்டும் தாய்மார்கள்  தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். ஏனெனில் பாலூட்டுவதால் ஒட்டுமொத்த நீர் சத்தும் உடலில் குறைந்து விடும். உடலில் நீர்ச்சத்து குறைவதால் உடல் வெப்பம் அதிகரிப்பு, மலச்சிக்கல்,  மூலம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.

 பெரும்பாலும் தாய்மார்கள் மூலநோயால் பாதிக்கப்படுவதற்கு பாலூட்டும் காலங்களில் சரிவர நீர் அருந்தாததே காரணம். சராசரியாக குடிப்பதை விட இரு மடங்கு நீர் அதிகமாக அருந்த வேண்டும். பழச்சாறு, சூப் போன்ற பானங்களை அதிகமாக பருக வேண்டும்.

 நல்ல சத்துள்ள பொருட்களை உண்ணுவதுடன் நார்ச்சத்துள்ள பொருட்களை உண்பது குழந்தைகளுக்கு மலம் கழிப்பது  போன்றவற்றில் சிக்கலை உண்டு பண்ணாமல் தவிர்க்கும்.

 குழந்தைகள் காரணம் இல்லாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பது
தொடர்ந்து தூங்குவது என இரண்டுமே ஏதாவது ஒரு பாதிப்பின் அறிகுறி.

 குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தால் வயிற்று வலி அல்லது காது வலி போன்ற ஏதாவது ஒன்று காரணமாக இருக்கலாம். எனவே குழந்தைகள் மருத்துவரை உடனடியாக அணுகுவது சிறந்தது.

குழந்தைகளை குளிப்பாட்டும் பொழுது மிகவும் கவனமாக குளிப்பாட்ட வேண்டும். எடுத்துக்காட்டாக குழந்தை தண்ணீர் குடிக்காமல் அதே சமயம் காதில் தண்ணீர் செல்லாமல் குளிக்க வைக்க வேண்டும்.

 தண்ணீரில் நிறைய நேரம் வைத்திருக்கக் கூடாது. வேக வேகமாக குளிக்க வைத்து துடைத்து விட வேண்டும். தலையில் நீர் அதிக நேரம் இருக்கக் கூடாத.  தலையில் நீர் சென்று விடக்கூடாது என்பதற்காக உச்சியில் விபூதி வைப்பர். இது  குழந்தையின் தலையில் பொடுகை உருவாக்கி புண்கள் வரச் செய்து விடும். இதற்கு பதிலாக பால் சாம்பிராணி வாங்கி குழந்தைகள் முடியை காய வைக்கலாம். குழந்தைக்கு அதிகபட்சமாக ஒரு வருடத்திற்குள் மொட்டை எடுக்க வேண்டும். ஏனெனில் வயிற்றிலிருந்து உருவான பொழுது இருந்த முடி தலையில் அதிக நாட்களுக்கு வைத்திருக்கும் பொழுது குழந்தைகளுக்கு நோயை உண்டு பண்ண கூடும்.  அதிக முடி இருப்பது அதிக வியர்வைக்கு காரணமாகிறது. அதிக வியர்வை குழந்தைக்கு சளி பிடிக்க முக்கிய காரணம்.

அதுபோல குழந்தைகளுக்கு அடிக்கடி ஏதாவது ஒரு நோய் திரும்பத் திரும்ப உடல்  நல குறைபாடு ஏற்பட்டு கொண்டே இருந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதாக எடுத்துக் கொள்ளலாம். எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 இருந்தால் குழந்தையின் உயிருக்கு சக்தி குறைவாக உள்ளதாக
ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. மருத்துவர் அனுமதி இல்லாமல் எந்தவித மருந்தையும் குழந்தைகளுக்கு அளிக்கக்கூடாது. வீட்டு வைத்தியம் கை வைத்தியம் போன்றவை தேவை இல்லாமல் குழந்தைகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால் ஒழிய எதையும் கொடுக்கக் கூடாது.

குழந்தைகளுக்கு அதிக நேரம் டயாபர் அணிவித்தல் கூடாது. அது குழந்தைகளுக்கு எரிச்சல், தோல் சிவத்தல் மற்றும் தோல் காயம் போன்றவை ஏற்படக் கூடும். டயபர் குழந்தைகளுக்கு அசௌகரியமான ஒன்று.

 முடிந்த அளவு சிரமம் பார்க்காமல் காட்டன் நாப்கின்கள் அல்லது துணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  மலம் சிறுநீர் கழிக்கும் பொழுது துணிகளை  உடனுக்குடன் மாற்ற வேண்டும். எப்பொழுதும் ஈரத்துடன் குழந்தைகளை வைக்கக்கூடாது அவர்கள் மேனி எப்போதும் உலர்ந்ததாக இருக்க வேண்டும்.

 கோடை காலங்களில் குழந்தைகளுக்கு பருத்தியிலான நூலாடைகள் வாங்கி அணிவிப்பது சிறந்தது. குழந்தையிடம் காணப்படும் மாறுபாடுகளை உடனுக்குடனே கவனித்து சரி செய்வதே குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான ஒன்றாகும்.

தாயும் சேயும் நலமாக இருக்க நம் முன்னோர்கள் மற்றும்  மருத்துவர்கள் கூறுவதை மட்டும் தொடர வேண்டும். நாமாக எதையும் செய்யாமல் ஆரோக்கியத்துடன் குழந்தையை வளர்ப்போம்.

 இதுபோன்ற பதிவுகளுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

பிறந்த குழந்தைக்கு வயிற்றுப் போக்கா... உடனே நிறுத்தும் வீட்டு வைத்தியம்...

புதிதாக பிறந்த குழந்தைகளை பூவை காட்டிலும் மிகப் பக்குவமாக கையாள வேண்டும்.  சிறிது சுத்தம் இல்லாவிட்டாலும்  குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவர். பிறந்த குழந்தைகளை கையாளுபவர்கள் மிகுந்த சுத்தமாகவும் சுற்றி இருக்கும் இடம் வீடு அனைத்தையும் சுத்தமாக பேணி காக்க வேண்டும். பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் வீடு சுத்தமாக இருப்பதுடன் வீட்டைச் சுற்றி கொசு தேங்குவது, சாக்கடை நீர் இருப்பது மற்றும்  குப்பைகள் கொட்டுவது போன்றவற்றை சுத்தமாக தவிர்க்க வேண்டும் . அதுபோல  புதிதாக பிறக்கும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகுந்த சுத்தத்தையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும். கண்டிப்பாக கொசு தேங்குதல் கூடாது. சிறிய  கவனமின்மை கூட பெரிய பிரச்சினைகளை உருவாக்கும்.

 குழந்தைகளை  தூக்கும் பொழுது கைகளை சுத்தமாக வைத்திருப்பது உறுதி செய்ய வேண்டும். வெளி ஆட்கள் குழந்தைகள் தூக்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தூக்கும் பட்சத்தில் சுத்தமாக கையாள வேண்டும். குழந்தைகளின் ஆடைகள் தூய்மையாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை அவர்கள் துணிகளை தனியாக துவைக்க வேண்டும்.  சுடுதண்ணியில் துவைத்து டெட்டாலில் ஊற வைத்து நல்ல வெயிலில்  காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும். அவர்கள் மலம் சிறுநீர் கழிக்கும் ஆடைகளை தனியாக துவைத்து வெயிலின் காய வைக்க வேண்டும்.

பொதுவாக பிறந்த குழந்தைகள் முதல் ஆறு மாத குழந்தைகள் வரை மலம் கழிப்பதற்கு நேரம் காலம் கிடையாது. புதிதாகப் பிறந்த குழந்தை அதாவது பிறந்த இரண்டு மூன்று நாட்கள் வரை குழந்தைகள் கருப்பு அல்லது அடர் நிறத்தில் மலம் கழிப்பர். சில குழந்தைகள் அடிக்கடி மலம் கழிப்பர்.  சில குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு தடவை அல்லது இரு நாட்களுக்கு  ஒரு தடவை என்ற வகையிலே மலம் கழிப்பர். தாய்ப்பால் அருந்துவதால் இது நடக்கலாம்.

குழந்தைகளுக்கு பெரும்பாலும் மலச்சிக்கல் மற்றும்  வயிற்றுப்போக்கு போன்ற  உபாதைகள்  அதிகமாக புட்டிப் பால் கொடுப்பதால் ஏற்படலாம். குழந்தைகள் குறைந்தது இரண்டு முதல்  ஏழு முறை வரை மலம் கழிக்கின்றனர். இது இயல்பு. மூன்று மாதங்களுக்குப் பின்பு அவர்கள் மலம் கழிப்பதை சாதாரண நிலைக்கு அதாவது சுழற்சி நிலைக்கு கொண்டு வர வேண்டும்.  ஒரே நேரத்தில் தினமும் மலம் கழிக்கும் பயிற்சியை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும்.  குறைந்தது இது ஆறு மாதங்களுக்கு மேல் தான்  சாத்தியமாகும். 

 அதே சமயம் வேறு நிறங்களில் அதாவது பச்சை, சிவப்பு மற்றும்  கருப்பு நிறங்களில் மலம் கழித்தால் குழந்தைக்கு பேதி அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கக்கூடும். அதுவும் அதிக முறை  அதாவது ஐந்துக்கு மேற்பட்ட முறை மலம் கழிக்கும் போது அது குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டு பண்ணும். தொடர்ந்து மலம் கழித்தல் அடிக்கடி வயிற்றுப்போக்கு இவைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் போது குழந்தையின் எடை குறைய தொடங்கி வளர்ச்சி அதிகமாக பாதிக்கப்படும் குழந்தைக்கு ஊட்டச்சத்தில் ஜிம் குறைபாடு அதிகமாக இருக்கும் பொழுது குழந்தைகள் வயிற்று போக்கால் பாதிக்கப்படுகின்றனர் பெரும்பாலும் தாய் எடுத்துக் கொள்ளும் மனதில் குறைபாடு அல்லது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் உணவுகள் போன்ற விட்டால் தான் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர் இதனால் குழந்தைகள் மிகவும் சோர்வு நிலையை அடைந்து விடுவார்

 இதுபோன்ற பிரச்சனைகள் வரும் பொழுது நாம் வீட்டு பெரியவர்கள் உடனே மருத்துவரை அணுகாமல் வீட்டு வைத்தியங்கள் மூலமே சரி செய்கின்றனர். குழந்தை சுத்தமாக பேணி காத்து வரும்போது இது போன்ற பிரச்சனைகள்  தவிர்க்கப்பட்டாலும் பாலூட்டும் தாய் எவ்வித உணவை எடுத்துக் கொள்கிறார்களோ அதை பொறுத்துதான் குழந்தை மலம் கழிக்கிறது. 

