கருவில் இருப்பது ஆணா...? பெண்ணா...? என்பதை காட்டும் முக்கிய அறிகுறிகள்..

கர்ப்பம் அடைதல் என்பது பொதுவாக பெண்களின் வாழ்வில் ஒரு அழகிய விழா போன்றது. தாய்மை அடைதல் என்பது பெண்களுக்கு மட்டும் கிடைத்த வரப்பிரசாதம். கர்ப்பிணி பெண்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய விரும்புகின்றனர். 

கர்ப்பிணிப் பெண் மட்டுமல்லாமல் அவளைச் சார்ந்த குடும்பத்தினர் அனைவருக்கும் இதை தெரிந்து கொள்ளும் விருப்பம் இருக்கிறது. ஆனால் இந்திய சட்டத்தின் படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அதனால் ஸ்கேன் எடுக்கப்படும் பொழுது குழந்தையின் பாலினம் சொல்லப்படுவதில்லை. கொடுக்கப்படும் டாக்குமெண்டிலும் எந்த பதிவும் பாலினத்தை பற்றி பதிவு  செய்யப்பட்டு இருக்காது. இந்திய அரசு கருவதை தடுப்புச் சட்டம் விதிப்பதற்கு முன்பு ஸ்கேன் ரிப்போர்ட்டில் பாலினம் தனியாக சொல்லப்பட்டு இருக்கும்.

 XX  மற்றும்  XY  என பதிவிடப்படும். அதை வைத்து XX என்றால் பெண் குழந்தை எனவும்  XY என்றால் ஆண் குழந்தை எனவும் அறிந்து கொள்வர். ஆனால் பாலினத்தை அறிந்து கொள்ளும் சட்டம் வந்த பின்னர் அது ஸ்கேனில் பதிவிடப்படுவதில்லை. பொதுவாக அனாட்டமி ஸ்கேன் என்று அழைக்கப்படும் ஸ்கேன் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு மூன்றாவது மாதம் அல்லது 12 வாரங்களுக்கு பின்பு எடுக்கப்படும். இந்த ஸ்கேனில் குழந்தையின் பாலினம் நன்றாக தெரிய வரும்.  தற்போதைய காலங்களில் 10 வாரங்களுக்கு தாண்டிய உடனே  பாலினத்தை கணிக்கும் முறை வந்துள்ளது. என்னதான் தொழில் நுட்பம் வந்து இருந்தாலும் நமது தடைச் சட்டம் பாலினத்தை அறிந்து கொள்வதற்கு ஒரு விழுக்காடு  கூட இடம் தருவதில்லை. ஆனாலும் அனைவரின் விருப்பம் முன்னரே கருவின் பாலினத்தை தெரிந்து கொள்வது.  கருவில் இருக்கும் குழந்தையானது ஆணா பெண்ணா என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு.

  ஆனாலும் சட்டப்படி கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொள்ள நம் முயல கூடாது. 

அதே சமயம் பழங்காலத்தில் இருந்து நமது பெரியவர்கள்  கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்பே அறிந்து கொள்வதற்கு சில அறிகுறிகளை கூறியுள்ளனர். அது எல்லோருக்கும் நடக்குமா என்பது சந்தேகம் தான். ஆனாலும் பெரும்பாலானவர்களுக்கு நடப்பதை கணித்துதான் நமது முன்னோர்கள்  கூறி இருக்கிறார்கள். 

அதில் சில முக்கியமான விடயங்களை இங்கு பதிவு செய்திருக்கிறோம்.

பெண் குழந்தைக்கான அறிகுறிகள்

பொதுவாக கர்ப்பிணி பெண்கள் எந்தவித சோர்வும் இல்லாமல் சாதாரணமாக இருந்தால் அதாவது கர்ப்பத்திற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சாதாரணமாக இருந்தால் அந்த பெண்ணின் கருவில் இருப்பது பெண் குழந்தை. 

