வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.... இதோ கண்காணிக்கும் கேமரா....!

ரேடார் கேமரா எவ்வாறு கண்காணிக்கிறது?

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க விதி மீறுதலும் அதிகரிக்க தான் செய்கிறது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்க முக்கியமாக நகரங்களில் பல இடங்களில் ரேடார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கண்காணிக்க, குறிப்பிட்ட வாகனங்களை ஆராய, தவறான வழியில் தவறான முறையில் செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்க ரேடார் கேமரா பயன்படுகிறது. 

அந்த வகையில் சென்னையில் முக்கிய இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 3D ரேடார் கேமரா பொருத்தப்பட்டு வாகனங்களின்  வேகம் கண்காணிக்கப்படுகிறது.  இந்த வகை கேமராக்கள் மூலம் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வேகங்கள் ஒரே நேரத்தில்  கண்காணிக்கப்படுகிறது. 

ரேடார் கேமராவின் பயன்கள்:

தவறான வழியில் செல்லும் வாகனங்களை கண்காணிக்க ரேடார் கேமரா உதவுகிறது. இதன் மூலம் போக்குவரத்தை அதிக அளவில் சீர் செய்ய முடியும். மேலும் வாகனங்களின் வேகத்தை கண்டுபிடித்து அதிகமாக செல்லும்  வாகனங்களுக்கு தடை விதிக்கவும் அபராதம் விதிக்கவும் உதவி செய்கிறது. இதனால் விபத்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.  இந்த வகை கேமராக்கள் உடனுக்குடன் புகைப்படம் எடுப்பதால் குற்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்கவும் அது போன்ற வாகனங்களை இயக்குபவர்களை பிடிப்பதற்கும்  உதவுகிறது.

சென்னையில் ரேடார்  கேமரா பொருத்தப்பட்டுள்ள இடங்கள் பின்வருமாறு:


ரேடார் கேமரா சென்னையில் பொருத்தப்பட்டுள்ள 10 இடங்கள் 

1.அண்ணா சாலை (ஸ்பென்சர் பிளாசா)

2.அண்ணா அறிவாலயம் (Dms)

3.ஆலந்தூர் சந்திப்பு

4.பழைய விமான நிலையம் எதிரில்

5.ECR (ஈஞ்சம்பாக்கம்)

6.அரசு மருத்துவமனை (பாரிஸ் கார்னர்)

7. டெய்லர்ஸ் சாலை (சந்தி)

8. அமைந்தகரை (புல்லா சந்திப்பு)

9.திருமங்கலம் ( எஸ்டேட் ரோடு )

10மதுரவாயல் (ரேஷன் கடை)

வாகனத்தின் வேகம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது

நகரத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக செல்லும் மற்றும் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின்  புகைப்படம் எடுக்கப்படுகிறது. இந்த புகைப்படத்தில் வாகனங்களில் எண் உள்ளதால் அது கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கப்படும். கட்டுப்பாட்டு அறையில் வாகனத்தில் எண் மூலம் வாகன உரிமையாளரின் அனைத்து தகவல்களையும் அறிந்து அதன் மூலம் வாகனம் ஓட்டுபவரின் தொலைபேசிக்கு அபராத தொகையுடன் கூடிய இ-சலான் அனுப்பி வைக்கப்படும். ஈ செல்லான் குளம் மொபைல் வழியாகவோ அல்லது நேரிலோ சென்று அபிரகத்தை செலுத்திக் கொள்ளலாம் இந்த வகை கேமராக்கள் பகல் இரவு மழை வெயில் என எந்த பிரச்சினையும் இல்லாமல் இப்பொழுதும் இயங்கி கொண்டிருக்கும். 

கவனமாக வாகனம் ஓட்டவும் நண்பர்களே ...😰 **
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Labels

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.