சில உணவுப் பொருட்கள் சேராமல் போனால் குழந்தைக்கு மாந்தம் ஏற்படும். இது ஏற்படும் போது குழந்தை பச்சையாக தொடர்ந்து மலம் கழிக்கும். இவ்வாறு கழிப்பதனால் குழந்தை ஆரோக்கியம் தடைபடுகிறது. பிறந்த குழந்தைகள் அதிகமாக மலம் கழிக்கும் பொழுது அவர்களுக்கு சேர வேண்டிய சத்தானது உடலில் சேராமல் அவர்களின் வளர்ச்சி முழுவதுமாக தடைப்பட்டு விடும்

இது வளர்ச்சியையும் தடுத்து விடும். எனவே இதை உடனே சரி செய்வது நல்லது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஒரு எளிய வீட்டு வைத்தியம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 


அதாவது குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு மாந்தம் போன்றவைகள் ஏற்படும் போது முடிந்தவரை வீட்டு வைத்திய முறை மூலம் சரி பண்ணுதல் சிறந்தது.  அது போன்று அடிக்கடி மலம் கழித்தல் அல்லது ஐந்து முறைக்கு மேல் மலம் கழித்தல், மலம் தண்ணியாக போவது, மலம் பச்சை நிறத்தில் போவது அல்லது மலத்துடன் சளியும் சேர்ந்து போவது போன்ற  அறிகுறிகள் இருக்கும். குழந்தைகளுக்கு  இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு மிகவும் உதவியாக இருக்கும்.

வயிற்றுப்போக்குக்கான கை வைத்தியம்:
 
காசிக்கட்டி என்றால் என்ன?

காசிக்கட்டி என்பது அகாசியா கேடெச்சு தாவரத்தில் இருந்து பெறப்படும் சாறு அல்லது பிசின் போன்ற வகையாகும். இந்தத் தாவரம் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வகையாகும்... இது ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு பொருளாக இருக்கிறது. பொதுவாக வயிறு சார்ந்த பிரச்சனைகள் புண்கள் மற்றும்  தோல் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில்  முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது. வயிற்று மற்றும் குடல் புழுக்களுக்கு காசு கட்டி ஒரு நல்ல மருந்தாக பார்க்கப்படுகிறது காசு கட்டி அந்த புழுக்களை அளித்து வயிற்றுப் பகுதியை பாதுகாக்கிறது. காசிக்கட்டி வயிற்றுப்போக்குக்கு மட்டும் அல்லாமல் இரத்தபேதி மற்றும்  சீதபேதி போன்றவற்றிற்கும் நல்ல தீர்வு கொடுக்கிறது.  தேனுடன் காசு கட்டி பொடி  சேர்த்து உண்ணும் பொழுது இரத்தபேதி சீதபேதி நின்றுவிடும். காசி கட்டிக்கு வயிற்றுப் புண் குடல் புண் ஆற்றும் பண்புகளும் உள்ளன.


ஆயுர்வேதத்தில் காசு கட்டிக்கொண்டு செய்யப்படும் மருந்து புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு நல்ல மருந்தாக உபயோகிக்கப்படுகிறது

காசிக்கட்டி எனப்படும் பொருள் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். அதை வாங்கி குழந்தைகள் இருக்கும் வீட்டில் வைத்துக் கொள்வது சிறந்தது. காசி கட்டியை மிகவும் கவனமாக உபயோகப்படுத்தவும். இது பிறந்த குழந்தைகளுக்கு சிறு மிளகு அளவு எடுத்துக் கொண்டாலே போதும். இது கருப்பு கலரில் கடைகளில் கிடைக்கும். காசி கட்டி பற்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாகும்.. காசி கட்டியை கொண்டு செய்யப்படும் பொடி பல் வலியிலிருந்து  நிவாரணம் அளிக்கிறது.

மிளகு அளவு காசிக்கட்டியை எடுத்து தாய்ப்பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து அதை கரைத்து குழந்தைக்கு புகட்ட வேண்டும்.  ஒரு நாளைக்கு இருமுறை கொடுத்து வந்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். 

 இதுபோல மூன்று மாதம் முதல் ஆறு மாதம் காசி கட்டியின் அளவை சற்று அதிகரிக்க வேண்டும். மூன்று மாத குழந்தை என்றால் இரண்டு மிளகு அளவு எடுத்துக் கொண்டால் போதும் உள்ளது. ஆறு மாத குழந்தைகளுக்கு மூன்று மிளகு அளவுக்கு எடுத்து தாய்ப்பாலில் கரைத்து புகட்ட வேண்டும். ஒரு வருட குழந்தைகளுக்கு நான்கு மிளகு அளவு வரை காசு கட்டியை எடுத்து தாய்ப்பாலில் கரைத்து கொடுக்கலாம். தாய்ப்பால் புகட்ட இயலாதவர்கள் காசி கட்டியை சுடு தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அதன் பின்பு கரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

 அதிகபட்சமாக இரண்டு நாட்களுக்கு இதைத் தொடரலாம். அதற்கு மேல் வயிற்றுப்போக்கு நிற்காவிட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது. சாதாரணமான  வயிற்று வலி இல்லாத வயிற்றுப்போக்கு அல்லது அதிக முறை மலம் கழிக்கும் குழந்தைகளுக்கு காசிக்கட்டி சிறந்த மருந்து. 

இதுபோன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும்..  சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்ய வேண்டும்
Share:

இவ்ளோ ஈஸியா வெண்டைக்காயை சமைக்கலாமா....

பொதுவாக காய்கறிகள் என்றாலே அதிக சத்துக்கள் உடையது என்றாலும் அதில் வெண்டைக்காய்க்கு என்று தனி ஒரு இடம் உண்டு. வெண்டைக்காய் எல்லா நேரத்திலும் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு எளிய வகை காய். இந்தியாவில் வெண்டைக்காய் பரவலாக அனைத்து மக்களாலும் விரும்பி உண்ணப்படும் காய் வகைகளில் ஒன்று.  இந்த காயில் பொறியல், குழம்பு, கூட்டு என பலவிதமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. வெண்டைக்காயில் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, போலிக் அமிலம்,  இரும்பு, மெக்னீசியம் மற்றும் சுண்ணாம்பு சத்து என அனைத்து விதமான சத்துக்களும் போதிய அளவில் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் ஒரு வரப்பிரசாதம். ஏனெனில் வெண்டைக்காயை தொடர்ந்து உட்கொள்ளும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை  குறைக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  வெண்டைக்காய் ஒரு குளிர்ச்சி மிக்க காய் என்பதால் உடல் உஷ்ணம் உடையவர்கள் இந்த காயை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். வயிற்றுப்புண் பதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டைக்காய் நல்ல பலனை தரும்.

வெண்டைக்காய் மூளை செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுபவர்களுக்கு மூளையின் செயல் திறன் அதிகமாக இருக்கும். மூளையின் செயல்திறன் அதிகமாக இருப்பதால் வெண்டைக்காய் சாப்பிடுபவர்கள் நல்ல புத்தி கூர்மையுடன் செயல்படுவர். எனவேதான் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் வெண்டைக்காய் பரிந்துரைக்கப்படுகிறது.
 அதிலும் கணக்கு வரவேண்டும் என்றால் வெண்டைக்காய் சாப்பிடும் பழக்கம் நம்மிடையே அதிகமாக உள்ளது. மறதி அதிகமாக உள்ளவர்கள் வெண்டைக்காயை அதிகமாக உண்பதன் மூலம் வராமல் தடுக்கலாம். ஏனெனில் மூளையில் உள்ள நரம்புகளின் இயக்கம் தூண்டப்பட்டு மறதிக்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது. வெண்டைக்காயில் உள்ள போலிக் அமிலம் மூளை வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது.

 வெண்டைக்காயில் சத்துக்கள் ஏராளம். அதற்கேற்றால் போல் அதன் ருசியும் அற்புதமாக இருக்கும். ஆனால் வெண்டைக்காயை சமைப்பது ஒரு பக்குவம். இல்லை என்றால் அதிலிருக்கும் குழகுழப்புத் தன்மை வெண்டைக்காயை சாப்பிட விடாமல் செய்துவிடும். தொண்டை சளி பிரச்சனைகளுக்கு வெண்டைக்காயின் சூப் நல்ல  தீர்வாகும்.


வெண்டைக்காய் செல்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கிறது. எனவே வெண்டைக்காய் சாப்பிடும் பொழுது தீய செல்கள் அளிக்கப்பட்டு புதிய  செல்கள் உருவாக காரணமாகிறது.
வெண்டைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டும் அல்லாமல் ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தத்தையும் குறைத்து உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. உடல் எடையை சரியான அளவில் வைத்திருக்க நினைப்பவர்கள் வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது. அதிக சத்துக்கள் உள்ள வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வரும் போது நிறைய பலன்கள் கிடைக்கும் என்றாலும் இந்த குளிர்ச்சி வகை காய்கறியை தினமும் சாப்பிடும் போது சிலருக்கு சளி தொந்தரவு ஏற்படலாம். எனவே சிறிதளவு கவனமும் தேவை.


