கர்ப்பிணிகள் நாவல் பழம் சாப்பிடலாமா?

நாவல் பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாமா நாவல் பழம் சாலையோரம் எளிதாக வளரக்கூடிய மரங்களில் ஒன்று. இந்திய ஃப்ளாக் பெர்ரி என்று அழைக்கப்படும் இந்த பழம் மிகவும் துவர்ப்பு சுவை உடையது என்றாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுவது. நாவல் பழம் என்றாலே சர்க்கரை நோய் உடையவர்களுக்கான பழம் என்ற கருத்து தான்  நாம் கண்முன்னே வரும். அந்த அளவுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் முக்கியமான ஒன்று. இதில் நாட்டு நாவல் பழம் மிகுந்த ருசியையும் சத்துக்களையும் கொண்டது. தற்போது ஹைப்ரிட் வகை நாவல் பழங்கள் மார்க்கெட்டில் அதிகம் விற்பனைக்கு வருகிறது. அதை தவிர்த்து நாட்டு நாவல் பழங்களை சாப்பிடுவது மிகுந்த நன்மை அளிக்கும். 

நாவல் பழம் கர்ப்பிணிகள் சாப்பிடலாமா மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடலாமா என்ற வகை சந்தேகங்கள் நம்மிடையே உள்ளன. நாவல் பழத்தின் நன்மைகளையும் மற்றும் அதனால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதையும் இக்கட்டுரையில் காணலாம்.




ஹைப்ரிட் நாவல் பழங்கள் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் மிகப்பெரியதாகவும் தடித்த தோலுடனும் நீள் வட்டமாகவும் சிறிது கசப்பு கலந்த துவர்ப்பு தன்மையுடனும் காணப்படும். நாட்டு நாவல் பழங்கள் சிறியதாகவும் உருண்டையாகவும் தோல் மிகவும் மிருதுவாகவும் காணப்படும். ஆனால் கடைகளில் ஹைபிரிட் வகை நாவல் பழங்களே அதிகமாக விற்பனைக்கு வருகின்றன. அதை தவிர்த்து நாட்டு நாவல் பழங்களை வாங்கி உண்பது உடலுக்கும் நல்லது. மற்றும் சுவையும் அதிக அளவில் இருக்கும். நாட்டு நாவல் பழங்கள் மிகவும் மென்மையாக இருப்பதால்  அது எளிதில் கெட்டுப் போக வாய்ப்பு இருக்கும். அதனால் அதை எண்ணெய் தேய்த்து பளபளப்பாக வைத்து வியாபாரம் செய்கின்றனர். எனவே நாவல் பழங்களை சாப்பிடும் முன்பு முக்கியமாக கழுவி சாப்பிட வேண்டும். வாங்கும் போதும் மிகவும் கவனமாக வாங்க வேண்டும். இல்லையெனில் பிறவகை பிரச்சினைகள் உண்டு பண்ண வாய்ப்பு அதிகம் உள்ளது.

பயன்கள் 

நாவல் பழம் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தரும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை குறைத்து கர்ப்பப்பை வலுவை உண்டாக்கும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை பொறுத்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை எடுத்துக் கொள்ளலாம்.

நாவல் பழத்தின் இலை காய், பூ, பழம் மற்றும்  பழத்தின் கொட்டை என அனைத்தும்  மருத்துவ குணம் நிறைந்தவை நாவல் பழத்தின் கொட்டையை அரைத்து பொடியாக்கி அந்த பொடியை தினமும் ஒன்று வரும் பொழுது சிறுநீரக கற்களில் இருந்து விடுபடலாம்.

உடலில் ஏற்படும் வாயு கோளாறு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு நாவல் பழத்தை ஜூஸ் செய்து தினமும் குடித்து வரும் பொழுது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்

நாவல் பழத்துடன் தயிர் சேர்த்து உண்டு வரும் பொழுது வயிற்றுப்போக்கு உபாதையில் இருந்து விடுபடலாம்.

இதில் உள்ள வைட்டமின் சி தோலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது. அதனால் முகத்திற்கு சுருக்கம் ஏற்படாமல் இளமைப் பொலிவை தோலுக்கு அளிக்கிறது. மேலும் ரத்தத்தில்  ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தசோகை வர விடாமல் தடுக்கிறது.

உடலின் உள்ளுறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு கல்லீரல். கல்லீரலுக்கும் நாவல் பழத்திற்கும் அருமையான ஒற்றுமை உள்ளது. கல்லீரல் உறுதியாகவும் அதன் வேலையை எந்தவித தடையும் இல்லாமல் செய்வதற்கு நாவல் பழத்தில் உள்ள தாதுக்கள் உதவுகின்றன. நாவல் பழத்தை அதிகமாக அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு கல்லீரல் சார்ந்த எந்த பிரச்சனைகளும் வருவதில்லை.


