அதுவும் தங்கத்தை அணியும் இடங்களான காது, மூக்கு மற்றும் கழுத்து போன்ற இடங்கள் வர்ம புள்ளிகளை தூண்டி உடல் உறுப்புகளை வலிமையாக வைப்பதுடன் உடல் அழகையும் பேணி பாதுகாக்கிறது. பழங்காலத்தில் நமது உடல் ஆரோக்கியத்தின் காரணமாக அணிகலன்கள் அணிவது கட்டாயமாக இருந்தது.
இவ்வாறு அணியப்படும் தங்கம் இடுப்புக்கு கீழே அதாவது காலில் அணிந்து கொள்வதில் பல விமர்சனங்கள் இருக்கின்றன.
ஏன் தங்கம் காலில் அணிய கூடாது...?
தங்கத்தை அள்ளித் தருபவள் மகாலட்சுமி. தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
செல்வ வளம் நிரம்பிய மகாலட்சுமியின் வடிவமான தங்கம் காலில் அணியும் பொழுது மகாலட்சுமியை அவமதிப்பதாகும். அவ்வாறு அணியும் பொழுது அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய மாட்டாள்.
மேலும் தங்கமானது குருவுடன் தொடர்புடைய உலோகம்.
மஞ்சள் நிற அதிபதியான குரு பகவான் வலுத்திருக்கும் பொழுது அவர்கள் பெரும் செல்வத்தை உடையவராகவும் தங்கத்தை உடையவராகவும் இருக்கிறார்கள்.
அதனால் குரு பகவானுக்கு உகந்த தங்கத்தை காலில் அணியும் பொழுது குருவை அவமதிப்பதாகும். செல்வமானது தங்காது நம்மை விட்டு சென்று விடும்.
எனவே இடுப்புக்கு கீழே காலிலோ அல்லது கால் விரலிலோ தங்கத்தை அணிவது நல்லதல்ல.
இது போன்ற பயனுள்ள செய்திகளை அறிய எங்கள் பக்கத்தை தொடரவும்






No comments:
Post a Comment