கொஞ்சம் குமட்டல் வாந்தி கொஞ்சம் சோர்வு அதாவது தாங்கிக் கொள்ளக்கூடிய அளவு இருந்தாலும் அதுவும் பெண் குழந்தைக்கான அறிகுறி. 
முதல் 8 மாதமும் எந்த அறிகுறியும் இல்லாமல் 
ஒன்பதாவது மாதத்தில் இருந்து மட்டும்  வாந்தி இருந்தால் அதுவும் பெண் குழந்தைக்கான அறிகுறி. 

முடி கொட்டுவது வயிற்றின் வடிவம் அளவு இதையெல்லாம் வைத்து  கணிக்கப்படுவது பொதுவாக சரியான பலன் தராது. ஆனாலும் அதை வைத்து சிலர் சில அறிகுறிகளை கூறியுள்ளனர். அதையும் இங்கு பதிவு செய்கிறோம்.

 கர்ப்பிணி பெண்ணின் வயிறானது வட்ட வடிவமாக மேல் நோக்கி இருந்தால் அது பெண் குழந்தைக்கான அறிகுறி.

 அதே போல் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் நடுவே தொப்புள் வழியே ஒரு கோடு செல்லும். அந்த கோடு வளைவுடன் இருந்தால்  அது பெண் குழந்தைக்கான அறிகுறி. பணத்தை போல் அந்த கோடு நீண்டு செல்லாமல் பாதியிலேயே நின்றிருந்தாலும் பெண் குழந்தைக்கான அறிகுறி. 

முடி கொட்டாமல் இயல்பாகவோ அல்லது முடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் அதுவும் பெண் சிசுவை தாங்கி இருப்பதற்கான அறிகுறி. 

கர்ப்பிணிப் பெண் உட்கார்ந்து எழும் பொழுது தனது இடது கையை அதிகமாக உபயோகித்தால் அது பெண் குழந்தைக்கான அறிகுறி.

 கர்ப்பிணிப் பெண்ணின் வலது மார்பகம் சிறியதாகவும் இடது மார்பகம் பெரியதாகவும் காணப்பட்டால் அது ஆண் குழந்தை பிறப்பதற்கான அறிகுறி.

 கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இடது பக்கம் அசைவுகள் அதிகமாக இருந்தால் அது பெண் குழந்தைக்கான அறிகுறி. ஏனெனில் பெண் குழந்தை இடது பக்கம் உருவாவதாக ஒரு நம்பிக்கை நம்மிடையே உண்டு.

கருவுற்றிருக்கும் பெண்ணின் சிறுநீர் எவ்வித மாற்றமும் இல்லாமல் அல்லது மஞ்சளாக இல்லாமல் வெளிர் நிறத்தில் இருந்தால் அதுவும் பெண் குழந்தைக்கான அறிகுறி. 

கர்ப்பிணிப் பெண்ணின் கணவனின் உடல் எடை அதிகரிக்கிறது என்றால் அவர்கள் வீட்டில் பெண் குழந்தை வரப்போகிறது என்று அர்த்தம் பெண்.

கர்ப்பிணி பெண்  இனிப்பு வகைகளை அதிகமாகவும் காரம் சார்ந்த உணவுகளை தவிர்த்து வந்தால் அது பெண் குழந்தைக்கான அறிகுறி.

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் அந்தப் பெண் அதிகமாக தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுபவராகவும் அடிக்கடி பசி  எடுத்து சாப்பிடுவராகவும் தூங்கிக் கொண்டேயும் இருப்பார்கள்.

 கருவுற்றிருக்கும் பெண்ணின் கருவில் பெண் குழந்தை இருந்தால்  அந்தக் குடும்பத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

ஆண் குழந்தைக்கான அறிகுறிகள்

எப்பொழுதும் சோர்வாக இருப்பது அதுவும் காலை நேரத்தில் அதிக சோர்வு ஆண் குழந்தைக்கான அறிகுறி. 