வெண்டைக்காயில் உள்ள குழகுழப்புத் தன்மை காரணமாக சிலருக்கு வெண்டைக்காய் என்றாலே பிடிக்காது. வெண்டைக்காய் ஒரு குளிர்ந்த வகை காய்.
வெண்டைக்காயில் உள்ள இரும்பு சத்து குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அதிக உறுதியையும் ஆரோக்கியத்தையும்
கொடுக்கும். வெண்டைக்காயை எளிய முறையில் குழகுழப்புத் தன்மை அல்லாமல் ருசியாக செய்வது எவ்வாறு என்பதை கீழே காணலாம்.

 தேவையான பொருட்கள்:

 வெண்டைக்காய் - அரை கிலோ 
 வெங்காயம் - ஒன்று 
கடுகு - ஒரு டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன் 
தேங்காய் - ஒரு டீஸ்பூன் (துருவியது)
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:

 முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி அதன் ஈரப்பதம் போகும் வரை உயர்த்தி விட்டு பின்ப வேண்டிய அளவில் சிறிது சிறிதாக வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக கழுவிக்கொண்டு சிறிய அளவில் நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் சட்டி சூடானதும் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட வேண்டும் கடுகு  பொரிந்த உடன் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை பொரிந்த உடன்  நறுக்கிய  வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் நறுக்கிய வெண்டைக்காயை  போட வேண்டும்.  தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்

வெண்டைக்காயை சமைக்கும் பொழுது மூடிக்கொண்டு மூடக்கூடாது.

தண்ணீர் தெளிக்க கூடாது.

வெண்டைக்காய் அந்த எண்ணெயிலேயே சுருள வதக்க வேண்டும். சில சமயம் வெண்டைக்காய் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கும் அல்லது சிறிதளவு குழகுழப்பு தன்மை வெளிப்படும். அதற்காக நாம் எதையும் சேர்க்கத் தேவையில்லை. அது எண்ணெயிலேயே வதங்கி வரும். அப்படி கடைசி வரை குழகுழப்பு தன்மை போகவில்லை எனில் சிறிதாக அரிசி மாவு கொஞ்சம் தூவிக்கொள்ளலாம். முடிந்தவரை எண்ணெயிலேயே அது வேகுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஓரளவுக்கு நன்கு வெந்ததும் வெண்டைக்காய் தனித்தனியாக பிரிந்து இருக்கும்.  அப்பொழுது மிளகாய்த்தூளை தூவி கிளறி  அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து மீண்டும் வதக்க வேண்டும். உப்பு அளவு பார்த்துக்கொண்டு தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். நன்கு வெந்தவுடன்  துருவிய தேங்காயை தூவி விட வேண்டும். தேங்காய் தூவி இரண்டு மூன்று நிமிடங்களில் இறக்கி வைக்க வேண்டும். எளிய முறையில் வெண்டைக்காய் பொரியல் ரெடி. சாம்பார் சாதம், தயிர் சாதம் என அனைத்து வகை சாதங்களுக்கும் இது ஏற்ற வகை பொரியல். வெண்டைக்காயை விரும்பி உண்பவர்கள் இந்த பொரியல் செய்து  பார்க்கலாம். வெண்டைக்காயை பிடிக்காதவர்களும் இந்த பொரியலை விரும்பி உண்பர்


 இதில் எந்தவித சத்துக்களும் வீணாவதில்லை. வெண்டைக்காயின் ருசியும் அபாரமாக இருக்கும். வீட்டில் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யவும். வெண்டைக்காயை மறுபடி மறுபடி சூடு செய்து சாப்பிடக்கூடாது. சமைத்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். அதிக செலவில்லாமல் குறைந்த நேரத்தில் சமைத்து முடிக்கக்கூடிய பொரியல் வகைகளில் இதுவும் ஒன்று

மேலும் இது போன்ற தகவல்களை அறிந்திட எங்கள் பக்கத்தை  தொடரவும்.
சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்..


Share:

கருமையான எளிமையான கூந்தலுக்கு வீட்டிலேயே செம்பருத்தி எண்ணெய்...

நமது கூந்தல் கருமையாகவும் நீண்டதாகவும் இருக்க வேண்டும் என்ற  ஆசை அனைத்து பெண்களுக்கும்  உண்டு. ஆனால் அது அனைவருக்கும் அமைவதில்லை. அப்படியே இருந்தாலும் அதை பராமரித்துக் கொள்வது மிக சிரமமாக இருப்பதால் சீக்கிரத்திலேயே கொட்டி விடுகிறது. 

பல வகையான  காரணங்களால் முடி உதிர்தல் அனைத்து பெண்களுக்கும் பொது குறைபாடு என்று  ஆகிவிட்டது. எவ்வளவு மருத்துவ முறைகள் வந்தாலும் இதற்கு நிரந்தர தீர்வு என்று ஒன்றும் இல்லை. 

நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தல், சரிவிகித உணவு உட்கொள்ளுதல், சுத்தமான சுகாதாரமான இடங்களில் வசித்தல் மற்றும்  தலைமுடியை சரியாக பராமரித்தல் இது போன்ற காரணங்களை ஊக்குவிக்கும் போது மட்டுமே நமது தலை முடி அழகாகவும் அடர்த்தியாகவும் பராமரிக்க முடியும்.

 தலைமுடியை பராமரித்தலில் தலைக்கு தேய்க்கப்படும் எண்ணெய்  முக்கியமான ஒன்று. அந்த வகையில் செம்பருத்தி ஆனது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து அளித்து கருமையாகவும் நீண்டதாகவும்  பளபளப்பாகவும் இருப்பதற்கு உதவுகிறது.

 செம்பருத்தி பலமுறைகளில் தலைக்கு உபயோகப்படுத்தினாலும் செம்பருத்தி எண்ணெய்  இன்னும் சற்று அதிக பலனை அளிக்கும். 

செம்பருத்தி எண்ணெயின் பயன்கள்:

செம்பருத்தி எண்ணையை தலையில் தொடர்ந்து தேய்த்து வரும் பொழுது அதை தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்தை அளித்து உறுதியான தலைமுடி வளர்வதற்கு ஏதுவாகிறது மேலும் இது தலையில் உள்ள பொடுகுக்கு ஒரு நல்ல தீர்வாகும் இது தலையில் உள்ள பொடுகை சரி செய்து தலைமுடி உதிர்வதை தடுக்கிறது

தலைக்கு குளிக்கும் பொழுது தலையில் ஷாம்பு போட்டு தண்ணீர் ஊற்றும் பொழுது சில துளிகள் செம்பருத்தி எண்ணெய் சேர்த்துக் கொண்டு தண்ணீர் ஊற்றினால் அது தலை முடிக்கு ஒரு நல்ல போஷாக்கை கொடுக்கும். கண்டிஷனருக்கு பதிலாக இம்முறையை பயன்படுத்தலாம்.

செம்பருத்தி எண்ணெய் முடியின் வேர்க்கால்களில்  ஒரு நல்ல பசையை உருவாக்குகிறது. இதனால் தலைமுடியின் வறட்சி நிலை தடுக்கப்படுகிறது. தலை முடியை எப்பொழுதும் மிருதுவாக வைத்திருக்க இது உதவும்.

வியர்வையினால் ஏற்படும் அலர்ஜி ஒவ்வாமை வறண்ட முடி போன்ற அனைத்து காரணங்களுக்கும் செம்பருத்தி எண்ணெய் ஒரு நல்ல தீர்வாக பார்க்கப்படுகிறது.

மேலும் செம்பருத்தி எண்ணெயில் அலர்ஜி எதிர்ப்பு பொருள் தலையில் உள்ள எரிச்சல் அரிப்பு ஆகியவற்றை நீக்கி பயனளிக்கிறது.

அதிக பலன்கள் தரக்கூடிய இந்த செம்பருத்தி எண்ணெய் எவ்வாறு தயாரிப்பது என்பது கீழே  பதிவிடப்பட்டுள்ளது.  

இந்த எண்ணெயை தயாரித்து நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது உங்கள் தலைமுடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை விரைவிலேயே காணலாம். 


தேவையான பொருள்கள்:

தேங்காய் எண்ணெய் -  கால் லிட்டர் 
நாட்டுச் செம்பருத்தி பூ - 30
நாட்டுச் செம்பருத்தி இலை - 10 
உணவில் சேர்க்கப்படும் லட்டு கற்பூரம் 
(சிறிதளவு )
வெந்தயம் - சிறிதளவு 

அனைத்துவித மருத்துவத்திற்கும் நாட்டுச் செம்பருத்தி பூ மற்றும் இலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஹைபிரிட் வகைகளை முழுவதுமாக தவிர்க்கவும். நாட்டுச் செம்பருத்திப் பூவை செடியை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம் நாட்டு செம்பருத்தி இலைகள் அடர்ந்த பச்சையாகவும் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும் நாட்டுச் செம்பருத்தி பூ மிகவும் மிருதுவானதாகவும் ஐந்து முதல் ஆறு வரை இதழ்களை கொண்டிருக்கும்.


செய்முறை:

 செம்பருத்தி பூ மற்றும் இலைகளை பறித்து அதனை சுத்தமான நீரில் கழுவி நன்கு உலர வைக்க வேண்டும். வெயிலில் காயவைக்க கூடாது. நிழலில் ஈரம் போகும் வரை உலர வைத்தால் போதுமானது. சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைத்தால் மிகவும் நல்லது. அடுப்பு பற்ற வைத்து அதில் நல்ல கனமான இரும்புச்சட்டியை  வைக்க வேண்டும். இரும்பு சட்டியில் காய்ச்சப்படும் எண்ணெய்  நீண்ட நாட்களுக்கு உபயோகப்படுத்தலாம். சட்டி சூடு ஏறியவுடன் எண்ணெயை ஊற்றி சூடாகும் வரை காத்திருக்கவும். அடுப்பு அதிகமாக எரியக் கூடாது அதே சமயம் மிகவும் குறைவாகவும் எறிய கூடாது மிதமான அளவில் எரிய வேண்டும். மிதமான  வெப்பத்தில் எண்ணெய் சூடாகும் வரை காத்திருக்கவும். இந்த எண்ணெய் காய்ச்சுவதற்கு விறகு அடுப்பு பயன்படுத்துதல் நல்லது.

