இப்பொழுதெல்லாம் முடியை கொட்டாமல் பாதுகாத்துக் கொள்ள மருத்துவத்துறையில் பலவிதமான சிகிச்சைகள் வந்துள்ளன.
வீட்டிலேயே பாட்டி வைத்தியம், பழங்கால மூலிகைகள் உபயோகப்படுத்துவது, வீட்டிலேயே எண்ணெய் தயாரிப்பது இன்னும் பல முறைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதன் மூலம் தலைமுடியின் அவசியத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஆனாலும் இந்த எவ்வித முறைகளையும் பயன்படுத்தியும் பலன் கிடைக்காதவர்கள், பயன்படுத்த முடியாதவர்களுக்கு என ஒரு முக்கியமான ஆனால் சாதாரணமான செலவில்லாத ஒரு குறிப்பை இங்கு பதிவிடுகிறோம் ..
ஒவ்வொருவரின் தலைமுடிக்கும் என ஒரு இயல்பு உள்ளது அது அவர்களின் குடும்ப ஜீன்களை பொறுத்தது. ஆனால் அனைவரின் தலைமுடிக்கும் பொதுவான இயல்பு ஒன்று உள்ளது. அது அந்த தலைமுடியை மென்மையாகவும் சரியான முறையில் கவனிப்பதும் ஆகும்.
முதலில் தலைமுடிக்கு தினமும் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் அல்லது மாலையில் ஒருமுறையாவது தலை சீவி பின்னலிட வேண்டும். அந்தப் பின்னலை இறுக்கிப் பின்ன வேண்டும். இவ்வாறு இறுக்கி பின்னப்படும் பொழுது முடி எளிதில் உடையாமல் வலிமையுடன் காணப்படும். மேலும் முடியை இறுக்கி பின்னப்படும் பொழுது தலையில் உள்ள நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின்னலை நுனிவரை பின்னி அதை நான்கு அல்லது ஐந்து மடிப்புகளாக தலைமுடியின் உயரத்திற்கு ஏற்றவாறு ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ள வேண்டும். ரிப்பன் வைத்து கட்டுவது சிறந்தது. ஆனால் தற்போது யாரும் அதை விரும்பவில்லை. எனவே ரப்பர் பேண்ட் போட்டு மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் தலை சீவும் முறை உள்ளவர்கள் தினமும் காலையில் இதை செய்ய வேண்டும் அல்லது மாலை வேலையில் தலை சீவுவர்கள் தினமும் மாலையில் இதே மாதிரி செய்ய வேண்டும்.
வாரத்தில் இரு முறை தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் .அவ்வாறு ஊற்றும் பொழுது தலை வறட்சியாக இருக்கக் கூடாது. எண்ணெய் பசையுடன் இருக்க வேண்டும். மேலும் ஷாம்பு மைல்டு ஷாம்புவாக இருக்க வேண்டும். ஷாம்புடன் தண்ணீரை கலந்து அதன் பின் தலையில் பயன்படுத்த வேண்டும். சீயக்காய் உபயோகிப்பது இன்னும் நலம்.
தலையை சீவும் பொழுது மென்மையான சீப்புகளை பயன்படுத்த வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்து தலையை சீவ கூடாது. சிக்கு அதிகமாய் இருப்பின் பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்துவது நலம். முடியை அது வளரும் வாகிலேயே சீவ வேண்டும். அதற்கு எதிரான வாகில் சீவக் கூடாது.
இதை மட்டும் குறைந்தது மூன்று மாதங்கள் செயல்படுத்தி பாருங்கள் உங்கள் தலைமுடி உறுதியாக கொட்டாமல் 100% வளர தொடங்கும்.
பெரும்பாலும் குழந்தையாய் இருக்கும்போது அதாவது பள்ளி முடியும் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இரண்டு பின்னல் போட்டு ரிப்பன் வைத்து கட்டிக் கொள்வோம். அதனால்தான் பள்ளிக்கல்வி முடியும் வரை நமது தலை முடி எந்த பிரச்சினையும் இல்லாமல் அழகாக இருக்கும்.
ஏனெனில் தினமும் சுழற்சி முறையில் அதை செய்து கொண்டே இருக்கிறோம். என்று நம் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு வருகிறோமோ அன்றுதான் உங்கள் முடி கொட்ட தொடங்கும்.
மேலும் சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும். இது போன்ற பல பயனுள்ள தகவல்களை பெற எங்கள் பக்கத்தை தொடரவும்.






No comments:
Post a Comment