NCC மாஸ்டர் ஆவது எப்படி?

NCC மாஸ்டர் ஆவது எப்படி?

உலகிலேயே இந்திய ராணுவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது காரணம்.   முப்படைகளின் தொலைநோக்குப் பார்வையும்,  திறமை வாய்ந்த அதிகாரிகளும் மற்றும் பலம் வய்ந்த வீரர்களும் அடங்கிய ராணுவ படை நமதாகும்.  நம் மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு நம் நாட்டின் எல்லையில் நமது வீரர்கள் தங்கள் உயிரை தினமும் தியாகம் செய்கின்றனர். 

அந்நிய நாடுகள் போர் தொடுத்தல் ஆகட்டும், இயற்கை சீற்றங்களாகட்டும் உள்ளூர் கலவரங்கள் ஆகட்டும் இது  பான்ற எந்த ஒரு பிரச்சனைகள் என்றாலும் நமது பாதுகாப்பு படைகள் தான் முதலில் வந்து மக்களுக்கு உறுதுணையாக நிற்கின்றன. நமது நாட்டு ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. 

அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை மதித்து போற்றுவதே நம் இந்திய குடிமக்களின் தலையாய கடமை. அது மட்டும் அல்லாமல் நம் இந்திய இளைஞர்களை அதிகமாக நமது நாட்டு பாதுகாப்பு படைகளில் சேர்ப்பது நமது தலையாய கடமையாகும். 

 நமது ராணுவத்தை பற்றியும் நமது தேசிய பாதுகாப்பு படைகளை பற்றியும்  நமது இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்  முக்கியமான ஒன்றாகும். அதற்காகத்தான் இந்திய பாதுகாப்பு படையினால் மத்திய அமைச்சரவையின் கீழ்  நாட்டிலுள்ள பள்ளி கல்லூரிகளில் தேசிய மாணவர் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும்  கல்லூரிகளில் விளையாட்டு, யோகா, நாட்டு நலப்பணி திட்டம், தற்காப்பு கலை போன்று தேசிய மாணவர் படையும் (NCC) பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ளது. 

இந்த தேசிய மாணவர் படை இந்திய பாதுகாப்புத் துறையினால் இந்திய அமைச்சரவையின் கீழ் நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. 

 ராணுவத்தைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற சிறு ராணுவ பயிற்சி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான் தேசிய மாணவர் படை.  


இதில் பங்கேற்கும் மாணவர்கள் நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனாகவும் சமுதாயத்தில் அக்கறையுள்ள குடிமகனாகவும் உருவாக்கப்படுகிறார்கள். மேலும் இந்திய பாதுகாப்பு படையில் சேர்ந்து நாட்டுக்காக போராட ஊக்குவிக்கப்படுகின்றனர்.

 தேசிய மாணவர் படையில் பயிற்சி  கொடுக்கும் ஆசிரியர்களை தனியாக தேர்வு வைத்து எடுக்கப்படுவதில்லை.

தேசிய மாணவர் படையில்  பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்களை தேசிய மாணவர் படை அதிகாரி அல்லது ANO என்று அழைக்கப்படுவர். அதாவது Associate NCC Officer. அதாவது நேர்முகத் தேர்வு எழுத்து தேர்வு பயிற்சி ஆகிய அனைத்தையும் வெற்றிகரமாக முடித்தவுடன் அவர் பகுதிநேர அதிகாரியாக பணியில் அமர்த்தப்படுவர்.
ஆனால் பணிக்கு தேர்வாகி பயிற்சி முடிக்காத வரை அவர்கள் கேர் டேக்கர் என்ற பதவியுடன் பணியில் இருப்பர். 

இவர்களுக்கு இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்படும் இடம் OTA என்று அழைக்கப்படுகிறது. Officers Training Academy என்பது இந்தியாவில் இரண்டு இடங்களில் தேசிய மாணவர் படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக உள்ளது.  இதில் ஆண்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மகாராஷ்டிரம்  kamptee  யில்  உள்ளது. பெண்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் Gwalior யில்  உள்ளது.


பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேசிய மாணவர் படை பயின்ற மாணவர்கள் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் படிப்பு முடிந்த பின்பு இதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.  இல்லாத மாணவர்களும் குறைந்தபட்சம் இளங்கலை படிப்பு முடித்திருக்கும் பொழுது இதற்கு தகுதியானவர்கள் தான் .

ஆனால் தேசிய மாணவர் படை சான்றிதழ்கள் வைத்துக் கொண்டு தேசிய மாணவர் படை பயிற்சியாளராக நியமனம் செய்வது கூடுதல் சிறப்பு. 

