இந்த பூங்கார் அரிசி பெண்களின் அரிசி என்று அழைக்கப்படுகிறது
ஏனெனில் இது பெண்களின் ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வதில் முதன்மை பங்கு வகிக்கிறது.
பெண்களின் உடல் சத்தை அதிகரிப்பதில் இதற்கு அதிக பங்கு உண்டு. முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்த அரிசியாக பார்க்கப்படுகிறது.
6 மாதங்களுக்குப் பின்பு கர்ப்பிணி பெண்கள் இதை தினமும் எடுத்துக் கொள்ளும்போது சுகப்பிரசவம் எளிதாகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குவதற்கு உதவுகிறது இதில் உள்ள துத்தநாகம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி உடல் உபாதைகளை தடுக்கிறது.
பூங்கார் அரிசி ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இதில் குறைந்த கொழுப்பு அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
காலப்போக்கில் மறந்துவிட்ட பழந்தமிழர்களின் உணவு முறையை மீண்டும் கடைப்பிடிப்போம். உடலில் வலு சேர்ப்போம்.






No comments:
Post a Comment