கட்டுமானச் செலவைக் கணிசமாக குறைப்பது எப்படி?
நம் நாட்டின் பொதுவாகவே சொந்த வீடு கனவு இல்லாதவர்களே இல்லை எனலாம். ஏனெனில் சொந்த வீட்டில் வசிப்பது என்பது கனவு மட்டும் அல்ல ஒவ்வொரு மக்களின் லட்சியமாகவும் இருக்கும். ஆனால் சொந்தமாக வீடு கட்டுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதுவும் இப்பொழுது இருக்கும் விலைவாசி உயர்வில் மலிவு விலையில் சொந்த வீடு கட்டுவது என்பது சாத்தியமற்றது... பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு கட்டுவது என்பது ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த உழைப்பையும் வாழ்நாள் முழுவதும் அதில் போடுவது ஆகும்.
இந்த விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரே. ஏனெனில் சமுதாயத்தில் தங்களின் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும். அதை நேரம் விலைவாசி வியர்வையும் சமாளிக்க வேண்டும். தங்கள் நிலையிலிருந்து கீழே இறங்கி விடவும் கூடாது. இது போன்ற நிலைகளில் தங்கள் கனவுகளையும் அடைய வேண்டும். எனவே ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமாகவும் அதே சமயம் திட்டமிடலுடன் தொடங்குதல் மூலமும் சமாளிப்பது சற்று எளிதாகும். அந்த வகையில் வீடுகட்டும் பொழுது சில விஷயங்களை கவனத்தில் கொண்டு தொடங்கும் பொழுது ஓரளவிற்கு செலவை குறைத்து நமது பணத்தை அதிக அளவில் மிச்சம் செய்ய முடியும். அந்த வகையில் வீடு கட்டும் முன் எந்த வகையில் பணத்தை சேமிக்கலாம். எதிர்காலத்தில் வீட்டினால் எந்த செலவும் வராமல் எவ்வாறு கட்டலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
1. இடம்/ மனை
ஒவ்வொருவரும் தங்கள் கனவு இல்லத்தை கட்ட தொடங்கும் மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் உங்கள் கனவு இல்லத்தின் வெற்றி பொதுவாக உங்கள் வீட்டிற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து தொடங்குகிறது. போக்குவரத்து வசதி மற்றும் தேவையான ஒவ்வொரு மையத்திற்கும் தொடர்பு கொள்ள சாலையோர நிலத்தை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் அது வீடு கட்டும் செலவை கணிசமாக குறைப்பதுடன் உங்கள் போக்குவரத்து செலவை வாழ்நாள் முழுவதும் குறைக்கலாம்.
ஆனால் பல விற்பனையாளர்கள் அதிக தேவையை வாய்ப்பாகப் பயன்படுத்தி சாலையோர மனைகளை மிக அதிக விலைக்கு விற்கிறார்கள். வீடு கட்டும் ஆர்வத்தில் போக்குவரத்து இல்லாத இடங்களில் மனைகளை தேர்ந்தெடுப்பது வாழ்நாள் முழுவதும் போக்குவரத்து சிக்கலை உருவாக்கும்.
போக்குவரத்து வசதி:
நகரத்தின் முக்கிய பகுதிகளில் மனைகள் இல்லாவிட்டாலும் நகரத்துடன் தொடர்பை உருவாக்கும் இடங்களில் மனைகளை உருவாக்கிக் கொள்வது சிறந்தது. மெயின் ரோட்டில் இருந்து சற்று தொலைவில் கிடைத்தால் பரவாயில்லை. இல்லையெனில் ஒதுக்குப்புறமாக இருந்தாலும் அது சாலையில் அல்லது நகரத்தின் முக்கிய இடங்களில் சந்திக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
ஏதேனும் ஒதுக்குப்புறம் அல்லது உள்புறங்களில் கட்டப்படும் வீடுகள் கட்டும் பொழுது அதிக செலவை ஏற்படுத்தும். எவ்வாறு எனில் கட்டுமான பொருட்களை வாங்கி அதை உங்கள் மனைக்கு அருகில் கொண்டு வருவதற்கு ஆகும் போக்குவரத்து செலவு ஒவ்வொரு முறையும் அதிகமாகும். இதனால் கட்டுமான பொருட்களில் உங்கள் பணத்தை மிச்சம் பிடித்தாலும் அதை போக்குவரத்து செலவுக்கு செலவழிக்க நேரிடலாம். மேலும் எதிர்காலங்களில் ஒவ்வொரு முறையும் நீங்கள் போக்குவரத்திற்காக செலவழிக்கும் தொகையானது மையத்தின் நகரத்தின் மையத்தில் இடம் வாங்குவதை விட அதிக செலவை ஏற்படுத்த கூடும்.
