முன்பதிவில்லாத அந்தியோதயா ட்ரெயின் பற்றி தெரியுமா?

ரயில் பயணத்தை மட்டும் விரும்புவரா நீங்கள்?
 திடீரென்று கிளம்பும் நபரா நீங்கள்?  முன்பதிவு இல்லாத ட்ரெயின் உங்களுக்கு தேவைப்படுகிறதா ? 
 கம்மி விலையில்  ட்ரெயினில் முன்பதிவின்றி செல்ல வேண்டுமா?  படியுங்கள் இது உங்களுக்கான பதிவு....

பொதுவாகவே நம்மில் அனைவருக்கும் பயணம் செய்தல் என்பது பிடித்தமான ஒன்று. பயணங்கள் பிடிக்காதவர்கள் வெகு சிலரே..  அந்த சிலருக்கும் எதாவது  கட்டாய பயணத்தின் போது  விரும்பி செல்வது ரயில் வண்டிகளில் மட்டுமே... ஏனெனில் பயணக் களைப்பின்றி உரிய நேரத்தில் அதே சமயம் குறைந்த விலையில் அதிக பாதுகாப்புடன் பயணிக்க ஒரே வழி ரயில் மட்டுமே...

ஆனால் இந்த ரயில் பயணத்தில்  மிகப்பெரிய குறைபாடு ஒன்று உள்ளது. முன்பதிவு செய்யாதவர்கள் அல்லது பயண திட்டமிடல் இல்லாதவர்கள் திடீரென்று ரயிலில்  பயணம் செய்ய இயலாது.. அவ்வாறு செய்தாலுமே பொது இருக்கையில் மட்டுமே இடம் கிடைக்குமே தவிர நமக்கு உரிய தனி இடம் கிடைக்க இயலாது... பொது இருக்கையில் பயணம் செய்வது அனைவருக்கும் சாத்தியமல்ல. பெண்கள், குழந்தைகள் மற்றும்  முதியவர்களுக்கு பொது இருக்கையில் இருக்கை கிடைக்கவில்லை எனில் பயணம் செய்வது மிகவும் சிரமமாகிவிடும். எனவே தான் இந்திய ரயில்வே துறை அனைத்து வர்க்கத்தினரும் மற்றும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய நேற்பவர்களுக்கும் அந்தியோதயா எனப்படும்  முழுவதும் முன்பதிவு இல்லாத  வண்டி ஒன்றை 2017ல் அறிமுகப்படுத்தி உள்ளது.

 அந்தியோதயா என்பதற்கு ஏழைகளுக்காக என்பது பொருள். அந்தியோதயா என்பது ஏழைகளுக்கான ரயில் வண்டி எனப் பொருள்படும். இந்த பொருளுக்கு ஏற்ப ஏழை மக்கள் அனைவருக்கும் உகந்ததாக இருப்பது இந்த ட்ரெயின். இதுவும் மற்ற ட்ரெயின்களை போல அனைத்து வசதிகளும் உள்ளதாகவே உள்ளது. அதாவது மின்சார பொருட்கள் உபயோகப்படுத்துவதற்கான சார்ஜர், டாய்லெட், குப்பைத்தொட்டி மற்றும் தாங்கிகள் போன்று பல வசதிகள் உள்ளன.

சதாப்தி   மற்றும்  ராஜ்தானி போன்ற வண்டிகளில் இருப்பது போன்று உணவு மற்றும்  குழிரூட்டப்பட்ட இருக்கைகள் என வசதிகள் அந்தியோதயா ட்ரெயின்களில் இல்லை. ஆனாலும் இரண்டாம் தர வசதியுடைய இருக்கை அமர்வுகள் உள்ளன. மேலும் சுத்தமான தண்ணீர் இந்திய ரயில்வே துறை வழங்குகிறது. இந்த ட்ரெயினில் பயணிப்பவர்களுக்கு தனியாக உணவுப் பொருள்கள் எதுவும் வழங்கப்படாது. ஏனெனில் இது முழுவதுமாக பட்ஜெட் அதாவது குறைந்த விலையில் பயணத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம். எனவே இதில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் வீட்டில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது நலம். ஆனால் தண்ணீர் தனியாக பொட்டிகளில் அடைக்கப்பட்டு கொடுக்கப்படாது. அதற்கு பதிலாக அங்கங்கே வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே பயணத்தின் பொழுது தண்ணீரும் உணவுப் பொருட்களும் நம்முடைய எடுத்துச் செல்வது சிறந்தது. அதுவும் தண்ணீர் நமது பயணத்தில் மிகவும் அவசியம். எனவே தனிப்பட்ட முறையில் தண்ணீர் எடுத்துச் செல்வது சிறந்தது.