 எண்ணெய் சூடு ஆவதற்கு முன்பும் மிகவும் சூடு ஏறின பிறகும் பொருட்களை சேர்க்கக்கூடாது. மிதமான சூட்டில் சுத்தம் செய்யப்பட்ட செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை அதில் சேர்க்க வேண்டும். பூக்களை சேர்ப்பதற்கு முன்பு பூவிலிருந்து மஞ்சள் நிறத்தில் இருக்கும் மகரந்த குழல்களை தனியே எடுத்து விட வேண்டும். பின்பு இலை மற்றும் பூவின் நிறம் மாறும் வரை மிதமான சூட்டில் வைத்திருந்து விட்டு நிறம் மாறியவுடன் இளஞ்சூட்டில் அடுப்பை குறைத்து வைத்துக் கொள்ளவும்.

 சிறிது நேரம் கழித்தஉடன் பூ மற்றும் இலைகளின் நிறம் மாறிவிடும். அப்பொழுது சிறிதளவு வெந்தயத்தை சேர்க்கலாம்.  குளிர்ச்சி அதிகமாக ஒத்துக் கொள்ளாதவர்கள் வெந்தயத்தை தவிர்த்துக் கொள்ளலாம். வெந்தயம் சேர்க்கும் போது எண்ணெய் மணமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். எண்ணெய் வற்ற தொடங்கியுடன் இறக்கி விட வேண்டும். இப்பொழுது அந்த லட்டு கற்பூரத்தை சிறிதளவு பொடியாக்கி சேர்த்து விட வேண்டும். லட்டு கற்பூரம் மணத்திற்காக மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம். இது தலைமுடியின் வளர்ச்சியில் எவ்வித பெங்களூர் இல்லை எனவே தேவைப்படாதவர்கள் தவித்துக் கொள்ளலாம். இது கடைகளில் விற்கப்படும் எண்ணெய் போன்று சிவப்பு நிறத்தில் இருக்காது. இந்த எண்ணெயை ஒரு  நாள் முழுவதும் அப்படியே அந்த சட்டியில் வைக்க வேண்டும் மூடி போட்டு மூடி வைத்துக் கொள்ளவும். ஒரு நாள் கழித்து கழித்து வடிகட்டி காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் சேகரிக்க வேண்டும். 

வாரத்துக்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தலைமுடியின் வேர்க்கால்களின் நன்கு படுமாறு  மசாஜ் செய்ய வேண்டும். நன்கு ஊற வைத்த பிறகு  குளித்து விடலாம். இந்த எண்ணெய் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தது. எனவே சளி தொந்தரவு உள்ளவர்கள் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைப்பதால் இந்த எண்ணெய் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். அதற்கு மேல் நீண்ட நாள் உபயோகிக்க நினைப்பவர்கள் டபுள் ஃபாய்லிங்   முறையில் சூடு செய்து உபயோகிக்கலாம். இந்த முறையில் எவ்வாறு எண்ணையை சூடு செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டபுள் ஃபாய்லிங் முறை:

இம்முறையில் நாம் சூடு செய்யப்படும் பொருள் நேரடியாக அடுப்பில் வைக்கப்பட தேவையில்லை. மாறாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை அடுப்பில் வைத்து  தண்ணீர் சூடானதும் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அந்த தண்ணீருக்கு நடுவில் எண்ணெய் பாத்திரத்தை வைக்க வேண்டும். அதாவது தண்ணீர் இருக்கும் பாத்திரத்தின் நடுவே  எண்ணெய் இருக்கும் பாத்திரத்தை வைக்க வேண்டும். தண்ணீர் சூடாகும் பொழுது எண்ணெய் இருக்கும் பாத்திரமும் சூடாகும். அப்போது தேவையான சூடு வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும். எண்ணெய் சூடு ஆறியவுடன் பழையபடி கண்ணாடிபாட்டிலில்  சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

 அல்லது வெயிலில்  அடிக்கடி எடுத்து வைத்து உபயோகித்தாலும் நீண்ட நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம். மூன்று மாதங்கள் வரை உபயோகித்தல் சிறப்பு.

 இதைத் தொடர்ந்து உபயோகித்து வரும் பொழுது தலைமுடி கருமையாக வளர்ச்சி அடைய தொடங்கும். இரண்டு  மூன்று மாதங்கள் உபயோகப்படுத்தி விட்டு பலன் இல்லை என்று நிறுத்தக்கூடாது. ஆறு மாதங்களுக்கு மேல் உபயோகித்து வரும் பொழுது மட்டுமே மாற்றம் ஏற்படத் துவங்கும். 

இது போன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

கஞ்சி மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்... நீண்ட நாட்களுக்கு...

 ஈடு இணையற்ற உணவான தாய்ப்பாலுக்கு மிஞ்சிய உணவு இவ்வுலகில் எதுவும் இல்லை. அதிக மகத்துவம் நிறைந்த தாய்ப்பாலில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை எனலாம். பிறந்த குழந்தைகளுக்கு மூல உணவே தாய்ப்பால் மட்டுமே ஆகும். 
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தவிர நாம் எந்த உணவும் கொடுப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு போதிய அளவு ஊட்டச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், மற்றும்  வைட்டமின்கள் என அனைத்தும் தேவைப்படும். இவை அனைத்தும் தாய்ப்பாலிலே இருப்பதால் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி திறனோடு ஆரோக்கியத்துடன் இருப்பர். 

தாய்ப்பால் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு உடல் பரும பிரச்சனைகள் பிற்காலத்தில் வருவதில்லை தாய்ப்பால் உட்கலும் குழந்தைகளுக்கு எந்தவித செரிமான பிரச்சனைகளும் வருவதில்லை. ஏனெனில் இது குழந்தைகளின் செரிமான உறுப்புகளுக்கு  ஏற்றவாறு எளிய வகை  உணவாகும் பொதுவாக தாய்ப்பால் உட்கொள்ளும் குழந்தைகள் குண்டாக இருக்க மாட்டார்கள் ஆனால் அவர்களின் உடல் உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும் ஏனெனில் தாய்ப்பாலை கொழுப்புச்சத்தை விட  பிறச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.

 தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் சரி. தாய்மார்களுக்கும் சரி அதிக நோய் எதிர்ப்பு திறன் உருவாகிறது.
ஆராய்ச்சியின் படி தாய்ப்பால் கொடுக்கும்  தாய்மார்களுக்கு மார்பு புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது. தாய்ப்பாலில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் குழந்தைகளின் பற்களுக்கும் எலும்புகளுக்கும் உறுதியையும் நீண்ட ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றன.

 மேலும் இது குழந்தைகளுக்கும் தாய்க்கும் இடையே மனரீதியான உடல் ரீதியான  அதிக நெருக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. அதிகமான நாட்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு உடல் எடை சீக்கிரமாக அதிகரிக்காது. பொதுவாக கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்கு பின்பு பெண்களின் உடல் அதிகரிக்கச் செய்யும். ஆனால் தாய்ப்பால் அதிக அளவில் அதிக நாட்களுக்கு கொடுக்கப்படும் பொழுது உடல் எடை  அதிகரிப்பது தவிர்க்கப்படுகிறது.  பிரசவத்திற்கு பின்பு பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு.. ஆனால்  தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம் வருவதில்லை. தாய்ப்பால் கொடுத்தலின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது.

 அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாய்ப்பால் ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு ஒரு சரிவிகித உணவாகும். மருத்துவர்களால் இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது ஆறு மாதங்கள் கட்டாயம் என அறிவுறுத்தப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடால் ஏற்படும் நோய்களிலிருந்தும் ஊட்டச்சத்துக் குறைபாடு இறக்கும் நிலையில் இருந்து விடுபடுகின்றனர்

 தாய்ப்பால் குழந்தைகளுக்கு  கொடுக்கும் பொழுது குழந்தை எந்தவித நோய் நொடியும் இன்றி  ஆரோக்கியத்துடன் இருக்கும்.

 ஆனால் தற்போதைய காலங்களில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் போதிய அளவில்  இல்லாத காரணத்தினால் குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் கொடுக்கப்பட இயலவில்லை. ஃபார்முலா மில்க் எனப்படும் புட்டிகளில் அடைக்கப்பட்ட பவுடரைக் கொண்டு தான் தற்காலங்களில் கொடுக்கப்படுகிறது. நம் வீட்டு பெரியவர்கள் அந்த காலத்தில்  சாதாரண உணவு மூலமாகவே  சரி செய்துள்ளனர். தாய்ப்பால்  சுரப்பதில் பலவகையான உணவுப் பொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதில் பூண்டு மிக முக்கியமான ஒன்று. பூண்டு அதிகமாக  உட்கொள்ளும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு  அதிகமாகவும் நீண்ட நாட்களுக்கும் இருக்கும். ஏனெனில் பூண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவது  மட்டுமல்லாமல் அடர்ந்த பாலாகவும் கொடுக்கிறது. அவ்வாறு பூண்டு மூலம் செய்யும் கஞ்சி ஒன்றுதான் இங்கு தீர்வாக கூறப்பட்டுள்ளது.

 வீட்டில் இருக்கும் பொருளை வைத்து   கஞ்சி செய்து காலை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது தாய்ப்பால் சுரப்பு போதிய அளவில்  நீண்ட நாட்களுக்கு சுரக்கும்.