முடிந்தவரை போக்குவரத்து தொடர்பு ஏற்படுத்தக்கூடிய அல்லது போக்குவரத்து தொடர்பு இருக்கக்கூடிய இடங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.
எனவே மனை/ இடம் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்கவும்.
மண்வளம்:
தரமான மண்வளம், நீர் வளம் உள்ள இடங்களை தேர்வு செய்வதுடன் சமதளமான இடத்தை தேர்வு செய்வதும் கூடுதல் நன்மை அளிக்கும். நீங்கள் கட்டப் போகும் இடத்தில் உள்ள மண் மெல்ல தரமானதாக இருக்க வேண்டும். தரமற்ற மண் உள்ள இடத்தில் கட்டப்படும் வீடானது நீண்ட நாளைக்கு உபயோகப்படுத்த முடியாது. மேலும் கட்டிடமானது வலிமையற்றதாக போகலாம். மேலும் இது இயற்கை சீற்றங்களினால் எளிதில் பாதிப்படையும். நல்ல மண் இருக்கும் இடத்தில் எழுப்பப்படும் கட்டிடம் நீண்ட நாளைக்கு உறுதியானதாக இருப்பதோடு இடையில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தாது. அல்லது புயல் பெரும் மழைகளில் சாதாரண கட்டிடங்கள் பாதித்தாலும் நல்ல தரமான மண் உள்ள இடத்தில் கட்டப்படும் வீடுகள் நீண்ட நாளைக்கு உறுதியானதாகவும் தரத்துடனும் இருக்கும்.
சமமான நிலத்தை தேர்வு செய்வது கட்டிடம் எழுப்பும்பொழுது சமதளப்படுத்துவதற்கு அதிக பணம் செலவழிக்க தேவையில்லை. இல்லை என்றால் கணிசமான தொகை நிலத்துடன் சமதளத்தை உருவாக்குவதற்கு செலவழிக்க நேரிடும். குறைந்த விலையில் மனை வாங்கும் பொழுது நாம் இந்த வசதிகளை கவனிக்காமல் விட்டால் இதற்கு செலவழிக்கப்படும் தொகை மற்றும் மனை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகைகளின் கூடுதல் நல்ல இடத்தில் மனை வாங்குவதற்கு சமம்.
திறமையான கட்டிட வல்லுநர்கள்:
என்னதான் நமக்கு கட்டிடத்தை பற்றிய அறிவு அதிகமாக இருந்தாலும் அந்த தொழில்நுட்பத்தை அதிகமாக தெரிந்து வைத்திருக்கும் கட்டிட வல்லுநர்களை பயன்படுத்துவது கட்டிடத்தில் கணிசமான தொகையை சேமிக்க உதவும். ஏனெனில் இந்த வல்லுநர்கள் கட்டுமான பொருள்களை தரத்துடன் உபயோகப்படுத்தும் விதத்தை அறிந்திருப்பதுடன் மேலும் உரிய நேரத்தில் தேவையான கட்டுமான பொருட்களை உபயோகிக்கும் விதத்தையும் நன்கு அறிந்திருப்பர். பெரும்பாலும் கட்டிட வல்லுநர்கள் இளைஞர்களாக தற்காலத்தில் தேர்வு செய்வது நல்லது. இவர்கள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை அதிகளவு அறிந்திருப்பார். எனவே கட்டுமான பொருட்களை குறைந்த அளவில் உபயோகப்படுத்தும் தொழில்நுட்பங்களை இவர்கள் அதிகமாக கையாளுவர். தொழில் அனுபவம் முக்கியமானது என்றாலும் நவீன தொழில்நுட்பம் இதில் இன்றியமையாதது.
வீடு கட்டும் முன் தேவையான ஆவணங்களை தயார் செய்து வைக்க வேண்டும். வீடு கட்ட தொடங்கிய பின் எந்த ஒரு ஆவணத்தையும் தயாரிக்க கூடாது. அல்லது அதை மாற்றக்கூடாது. வீடு கட்டும் முன் போடப்பட்ட திட்டத்தை கட்டி முடிக்கும் வரை தொடர வேண்டும். இடையில் திட்டத்தில் எதையாவது மாற்றினால் அதில் அதிக பணம் செலவழிக்க நேரிடலாம். எனவே போட்டிருக்கும் திட்டத்தின் படி வீடு கட்டுவது நல்லது...
உங்கள் கனவு இல்லத்தை தொடங்குவதற்கு முன்பே திட்டமிடுதல் அவசியம். திட்டமிடுதலுடன் வீடு கட்டி உங்கள் கனவை நினைவாக்குங்கள்.
இதுபோன்ற தகவல்களை அறிந்திட எங்கள் பக்கத்தை தொடரவும் மேலும் சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்






No comments:
Post a Comment