மேலும் இந்த வகை ட்ரைனில் படுக்கைக்கு தேவையான தலையணை மற்றும் படுக்கை பொருட்களும் வழங்கப்பட இயலாது.
 ஏனெனில் இது ஸ்லீப்பர் கோச் போன்று வடிவமைக்கப்பட்டது அல்ல. இது முழுவதும் பகலில் பயணம் செய்வது போன்று அதாவது இருக்கை அமர்வு கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

இது மிகவும் குறைந்த பயண கட்டணம் உடைய வண்டி ஆகும். பொதுவாக  முன்பதிவு இல்லாத கட்டணத் தொகை மற்ற டிரெயின்களுக்கு எவ்வளவு வசூலிக்கப்படுகிறதோ அந்தத் தொகை மட்டுமே இந்த ட்ரெயினில் வசூலிக்கப்படுகிறது.  இதைத் தவிர அதிகபட்சமாக எந்த கட்டணமும் இல்லை. அதனால் தான் இது ஏழைகளுக்கான வண்டி என்று அழைக்கப்பட்டு இருக்கிறது. இது முழுவதுமாக அனைத்து வர்க்கத்தினரும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான் வடிவமைக்கப்பட்டது.

முதல் அந்தியோதயா விரைவு வண்டி எர்ணாகுளம்  சந்திப்பில் இருந்து அவுரா சந்திப்பு வரை 2017 துவங்கி வைக்கப்பட்டது. அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பாபு இதை தொடங்கி வைத்தார்.
தற்போது 15 வண்டிகளுக்கு மேலான அந்தியோதயா ட்ரெயின் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது.




16191 -  தாம்பரம் நாகர்கோவில் அந்தியோதயா ட்ரெயின்.

தினமும் இரவு 11 மணிக்கு தாம்பரத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை வழியாக 12 இடை நிறுத்தங்களுடன் நாகர்கோவிலுக்கு சராசரியாக நண்பகல் ஒரு மணிக்கு செல்கிறது. இது தினசரி வண்டியாகும். சிறிது காலம் மாற்றங்கள் இருந்தாலும் தினசரி இந்த வண்டி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்கிறது. இது 2018ல் முதல் முறையாக இயக்கப்பட்டது.

முன்னதாக இந்த வண்டி திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்பட்டது. பின்பு வேண்டுகோளுக்கு இணங்க நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு தற்சமயம் இயக்கப்பட்டு வருகிறது

இடைநிறுத்தங்கள் :

செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி,  வள்ளியூர்,  நாகர்கோவில்.

இந்த ட்ரைனில் சிறப்பு என்னவென்றால் இதில் உள்ள 16 இரண்டாம் வகுப்பு இருக்கை அமர்வுகளும் மற்றும் இரண்டு பெட்டி பொது இருக்கை பெட்டிகளும்  ஆக மொத்தம் 18 பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகள்.


இது மேற்கூறியவாறு மொத்தம் 15க்கும் மேற்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்லும்.

16192 -   நாகர்கோவில் தாம்பரம் அந்தியோதயா ட்ரெயின்

மாலை 3.50க்கு நாகர்கோவிலில் புறப்படும் இந்த வண்டி 15க்கும் மேற்பட்ட நிறுத்தங்களில் நின்று  காலை 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இடைநிறுத்தங்கள்:

நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி,கோவில்பட்டி, சாத்தூர் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பாதிரி புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்.

3.50க்கு நாகர்கோவிலில் புறப்படும் இந்த வண்டி 15க்கும் மேற்பட்ட நிறுத்தங்களில் நின்று இருந்து காலை 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த வண்டி விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்வதால் முக்கியமான இடை நிறுத்தங்களில் நின்று செல்கிறது. எனவே பெரும்பாலான தென் மாவட்ட மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில நாட்களில் அந்தியோதயா ட்ரைன் புறப்படும் நேரம் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். எனவே பயணம் செய்ய நினைப்பவர்கள் இந்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை அணுகி அதன்மூலம் நேரத்தை அறிந்து கொண்டு பயணம் செய்வது சிறந்தது.

அதிக பணம் செலவழிக்க முடியாதவர்கள் திட்டமிடல் இல்லாமல் பயணம் மேற்கொள்ளுபவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதுபோன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும் சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Labels

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.