 அந்த கஞ்சியை செய்யும் விதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  இது இருவர் காலை உணவாக எடுத்துக் கொள்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள அளவு

தேவையான பொருட்கள்:
 
வெள்ளைப் பூண்டு - 10 
பச்சரிசி  -  ஒரு டம்ளர் 
அல்லது 
வரகு அரிசி - ஒரு டம்ளர்
வெந்தயம் - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சோறு வேக வைப்பது போல் இந்த கஞ்சியும் மிகவும் எளிதானது முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் கஞ்சி பதத்திற்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.  தண்ணீர் கொதி வந்தவுடன்  தண்ணீரில் பச்சரிசி, பூண்டு மற்றும் வெந்தயம் மூன்றையும் உப்பு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். அது ஒன்றுடன் ஒன்று இணைந்து மசிந்து வரும் வரை வேக வைக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் கஞ்சி பதத்திற்கு வரும். இப்பொழுது அடுப்பை  அணைத்து கஞ்சியை ஆற வைத்து ஏதாவது துவையலுடன் இதை உண்ணலாம். 

இதில் பச்சரிசிக்கு பதிலாக வரகரிசி சேர்த்தாலும் சுவை நன்றாக இருக்கும். வரகரிசி சீக்கிரமாக வெந்துவிடும். 

 அதற்கு பதிலாக வேறு ஏதாவது சிறுதானியங்களும் சேர்த்துக் கொள்ளலாம். சிறுதானிய வகை சேர்த்து இந்த கஞ்சி செய்யும் பொழுது தண்ணீர் கொஞ்சம் அதிகமாக வைக்க வேண்டும். இது தாய்மார்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அனைவரும் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம் சிறு தானிய வகை சேர்த்து இந்த கஞ்சி வைக்கப்படும் போது அது மிகச்சிறந்த காலை உணவாக பார்க்கப்படுகிறது.

தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது வாரத்திற்கு இருமுறையாவது குறைந்தது எடுத்துக் கொள்ள வேண்டும். இதை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் பொழுது தாய்ப்பால் குறைபாடு வரவே வராது. கர்ப்பத்திற்கு பின்பும் எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் சுரப்பு நீண்ட காலம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். ஏதேனும் துவையலுடன் இதை சேர்த்து சாப்பிடும் போது ருசியும் நன்றாக இருக்கும். புதினா துவையல் இன்னும் உகந்ததாக இருக்கும்

இதுபோன்ற தகவல்களை அறிந்திட எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்
Share:

இது மட்டும் தெரிந்தால் போதும்... தரமான வீடு கட்டலாம்...

வீடு கட்டுதல் என்பது நம் அனைவரின் கனவுகளில் முதல் கனவாக இருக்கும்.
 தங்கள் கனவு இல்லத்தை வடிவமைப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை உண்டு. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசை இல்லாத நபர்களே கிடையாது. அவ்வளவு சீக்கிரமாக எல்லோருக்கும் சொந்த வீடு அமைவது கிடையாது. சில பேர் நிறைய சொத்துக்காரர்களாக கையில் பணம் நகை உடையவர்களாகவும் இருந்தாலும் சொந்த வீடு இல்லாமல் நம்மில் பலர் உள்ளனர். அதற்கென்று ஒரு யோகம் தேவை. ஏனெனில் எலி வளையானாலும் தனி வளை வேண்டும். வீடு என்பது சொத்து என்பதையும் தாண்டி உணர்வு பூர்வமாக நம்முடன் தொடர்புடையது. ஆனால் தற்காலங்களில்  நிலத்தில் வாங்கி வீடு கட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல. அதனால் தான் நமது பெரியவர்கள் வீட்டை கட்டிப்பார் ... கல்யாணத்தை பண்ணிப்பார்... என்ற பழமொழியை கூறிவந்துள்ளனர்.  


அந்த இல்லமானது மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பதற்கு தங்களால் இயன்ற அனைத்து வகையான முயற்சிகளையும் செய்கின்றனர். எந்த வகையிலும் பணத்தை அநாவசியமாக செலவு செய்யாமல் அதே சமயம் தாங்கள் செய்யும் செலவுக்கு ஏற்றவாறு வீடு அமைய வேண்டும் என்பது மட்டுமே அனைவரின் விருப்பமாக இருக்கும்.

 இதில் கட்டுமானம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தங்களுக்கு ஏற்றார் போல் தங்கள் இல்லத்தை வடிவமைத்துக் கொள்கின்றனர்.  ஆனால் கட்டுமானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் தங்கள் பணத்தை பல்வேறு  வழிகளில் இழக்க நேரிடலாம். 

எனவே உங்கள் வீட்டை கட்டத் தொடங்கும் முன் சில முக்கிய தகவல்களை  அறிந்து கொண்டு துவங்குவது நல்லது.

 அந்த வகையில்  உங்கள் கனவு இல்லத்தை வடிவமைத்துக்கொள்ள மிகச்சிறந்த 8 வழிகள் இங்கே   கொடுக்கப்பட்டுள்ளன. இதை ஆய்ந்து அறிந்த பின்னர் உங்களுக்கான இல்லத்தை கட்டத் தொடங்குவது சிறந்தது.


1. காற்றோட்டமான போக்குவரத்து வசதி உள்ள மனைகள்/நிலங்கள். 

வீடு கட்டுவதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் மனைகள் அல்லது நிலங்கள் நல்ல காற்றோட்டமானதாகவும் சுத்தமான சுற்றுப்புறத்தை கொண்டதாக இருக்க வேண்டும். சுத்தமான சுற்றுப்புறத்தை கொண்டிருக்கும் பொழுது சுகாதாரம் மேம்படும். குப்பைத்தொட்டி, குப்பை கொட்டும் இடம், பொது கழிப்பறை, சாக்கடை வாய்க்கால் போன்றவைகள் நம் வசிக்கும்  இடத்தின் அருகில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அங்கே கொசுக்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும் பொழுது தொற்று நோய்கள் எளிதில் பரவக்கூடும். இது போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு தான் அதிகளவில் மலேரியா டெங்கு காய்ச்சல்கள் வருகிறது. 

மேலும் அந்த இடமானது போக்குவரத்து வசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும் அல்லது சாலைகளுடன் தொடர்புடைய இடமாக இருக்கும் பொழுது எதிர்காலத்தில் போக்குவரத்து சம்பந்தப்பட்ட செலவுகளை தவிர்க்கலாம். சிலருக்கு நகரத்தின் மையத்தில் வீடு கட்டுவதற்கு ஆசை இருக்கலாம் ஆனால் நகரத்தின் மையம் பல வசதிகளை கொண்டிருந்தாலும் ஒரு இயற்கைச் சூழல் வாய்ந்த வசதிகளை தர இயலாது எடுத்துக்காட்டாக அந்த மாதிரி இடங்களில் காற்றானது அதிக அளவு மாசுபாடு அடைந்திருக்கும் காற்று மாசுபாடு மற்றும் ஒலி மாசுபாடு நகரத்தின் முக்கிய இடங்களில் அதிகமாக இருக்கும் தரமான மண் நல்ல காற்று இயற்கையான சுற்றுச்சூழல் நகரத்தின் மையங்களில் கிடைப்பது அரிது எனவே இது போன்ற காரணங்களை முதன்மைப்படுத்திக் கொண்டு இடம் மற்றும் அணைகளை வாங்குவது நல்லது 

2. திறமையான தொழிலாளர்கள் (தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் கிடைத்தால் இன்னும் சிறப்பு) 

வீடு கட்டத் தொடங்கியவுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த வீட்டை முடிக்கும் பொழுது பணத்தை நிறைய வழிகளில் சேமிக்கலாம். பணி புரியும் தொழிலாளர்கள் உரிய நேரத்தில் வேலைகளை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்க வேண்டும் எனில் தொழிலாளர்கள் குறிப்பிட்ட தொலைவில் இருக்க வேண்டும். அல்லது தங்கி பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது வேலை நேரம் கெடாது.. அதாவது ஓய்வு நேரம் போக மீத நேரங்களில் வேலையானது சீக்கிரம் முடிக்க முடியும்.
இதுவே தொலைவில் அல்லது வேறு ஊர்களில் இருந்து தினமும் வரும் தொழிலாளர்களுக்கு சிறிது நேரம் கால தாமதம் ஆகலாம். பயணத்தினால் ஏற்படும் களைப்பின் காரணமாக வேலையின் வேகம் குறையலாம். இதை தவிர்க்க தங்கி பணிபுரியும் தொழிலாளர்களை தேர்ந்தெடுப்பது அல்லது மிக அருகில் இருக்கும் தொழிலாளர்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

3. மொத்தமாக கட்டுமான பொருட்களை வாங்குதல். 

பொதுவாக வீடு கட்டுதலில் பல நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையிலும் பலவிதமான கட்டுமான பொருட்கள் தேவைப்படும். எனவே வேலைக்கு ஏற்ப அவ்வபோது பொருட்களை வாங்குவது சிறந்தது. கடைசியாக முடிக்க  வேண்டிய வேலைக்கு முதலிலேயே கட்டுமான பொருட்களை வாங்கி போடுவது சிறந்தது கிடையாது. ஏனெனில் பணத்தை அதில் முன்னாடியே முதலீடு செய்வது அடுத்தடுத்த வேலைகளுக்கு சிரமம் ஏற்படும்

அதுபோல தேவையான கட்டுமான பொருட்களை முடிந்த வரை ஒரே இடத்தில் மொத்தமாக வாங்குவது சிறந்தது. அதாவது சில்லறை  சில்லறையாக வாங்காமல் வேலைக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி விடுவதால் விலையில் தள்ளுபடி கேட்கலாம்.. 

இதில் முக்கியமான ஒன்று குறைந்த விலைக்கு பொருள்களை வாங்குவது சிறந்தது என்றாலும் பொருள்களின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது.  தரமான பொருட்களையே முதன்மையாக கொள்ள வேண்டும். பின்பு தான் அதன் விலையை கருத்தில் கொள்ள வேண்டும். தரமான பொருட்களைக் கொண்டு வீடு கட்டும்பொழுது எதிர்காலத்தில் கட்டிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கலாம். எனவே அது வீடு கட்டும் பொழுது விலையில் சற்று அதிகமானாலும் எதிர்காலத்தில் வரும் பெரிய செலவை வரவிடாமல் தடுக்க முடியும்.

