வீடு கட்டுவதில் தரம் எவ்வளவு முக்கியத்துவமோ அதை அளவு செலவை குறைப்பதும் முக்கியம் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த பணத்தை வீடு கட்டுவதில் போடும் பொழுது அதற்கான தரமும் மதிப்பும் கிடைக்க வேண்டும்.
மண் பரிசோதனை
எனவே அதிக தரமும் குறைந்த செலவும் உடைய வீடு கட்ட வேண்டும் எனில் முன்கூட்டியே திட்டமிடுதல் நல்லது. அவ்வாறு திட்டமிடுதலில் முக்கியமாக நாம் மேற்கொள்ள வேண்டிய விஷயம் மண் பரிசோதனை.
மண் பரிசோதனையில் மண்ணின் அமிலத்தன்மை காரத்தன்மை PH மதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு கட்டிடத்தின் தூண்களை தாங்கும் சக்தி உடையதா என பல்வேறு பரிசோதனைகளில் சோதிக்கப்படுகிறது.
மண் பரிசோதனை என்பது கட்டிடத்தில் பாதுகாப்பு முறைகளில் ஒன்று. கட்டிடம் தரமானதாகவும் நீண்ட நாள் உழைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் எனில் மண் பரிசோதனை மிக முக்கியம்.
விவசாய நிலங்கள்
விவசாய நிலங்கள் தற்போது மனைகளாக பிரிக்கப்பட்டு மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாலும் பெருகி வரும் மக்கள் தொகையாலும் அந்த நிலங்களையும் மனைகளாக மாற்ற வேண்டிய கட்டாயம். விவசாய நிலங்கள் வீடு கட்டுவதற்கு உகந்ததா என்று கேட்டால் சில சமயம் அது உகந்தது அல்ல. ஏனெனில் நெல் விளையும் இடங்கள் வயல் போன்ற இடங்களில் உள்ள மண் மிகவும் தளர்வானதாக இருக்கும். மிக தளர்வான மண் கட்டிடத்தின் அஸ்திவாரம் போடுவதற்கு உகந்தது அல்ல. அவ்வாறு அந்த மண்ணை மண் பரிசோதனை செய்து கொள்ளும் பொழுது சோதனையில் கட்டிடத்திற்கு ஏற்ற மண் அல்ல என்று வந்தால் அந்த மண்ணை உறுதியானதாக மாற்றுவதற்கு நாம் மிகப் பெரும் செலவை செலவழிக்க வேண்டி நேரிடும். இது வேறு இடத்தில் அதாவது நல்ல மண் உள்ள இடத்தில் நிலத்தை வாங்குவதற்கு சமம்.






No comments:
Post a Comment