தொடர்ந்து வாந்தி குமட்டல், தலை சுற்று, உணவில் நாட்டமின்மை, எடை இழப்பு, மயக்கம் பார்ப்பதற்கு முகம் வெளுத்து வாய் கோணலாக அதாவது அழகின்றி காணப்படுவது, எப்பொழுதும் சோகமான முகம் தெளிவற்று  இருப்பது இவை அனைத்தும் ஆண் குழந்தைக்கான அறிகுறி.

ஆண் குழந்தை சுமக்கும் பெண்ணிற்கு எப்பொழுதும் மூட் ஸ்விங்ஸ் எனப்படும்  மனம் சமநிலை இல்லாத தன்மை அதிகமாக இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்களின் வயிறு கூர்மையானதாகவோ நீண்டிருந்தாலோ  இடுப்பு பக்கத்தில் வயிறு இல்லாமல் முழுவதும் கீழ் நோக்கி இறங்கி இருந்தால் அது ஆண் சிசுவை கொண்டு இருப்பதற்கான அறிகுறி.

ஆண் குழந்தையை சுமத்தர்கள் பெரும்பாலும் இனிப்பை உண்ண மாட்டார்கள் காரம் உப்புச் சார்ந்த உணவு வகைகளை அதிகமாக உண்டு

அதனால் இவர்கள் எப்பொழுதும் அதீத கோபம், அழுகை, எரிச்சல் மற்றும் தனித்திருப்பது போன்ற காரணங்களை கொண்டு இருப்பர். 

கருவுற்றிருக்கும் பெண் உட்கார்ந்து எழும் பொழுது வலது கையை அதிகமாக உபயோகித்தால் அது ஆண் குழந்தைக்கான அறிகுறி.

 கருவுற்றிருக்கும் பெண்ணின் வயிற்றில் அசைவுகள் வலது பக்கம் அதிகமாக இருந்தால் அதுவும் ஆண் பிள்ளைக்கான அறிகுறிகள்.

 கருவுற்றுக்கும் பெண்ணின் வலது மார்பகம் தடித்து இடது மார்பகத்தை விட பெரியதாக இருந்தால் அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறி..

கருவுற்றுக்கும் பெண்ணின் முடியானது வறட்சியுடனும் அதிகமாக கொட்டுதலோ இருந்தால் அது ஆண் சிசுக்கான அறிகுறி...

 வெளிர்மஞ்சள் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழிப்பது, உணவின் மீது வெறுப்பு ஏற்படுவது, அதிக கோபம் போன்றவை ஆண் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகள். 

 மேலே கூறிய அறிகுறிகள் அனைத்தும் ஆராய்ச்சி முடிவில் கணிக்கப்பட்டது அல்ல... இது ஒரு உத்தேசமாக கணிக்கப்பட்டது தான். இதில் வரும் அனைத்து அறிகுறிகளும் எல்லா கர்ப்பிணிகளுக்கும் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. மாறாக இதில் அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் குழந்தை பெற்றவர்களும் ஏராளம்.


 இப்பொழுது  குழந்தை பெற்றுக் கொள்வது முழுவதும் மருத்துவ மையமாகிவிட்டது. அந்த காலத்தில் 10 குழந்தைகளை பெற்றாலும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருப்பார்கள. ஆனால் இன்று ஒரு குழந்தைக்கு ஏங்கும் பெண்களே ஏராளம். வளர்ந்து வரும் மருத்துவத்துறையில் குழந்தை பெற்றுக் கொள்வது எளிதாகி விட்டாலும் நிறைய பிரச்சனைகளுடன்  பெண்கள் கஷ்டப்படும் நேரத்தில் எந்த குழந்தையாக இருந்தாலும் சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வது சிறந்தது.

இது போன்ற மென்மேலும் தகவல்களைப் பெற எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Labels

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.