4. சிறந்த கட்டுமான தொழில்நுட்ப வல்லுநர் மட்டும் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.

நம் வீடு கட்டும் பொழுது நல்ல ஒரு சிறந்த பொறியாளரை தேர்ந்தெடுத்து விட்டால் எதைப் பற்றிய கவலையும் நமக்கு தேவை இருக்காது. ஏனெனில் சிறந்த  கட்டிடக்கலை வல்லுநர்கள் குறைந்த செலவில் தரமான பொருட்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவில் கட்டிடத்தை கட்டி கொடுப்பவர் ஆக இருக்கும் பொழுது எந்தவித பிரச்சினையும் இல்லாமல்  கட்டிடம் சிறப்பானதாக அமையும். 

5. வெளியூர் மற்றும் வெளிப்பகுதிகளிலிருந்து கட்டுமான பொருட்கள் மற்றும் தொழிலாளர்களை தேர்ந்தெடுப்பதை தவிர்ப்பது நல்லது.

சில நேரம் நமது கட்டிடத்தின் அருகிலயே இருக்கும் கடைகளில் கட்டுமான பொருட்கள் எடுத்தாலும் விலை சற்று அதிகமாக இருக்கலாம். இந்த காரணத்தினால் நாம் வெளியூர் மற்றும் பிற பகுதிகளில் கட்டுமான பொருட்களை வாங்க நேரிடும். அவ்வாறு வாங்கும் பொழுது போக்குவரத்து செலவு என ஒரு பெருந்தொகையை செலவழிக்க நேரிடலாம். இது பணச் செலவு மட்டும் இல்லாமல் அலைச்சல் மற்றும் நேரத்தையும் வீணடிக்கலாம்.

6. தடையில்லாத தூய்மையான நீர் மற்றும் மின்சார வசதி. 

 தற்காலங்களில் நீர் மட்டுமல்லாமல் மின்சார வசதியும் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. எனவே தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் 24 நேரமும் தண்ணீர் வசதியுடன் இருக்கும்  இடங்களில் வீடு கட்டுதல் சிறந்தது. அது மட்டுமல்லாமல் இன்னும் சில இடங்களில் மின்சார வசதி கிடைக்காமல் இருக்கிறது. அது போன்ற இடங்களை தவிர்த்து எப்போதும் மின்சார வசதி மற்றும் குடிநீர் கிடைக்கும் இடங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. இவைகள் இரண்டும் இல்லாத இடங்களில் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இது எதிர்காலங்களில் பல பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.

7. கட்டுமான பொருட்களை சரியான அளவில் நேரத்தில் உபயோகித்தல்.

தரமான கட்டுமான பொருட்களை வாங்கியவுடன் தரமான வீடு கட்டலாம் என்ற எண்ணத்தில் இருந்து விடக்கூடாது. அந்த பொருட்களை எவ்வாறு உபயோகப்படுத்துவது எந்தெந்த வேலை நிலைகளில் அதை உபயோகிக்க வேண்டும் என்பதையும்  கவனத்தில் கொள்ள வேண்டும். இது கட்டிட வல்லுநரைச் சார்ந்தது என்றாலும் நாமும் இதை கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.

8. குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிடத்தை முடித்தல்.

கட்டிடம் கட்டும் முன்பே கட்டிடத்திற்கான ஒப்பந்தத்தில் அதற்கான கால கெடுவையும் சேர்த்து ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஏனெனில் நம் வாடகை போன்ற வீடுகளில் இருந்து நாம் கட்டிய வீட்டிற்கு செல்வதற்கு தாமதமானால்  வாடகை கொடுக்க நேரிடலாம். இது போன்ற செலவுகள் மற்றும் பிற செலவுகளை தவிர்க்க குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிடத்தில் முடிப்பது நல்லது.



வீடு கட்டும் முன் முக்கியமாக தயாரிக்க வேண்டிய ஆவணங்கள்:

கட்டிட வரைபடம் - 2D Plan
கட்டமைப்பு வரைபடம் - Structural Drawing 
வெளிப்புற உட்புற வடிவமைப்பு - Interior and Exterior Designs 
கட்டிட ஒப்பந்த பத்திரம் - Construction Agreement. 


Share:

உலர் பழங்களை ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும் ...?

ட்ரை ஃப்ரூட்ஸ் ஊறவைத்து ஏன் சாப்பிட வேண்டும் ...?

அதிக வகையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து இருப்பது இந்த உலர் கொட்டைகளில் தான். விலை சற்று உயர்ந்ததாக இருந்தாலும் இந்த உலர் கொட்டைகள் மக்களால் விரும்பி உண்ணப்படுவதன் காரணம் இதன் சத்துக்களும் ருசியும் தான். இது ஒரு பணக்கார பொருளாக பார்க்கப்படுவதற்கு இதன் விலை ஒரு காரணம் என்றாலும் இதில் உள்ள சத்துக்களும் ஒரு காரணமே. 


உலர் கொட்டைகளான பாதம், முந்திரி, பிஸ்தா மற்றும் வால்நட் போன்ற பல பொருட்கள் உடல் எடை அதிகரிப்புடன் தொடர்புடையவை. இதில் உள்ள நல்ல கொழுப்புகள் உடல் எடையை சீர்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உலர் கொட்டைகளை ஊறவைத்து உண்ணும் பொழுது புற்றுநோய் வராமல் காக்கும். பொதுவாகவே இந்த உலர் கொட்டைகளை ஊறவைத்து உண்ணும் பொழுது வயிற்றுப் பகுதியில் உள்ள உள்ளுறுப்புகளின் இயக்கம் சிறப்பாக இருக்கும். செரிமான பகுதிகளில் ஏற்படும் பிரச்சனை வராமல் தடுக்கப்படும்

 உலர் கொட்டைகளை காலையில் தினமும் உண்பவர்களுக்கு இதய மற்றும் சர்க்கரை நோய் அண்டாது. உலர் கொட்டைகளில் பாதாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அனைத்து சத்துக்களும் போதிய அளவில்  கிடைக்கின்றன. 


இதை குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பொழுது குழந்தையின் வளர்ச்சி வயதிற்கு ஏற்றார் போல் சரியான அளவில் இருக்கும். சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பாதாம் கொட்டைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

பொதுவாக உலர் கொட்டைகளை நீரில் ஊற வைத்து உண்ணும் பொழுது அதன் பலன் இரு மடங்கு ஆகிறது. அவர் ஊற வைத்து உண்ணும் பொழுது அதில் உள்ள அதிகப்படியான கொழுப்பானது வெளியேறி
சிறந்த புரத பொருளாக கிடைக்கிறது. அந்த வகையில் சில உலர்க கொட்டைகளை ஊறவைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு காணலாம். 

பாதாம்:

ஊர்க் கொட்டைகளில் மிக சுவையானதும் மிக அதிக சத்து வாய்ந்ததும் ஒன்றாக பார்க்கப்படுவது பாதாம். பாதாமை அப்படியே சாப்பிடுவதால் எண்ணற்ற பலன்கள் உள்ளன. இது இனிப்பு மில்க் ஷேக் மற்றும் உப்பு போட்டு வறுத்து  என பல்வேறு விதமாக உணவு வகைகளில் சேர்த்தாலும் அப்படியே சாப்பிடுபவர்களும் உண்டு.
இதயத்தின் செயல்பாட்டில் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாமில் உள்ள சத்துக்கள் இதயத்தின் செயல்பாட்டை நன்கு அதிகரிக்க உதவுகிறது. பாதாமில் செய்யப்படும் எண்ணெய்  சருமத்திற்கும் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடலுக்கு நன்மை அளிக்கின்றன. பாதாமை பல வகைகளில் உணவில் சேர்த்தாலும் அதை ஊற வைத்து சாப்பிடுவது மிகச் சிறந்தது. தேவையான அல்லது ஆறு முதல் 8 பாதம் கொட்டைகளை இரவில் நன்கு கழுவி விட்டு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அந்தத் தோலை உரித்து விட்டு  சாப்பிட்டு விட வேண்டும். இதனால் எண்ணற்ற ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.  உடல் எடை அதிகரிக்க கூடும் என்று நினைப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தலாம்.

 இதில் மற்றும் ஒரு முறை தினமும் மூன்று முதல் எட்டு பாதாம் கொட்டைகளை பசும்பாலில் ஆறு மணி நேரம் ஊற வைத்து தோலினை உரித்து புரத குறைபாடு உடையவர்கள், மெலிந்த தேகம், சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது நல்ல மாற்றத்தையும் வளர்ச்சியையும் காணலாம்.

 கர்ப்பிணிப் பெண்கள் இதை தினமும் எடுத்துக் கொள்ளும் போது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது. பாலில் ஊற வைத்து உண்பதால்  கால்சியமும் அதில் சேர்ந்து முழுதாக கிடைக்கிறது. 

வால்நட்:

பார்ப்பதற்கு முரடாக இருக்கும் வால்நட் மிகவும் மிருதுவானது. உலர் கொட்டைகளிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த கொட்டைகளில் வால்நட் முக்கியமான ஒன்றாகும்.  இதில் உள்ள நல்ல கொழுப்பு உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.  இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கர்ப்பிணிகளின் கர்ப்ப காலங்களில் எடுத்துக் கொள்ளும் பொழுது குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். பொதுவாக இந்த வகை ஒமேகா கொழுப்பு கடல் உணவுப் பொருட்களில் மட்டும் இருப்பதால் சைவப்பெரியர்கள் அதை எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு மாற்றாக வால்நட் எடுத்துக் கொள்ளலாம். அதில் கிடக்கும்  கொழுப்பு அமிலம் இதில் அதிகமாக உள்ளது. இதை பாதாம் அளவுக்கு நீண்ட நேரம் ஊற வைக்க தேவையில்லை. இதை சுத்தமான தண்ணீர் அல்லது பசும்பாலில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வரை ஊற வைத்து அந்த தண்ணீருடன் சேர்த்து உண்ணலாம். இதை தினமும் சாப்பிட்டு வரும் பொழுது மலச்சிக்கல், ஆண்மை குறைபாடு மற்றும் மன மற்றும் உடல் அழுத்தங்களில் இருந்து விடுபடலாம்.