தீமைகள்:

நாவல் பழம் குளிர்ச்சி தன்மை வாய்ந்ததால் அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலுக்கு அதிக குளிர்ச்சியை உருவாக்கி ஜலதோஷத்தை உண்டு பண்ணும்.
 நாவல் பழம் அமிலத்தன்மை வாய்ந்ததால் தொண்டை மற்றும் வயிற்றுக்குள் புண்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும் நாவல் பழத்தை விரும்பி சாப்பிடுபவர்கள் நாவல் பழத்தை நன்கு கழுவி விட்டு அதில் சிறிதளவு உப்பு போட்டு சில மணித்  துளிகள் ஊறவைத்து உண்ணும் பொழுது தொண்டை மற்றும் சளி பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும். சுவைக்கு மிளகுத்தூளும் சேர்த்துக் கொள்ளலாம். 

கர்ப்பிணிகளுக்கு 

நாவல் பழம் உடலுக்கு நன்மை அளிக்கும் பழம் என்றாலும் இதை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளும் பொழுது எளிதாக உடல் உஷ்ணத்தை தணித்து குளிர்ச்சியை உருவாக்கி விடும். இதனால் குளிர்ந்த உடலுடைய பெண்களுக்கு சளி எளிதில் பிடித்து விடும். கர்ப்ப காலத்தில் பிடிக்கும் சளியானது குழந்தை பிறக்கும் வரை தொந்தரவு கொடுப்பதால் கர்ப்பிணிகளுக்கு நாவல் பழம் பரிந்துரைக்க மாட்டார்கள். மற்றும் இது அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால் பசியின்மையை உண்டு பண்ணும்.

 பொதுவாகவே கர்ப்பிணிகள் வாந்தி, மயக்கம், பசியின்மை, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகளால் அவதியுறுவர். இந்த காலங்களில் நாவல் பழங்களை அதிகமாக உண்ணும் பொழுது இந்த பிரச்சனைகள் இன்னும் அதிகரிக்கக்கூடும். எனவே கர்ப்ப காலங்களில் முடிந்தவரை இப்பழங்களை தவிர்ப்பது நல்லது. சிலர் நாவல் பழங்கள் சாப்பிடுவதால் கரு கலைப்பு உண்டாகலாம் என்று நினைக்கின்றனர். இது மருத்துவ ரீதியாக எந்த அளவுக்கு உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை. ஆனால் கிராமங்களில்
இது போன்ற கருத்துக்களும் உள்ளது. அதுபோல குழந்தை பெற்ற இளம் தாய்மார்களுக்கும் நாவல் பழத்தை உண்பதால் பிரச்சனைகளை வர வாய்ப்புண்டு என்று கூறுகின்றனர். எனவே எதையும் அளவாக எடுத்துக் கொள்ளும் பொழுது எந்தவித பிரச்சனையும் நம்மை பாதிக்காது. இது மட்டுமல்லாமல் கர்ப்ப காலத்தில் நாவல் பழம் சாப்பிடும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் கருப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் கிராமப்புறங்களில் பரவி வருகிறது. நாவல் பழம் கருப்பாக இருப்பதால் இந்த கூற்று உள்ளதா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்று தெரியாமலேயே இந்த கருத்து நம்மிடையே பரவி உள்ளது. ஆனால் குழந்தையின் நிறத்திற்கும் நாவற்பழத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. குழந்தையின் நிறம் மரபு வழியாக வருவது...


பொதுவாக நாவல் மரம் எளிதாக கிடைக்கக்கூடிய வளர்க்கக்கூடிய மர வகைகளில் ஒன்று என்றாலும், இந்த மர வகைகள் பாம்புகள் தங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் பலரும் இந்த மரத்தை வளர்ப்பதற்கு தயங்குகின்றனர். முறையான பாதுகாப்பு முறைகளை கொண்டு இந்த மரத்தை வீட்டிலும் மற்ற அனைத்து இடங்களிலும் வளர்த்து பயனடையலாம்.


நாவல் பழம் எளிதாககிடைக்கக் கூடியது. நெடுஞ்சாலைகளில் இருபுறமும் நாவல் பழ மரங்கள் அதிகம் உண்டு. அதிலிருந்து வரும் பழங்களை யாரும் உபயோகப்படுத்துவது கிடையாது. நாவல் பழம் நாட்டுப்பழம் அதிக சத்துக்கள் வாய்ந்தது. இதை அனைவரும் உண்டு  பயன் பெற வேண்டும்.

 இது போன்ற தகவல் அறிந்திட எங்கள் பக்கத்தை தொடரவும்.. மேலும் சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும். 


Share:

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Labels

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.