இரண்டு வகையான நேர்முகத் தேர்வு மற்றும்  கல்லூரிகளுக்கு என்றால் மூன்று மாத பயிற்சி பள்ளிகளுக்கு என்றால் இரண்டு மாத பயிற்சி முடிவில் எழுத்து தேர்வு இதைக் கொண்டு தேசிய மாணவர் படை எனப்படும் NCC  யின்  பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். 

இவர்கள் பகுதி நேர அலுவலர் ஆவர்.
தேசிய மாணவர் படை பயிற்சியாளர் ஆவதற்கு என்று தனி படிப்பு எதுவும் இல்லை. மாறாக கல்லூரி படிக்கும் பொழுது part four ல் இருக்கும் படிப்பான தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளில் இருந்து தேசிய மாணவர் படை பிரிவை எடுத்து அதில் உள்ள "B" மற்றும் "C" சான்றிதழ் முடித்திருக்க வேண்டும். 

இந்த சான்றிதழ் இருக்கும் பொழுது தேசிய மாணவர் படை பயிற்சியாளர் ஆவது மிகவும் எளிது. இந்த சான்றிதழ் இல்லாவிட்டாலும் தேசிய மாணவர் படை பயிற்சியாளர் ஆக முடியும். இதற்கு நீங்கள் தனியார் அல்லது அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் ஆசிரியராக இருக்க வேண்டும். தனியார் பள்ளி என்றால்  நிரந்தர ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 


தகுதிகள்:

1. குறைந்தது இரண்டு வருடமாவது ஆசிரியராக அந்த பள்ளியில் பணியாற்றி இருக்க வேண்டும். 

2. பணி நிரந்தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

3.  இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

4. ஆண்களுக்கு 21 வயதுக்கு மேல் 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தற்பொழுது அதிகபட்ச வயது வரம்பு 45 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

5. இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

6.  பட்டியலில் குறிப்பிட்ட உடற்தகுதி சான்றிதழ் அரசு மருத்துவர்கள் இடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

7. எந்த ஒரு  கிரிமினல் வழக்குகளிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது.

8. அருகில் இருக்கும் காவல்துறையில் நற்சான்று பெற்றிருக்க வேண்டும்.

9. சிறந்த மொழித்திறன் இருப்பது கூடுதல் சிறப்பு.

10. எந்த ஒரு அரசியல் கட்சி சார்ந்த உறுப்பினராகவும் இருக்கக் கூடாது.

11. மத்திய மாநில அரசுகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு பணி நீக்கம் செய்திருக்கக் கூடாது.

12. NCC மற்றும் முப்படைகளின் எந்த பிரிவிலிருந்தும் பணி நீக்கம் செய்திருக்க கூடாது.

உரிய ஆவணங்களுடன் அருகில் இருக்கும் என்சிசி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பள்ளியின் வழியாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நேர்முகத் தேர்வு வழியாக குவாலியரில்  இருக்கும் OTA (Officers Training  Academy) ல் பயிற்சி பெற்று நீங்கள் ஒரு தேசிய மாணவர் படை அதிகாரியாக முடியும். அங்கு பயிற்சி பெற்ற பின் அதில் வைக்கும் எழுத்து தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி அடைய வேண்டும். இதற்கான பாடத்திட்டம் தேசிய மாணவர் படை பயிற்சி மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு குழு நடத்தும் நேர்முகத் தேர்வில் தேர்வாகி அதிலிருந்து இரண்டு வருடங்களுக்குள் தேசிய மாணவர் படை பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்திருக்க வேண்டும். அப்படி முடிக்க இயலாது  எனில் திரும்பவும் தேர்வுக்குழு நடத்தும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

 பயிற்சி மையத்தில் நடைபெறும் பயிற்சியின் முடிவில் நடைபெறும் எழுத்து தேர்வில்  தேர்ச்சி அடைய வேண்டும்.
 இல்லை எனில் மறுபடியும் நேர்முகத் தேர்வு ஆஃபீஸர்ஸ் ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி மற்றும் எழுத்து தேர்வு தேர்ச்சி அடைந்த பின்பு தான் ஒரு தேசிய மாணவர் படை ஆசிரியர் அல்லது அதிகாரியாக உங்களால் ஆக முடியும்.

நமது இளைஞர்களை முன்னேற்ற பாதையில் வழி நடத்தி நாட்டுப்பற்றை அனைவரது மனதிலும் உருவாக்கும்  இதுபோன்ற பணிகளை தேர்ந்தெடுத்து நம் நாட்டினை வளர்ச்சி பாதையில் செலுத்துவது நம் அனைவரது தலையாய கடமை ஆகும். 


 இதுபோன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.

Unity and Discipline 
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Labels

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.