உலர் திராட்சை:

 உலர் திராட்சையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். அது மட்டுமில்லாமல் இரத்த விருத்திக்கு உலர் திராட்சை ஒரு நல்ல தீர்வாகும். இது ரத்த அழுத்தத்தை சீரமைத்து காலையிலேயே இதை உண்பதால் அன்றைய நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. கருப்பு அல்லது வெளிர் உலர் திராட்சைகளை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு உலர் திராட்சைகளை சாப்பிடும் பொழுது ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் மலச்சிக்கல் வரவிடாமல் தடுக்க செய்கிறது.  உலர் திராட்சைகளை காய வைத்து பதப்படுத்தும் பொழுது அதன் தோளில் தேவையில்லாத குப்பைகள் ஒட்டி இருக்க வாய்ப்புண்டு. இதை ஊற வைத்து உண்ணும் பொழுது தேவை இல்லாதவை உடலுக்குள் சேர்வது தடுக்கப்படுகிறது.

பேரிச்சை பழம்:

 பேரிச்சை பழத்தில்  உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகளவு இருந்தாலும் மனவளம் காப்பதில் பேரிச்சம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. 
பேரிச்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது போதைக்கு அடிமையாகும் எண்ணம் குறைக்கப்படுகிறத.  புகை மற்றும் மது பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கும் பொழுது பேரிச்சம் பழத்தை அதிகமாக உண்டு எளிதாக அதிலிருந்து விடுபடலாம். இது மனவளத்தை அதிகரிக்க உதவுகிறது. பேரிச்சை பழத்தில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளித்து உடல்நலம் சீராக இருப்பதற்கு உதவுகிறது. மேலும் இது ரத்த விருத்திக்கு சிறந்ததாகும். பேரிச்சை பழத்தை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை உண்ணும் பொழுது உடலில் உள்ள செரிமான பகுதி மற்றும் வயிற்று உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும். அஜீரண கோளாறு, வாயு கோளாறு போன்ற பிரச்சனைகளில் இருந்து தடுத்து வயிற்றுப் பகுதிகளை வலுப்படுத்தும். ஹார்மோன் சார்ந்த பருவப் பிரச்சினைகளை சரி செய்யவும் பேரிச்சம் பழம் நல்ல தீர்வாகும். எனவே பருவ வயதினர் பேரிச்சம் பழத்தை அதிகளவில் எடுத்துக் கொண்டால்  ஹார்மோன் சுரப்பு நன்றாக இருக்கும். சத்துக் குறைபாடு உடைய குழந்தைகள், மெலிந்த தேகம் உடையவர்கள் மற்றும் முதியவர்களுக்கு பேரிச்சம் பழத்தை மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் வரை பசும்பாலில் ஊற வைத்து பின்பு அதை மிக்ஸியில் அரைத்து கொடுக்கலாம். இதை தினமும் சாப்பிட்டு வரும் பொழுது உடல் வளர்ச்சி மற்றும் நோய்கள் எதுவும் அண்டாமல் சிறப்பாக இருக்கும்... 

 பொதுவாகவே உலர் பழ மற்றும் கொட்டைகளை அப்படியே சாப்பிடுபவர்களே அதிகம். அதை அப்படியே சாப்பிட்டாலும் இல்லை ஏதாவது ஒரு உணவு வகையில் சேர்த்துக் கொண்டாலும் மிகவும் சிறந்தது. இன்னும் சற்று படி மேலே அதை தண்ணீரிலோ பாலிலோ ஊறவைத்து உண்ணும் பொழுது இன்னும் அதிக பலன்களை பெறலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்கள் அறிந்திட எங்கள் பக்கத்தை தொடரவும். மேலும் சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவ செய்யவும்.
Share:

தலைமுடியின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே ஹேர் ஃபேக்...

நீண்ட கூந்தல் வேண்டுமா...?

பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் கூந்தலுக்கு தான் முதலிடம்.  அந்த கூந்தல் தற்போதைய காலத்தில் அதிகமாக வளரவில்லை என்றாலும் கொட்டாமலாவது இருக்க வேண்டும் என்பதே அனைவரின்  விருப்பமாக உள்ளது. 

அனைத்தும்  வியாபார மயமாகி வரும் இந்த சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு முடியை வளர்ச்சி அடைய செய்யும் ஹேர் பேக் இங்கு கூறப்பட்டுள்ளது. இந்த ஹேர் பேக் வீட்டில் கிடைக்கும்  எளிய பொருட்களை எளிமையான முறையில் பயன்படுத்தி  முடிக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும். பொதுவாக ஹேர் பேக் தலையில் உபயோகப்படுத்தும் பொழுது அது தலைக்கு நல்ல ஈரப்பதத்தையும் வேர்க்கால்களுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும். அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை தலையில் இது தொடர்ந்து இருப்பதால் இதில் இருக்கும் சாறானது    பொடுகை நீக்கி மிருதுவான மென்மையான முடியை கொடுக்கிறது.



இது நெடுங்காலமாக மக்களால் பயன்படுத்தப்பட்ட ஒன்று என்றாலும் தற்போது நேரமின்மை காரணமாக யாரும் இதை செய்வதில்லை. இன்னும் ஒரு காரணம் பொருட்களின் தட்டுப்பாடு. ஆனாலும் முடி வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த ஹேர்  பேக்கை வாரம் ஒரு முறை செய்து வரும் பொழுது ஆறு மாதத்தில் நல்ல மாற்றத்தை காணலாம். இதற்கு தேவையானப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:.

தேவையான பொருட்கள்:

 ஊற வைக்கப்பட்ட வெந்தயம் - 2 தேக்கரண்டி
 செம்பருத்தி இலை - 8 இலைகள்
 செம்பருத்தி பூ - 8 பூக்கள்
வேப்பிலை - 10 இலைகள்
 மருதாணி  - கைப்பிடியில் பாதி
 கறிவேப்பிலை - கைப்பிடியில் பாதி
 சோற்றுக்கற்றாழை - 2 தேக்கரண்டி
 தயிர் - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4 தோல் உரித்தது
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு - 4 துளிகள்
முருங்கைக்கீரை  -  சிறிதளவு 
நெல்லிக்காய் - 1 சிறியது (கொட்டை இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்) 

செய்முறை:

வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் நன்கு கழுவி விட்டு ஊற வைக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு செம்பருத்தி பூ மற்றும் இலைகளை நாட்டுச் செம்பருத்தி செடியிலிருந்து பறிக்க வேண்டும்.  நாட்டுச் செம்பருத்தி பூவானது நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். நாட்டு செம்பருத்தி இலை மற்றும் பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  வேறு ரகச்  செம்பருத்தியை உபயோகப்படுத்த கூடாது. அதேபோல் சோற்றுக்கற்றாழை எடுத்து தோலை நீக்கிவிட்டு அதில் உள்ள ஜெல்லி நீங்குமாறு நன்கு கழுவ வேண்டும்.  சோற்றுக்கற்றாழை சுத்திகரிப்பது என்பது ஏழு முறை சோற்றுக்கற்றாழையை தண்ணீரில் கழுவ வேண்டும். அப்பொழுது தான் அதில் இருக்கும் நச்சு தன்மையுள்ள ஜெல்லி வெளியேறும்.

 மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் இலைகளில் நுண்ணுயிர் கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு. எனவே அனைத்து பொருட்களையும் நன்கு கழுவி சுத்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுத்தம் செய்த பின்பு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் எடுத்துக்கொண்டு நன்கு அரைக்க வேண்டும். இதில் தண்ணீர் சேர்த்து அரைக்க கூடாது. நாம் சேர்த்திருக்கும் பொருளில் உள்ள ஈரப்பதமே போதுமானது. அரைக்கும் போது தேங்காய் எண்ணெயை முதலில் சேர்க்கக்கூடாது.  அரைத்து முடித்த பின்பு தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரே ஒரு சுற்று மட்டும் அரைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தலைக்கு உபயோகப்படுத்தும் போது அது தலைமுடியுடன் நன்கு பதியும். 

மேலே குறிப்பிட்ட பொருட்கள் அளவு ஒருவருக்கு ஒரு முறை பயன்படுத்த சரியாக இருக்கும். இதனை முன்கூட்டியே அரைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகப்படுத்துவது  சிறந்த பலனை தராது. உபயோகிக்கும்   பொழுது  மட்டுமே அரைத்து தலையில் தேய்க்க வேண்டும். நன்கு மைய அரைத்து தலைமுடியின் வேரிலிருந்து நுனிவரை  இடவேண்டும். அரை மணி நேரம் முதல் ஒரு மணி வரை நேரம் வரை தலையில் இருக்க வேண்டும். சளி பிடித்துக் கொள்ளும் உடல் உடையவர்கள் சிறிது  நேரம் வைத்திருந்தால் மட்டும்  போதும். மேலும் குறிப்பிட்ட பொருட்களில் ஏதேனும் பொருட்கள் இல்லாவிட்டாலும் இருக்கும் பொருட்களை வைத்து ஹேர் பேக் ரெடி செய்யலாம்.

பயன்கள்:

முடிக்கு ஊட்டச்சத்து அளித்து நீண்ட வளர்ச்சிக்கு உதவுகிறது. பொதுவாகவே ஹேர் பேக் வேர்க் கால்களுக்கு நல்ல ஈரப்பதத்தை அளிப்பதால் உடல் முழுவதும் குளிர்ச்சி அடைகிறது. மேலும் இது தலையில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது பொடுகு, நரை,  நுனிப் பிளவு, முடி கொட்டுதல், மெல்லிய முடி, அடர்த்தியின்மை, செம்பட்டை கூந்தல் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஹேர்பேக் ஒரு சிறந்த தீர்வாகும்.  

செம்பருத்தி பூவும் இலையும் கூந்தலை  மிருதுவாக மாற்றியமைத்து பளபளப்பை கொடுக்கிறது. செம்பருத்தி இலை மற்றும் பூ ஒரு கண்டிஷனர் போல் செயல்பட்டு கூந்தலை மென்மையானதாக மாற்றிவிடும். இதில் சேர்க்கப்படும்  வெந்தயம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த ஹேர் பேக் போடப்படும் அன்று கண் எரிச்சல் மற்றும்  கால் எரிச்சலை அகற்றி உடல் முழுவதையும் குளுமையாக வைத்திருக்கும். 

வேப்பிலை மற்றும் சோற்றுக்கற்றாழை இரண்டும் குளிர்ச்சியையும் கொடுத்து அதே நேரம் கூந்தலில் ஏற்படும் அலர்ஜி மற்றும்  ஒவ்வாமை போன்றவற்றை வரவிடாமல் தடுத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் சேர்க்கப்படும் மருதாணி இள
நரைக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.  மருதாணியின் சாறு முழுவதுமாக தலையில் படும்போது மெதுமெதுவாக இள நரைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். எலுமிச்சை, தயிர், முருங்கை இலைகள், வேப்பிலைகள், கறிவேப்பிலை இவை அனைத்தும் பொடுகை அகற்றி கூந்தலை சுத்தமாக வைத்திருக்க  உதவுகிறது.
எனவே முடி கொட்டுவது தடுக்கப்படுகிறது. நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை கருமையான கூந்தலுக்கு உதவுகிறது. கூந்தலின் செம்பட்டை தன்மையை மாற்றி கருமையை அளித்து செழிப்பான கூந்தலாக காட்சியளிக்க உதவுகிறது.

இவ்வாறு இதில் சேர்க்கும் அனைத்து பொருட்களும் ஒவ்வொரு மருத்துவ குணம் நிறைந்தவை. ஆக இவை முழுவதும் கூந்தலின் வளர்ச்சிக்கு உறுதுணையாகிறது.

 இது போன்ற பயனுள்ள தகவல்களைப் பெற எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.

Share:

நட்ஸ் ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்...?

நட்ஸ் எனப்படும் உலர்  கொட்டைகளில்   அதிகமான இரும்பு, புரதம், கால்சியம் மற்றும் அனைத்து வகையான தனிம  சத்துக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. பலர் இந்த கொட்டைகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்து உடல் எடை கூடுகிறது என்று நினைக்கின்றனர். உண்மையில்  நட்ஸ் அனைத்திலும் நல்ல வகை கொழுப்புகளே உள்ளன. இதை சரிவிகிதமாக எடுக்கப்படும் பொழுது உடல் எடை கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இந்த உலர் பழ கொட்டைகளில் காணப்படும் கொழுப்பு வகை நல்ல கொழுப்பு அமிலங்களே. இதை உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மேலும் கடல் உணவு பொருட்கள் மட்டுமே அதிகமாக இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உலர் பழ கொட்டைகளில் மட்டுமே அதிகமாக நிறைந்துள்ளன. எனவே அசைவம் விரும்பாத சைவப் பிரியர்களுக்கு இந்த உலர் பழ கொட்டைகளே சத்துக்களின் மூலாதாரம்..

நட்ஸ் அல்லது உலர் பல கொட்டைகள் பின்வருமாறு:

முந்திரி
பாதாம் 
பிஸ்தா 
உலர் திராட்சை பழம் 
பேரிச்சை 
பெக்கன்ஸ் 
மக்கடமியா நட்ஸ் 
பிரேசில் நட்ஸ் 
நிலக்கடலை

 இன்னும் பலவகையான உலர் பல கொட்டைகள் எல்லோராலும் விரும்பி உண்ண படுகின்றன. மேற்குறிப்பிட்ட நட்ஸ் வகைகள் அனைத்தும் இந்தியாவில் பரவலாக விரும்பி விண்ணப்படும் கொட்டைகள். அதில் பாதாம், பிஸ்தா, முந்திரி, நிலக்கடலை, மற்றும் உலர் திராட்சை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் பாதாம் கொட்டைகளை உண்டு வரும்போது எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல்கள் உள்ளன. அதாவது எல்லா காலத்திலும் எல்லோராலும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொருட்களில் இந்த உலர் பழ கொட்டைகளும் ஒன்று. அவ்வாறு உண்பதற்கு ஏற்றவாறும் எளிய முறையில் உண்ணும் மற்றும் எளிய வகையில் கிடைக்குமாறும் இது இருப்பதால் இதை உணவில் சேர்த்துக் கொள்வது எளிதாகிறது. 


ட்ரை  ஃப்ரூட்ஸ் அல்லது உலர் கொட்டைகள் எனப்படும் இவைகளை அதிகளவாக உட்கொள்ளப்படும் பொழுது அல்லது குழந்தைகள் பெரியவர்கள் எடுத்துக்கொள்ளப்படும் பொழுது செரிமான உறுப்புகள் பிரச்சினைக்குள்ளாகின்றன.


 இதனால் அஜீரணக் கோளாறு, வாயு கோளாறு மற்றும் மலச்சிக்கல் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுபோல இவைகளை தினமும் அல்லது அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது சிலருக்கு உடல்  எடையும் அதிகரிக்க வாய்ப்புண்டு.  

 அதிக பலன் அளிக்கக்கூடிய இந்த கொட்டைகளை அதன் பலனை மட்டும் உடலில் சேர்த்திட ஒரு எளிய வழி உண்டு. இந்த கொட்டைகளை தண்ணீரில் ஊறவைத்து உண்பதன் மூலம் பைட்டிக் அமிலம் என்பது தண்ணீரால் கிரகிக்கப்படுகிறது. இந்த அமிலமே செரிமான பிரச்சினையை உண்டாகும். இது தண்ணீரில் கிரகிக்கப்படும் பொழுது கொட்டைகளை மட்டும் நம் உண்பதால் அனைத்து ஊட்டச்சத்துக்களும் முழுதாக கிடைக்கிறது. பொதுவாகவே கொட்டைகளையும் பருப்புகளையும் ஊற வைத்து உண்ணப்படும் பொழுது அது தனது நிலையில் இருந்து மற்றொரு எளிதான நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்கிறது. அதுவும் நீரில் ஊற வைக்கப்படும் பொழுது அதில் உள்ள கடின கொழுப்புகள் மற்றும் சில பொருள்கள் எளிய நிலையை அடைவதால்  
உடனடியான ஆற்றலை அளிக்கிறது.


உடல் எடை அதிகரிப்பு பயம் உள்ளவர்கள் இந்த கொட்டைகளை தண்ணீரில் ஊற வைத்து உண்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். ஏனெனில் டிரை ஃப்ரூட்ஸில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் நல்ல வகை கொழுப்புகள். இந்த நல்ல வகை கொழுப்புகள் உடலுக்குத் தேவை இல்லாத உடல் எடையை அதிகரிக்க கூடிய கொழுப்புகளை கரைத்து உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க பெரும் பங்கு வகிக்கிறது. தினமும் இந்த கொட்டைகளை ஊற வைத்து சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதில் பாதாம் கொட்டைகளை முழுவதுமாக 6 மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டும். அப்பொழுது தான் அதில் உள்ள தேவையற்ற பொருட்கள் வெளியேறும். அவ்வாறு ஊற வைத்த கொட்டைகளை காலையில் அதன் தோலை உரித்து விட்டு உண்ணும் பொழுது அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் அது அளிக்கிறது.

 பெக்கென்ஸ் மற்றும் வால்நட்ஸ் குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கும் போது அதில் உள்ள எண்ணெய் பொருள்கள் வெளியேறும். எனவே அதிகப்படியான எண்ணெய் அதாவது கொழுப்பு வெளியேறும் பொழுது அது முழுவதும் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ள பொருளாக மாறி விடுவதால் உடல் எடை மற்றும் அதிகப்படியான கொழுப்பை பற்றிய கவலை இருக்காது.


 
முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டைகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்தால் போதும் அதில் உள்ள தேவையற்ற பொருட்கள் நீங்கிவிடும். முந்திரி பிஸ்தா மிக மிருதுவான கொட்டைகள் என்பதால் இது சிறிது நேரத்திலேயே நன்கு ஊறி விடும். இதை அதிக நேரம் ஊற வைத்தாலும் இதில் உள்ள சத்துக்கள் நீங்கிவிடும் எனவே குறிப்பிட்ட நேரம்  மட்டுமே ஊற வைக்க வேண்டும். அவ்வாறு ஊற வைத்து உண்ணும் போது தேவையற்ற பொருட்கள் நீங்கியும் அதிகமான சத்துக்கள் உடலில் எளிதாகவும் சேர்ந்து விடும்.

 இதுபோல கொட்டைகளை நீரில் ஊறவைத்து  சாப்பிடும் பொழுது சத்துக்கள் எளிய வடிவில் உடலினை அடைகின்றன. எனவே கடின வேலைகளை செய்யாமல் செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுகிறது. பொதுவாகவே செரிமான பிரச்சினை உடையவர்கள் அல்லது முதியோர்கள் அல்லது குழந்தைகளுக்கு இந்த வகை நட்ஸ் பொருட்களை கொடுக்கும் பொழுது அதை ஊற வைத்து கொடுத்தால் எந்தவித செரிமான பிரச்சனையும் அவர்களுக்கு வராது.

 இதுபோன்ற தகவல்களை அறிந்திட எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Labels

ரோட்டு கடை இறால் தொக்கு ஆறு மாதத்திற்கு கெடாமல் செய்வது எப்படி

ரோட்டு கடை இறால் தொக்கு ஆறு மாதத்திற்கு கெடாமல் செய்வது எப்படி..... பொதுவாக அசைவ பிரியர்களுக்கு கடல் உணவு வகைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்...

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.