ஒரே காயில் எல்லா சத்தும் வேண்டுமா...?
உணவே மருந்து என்பது பழமொழி. அந்த பழமொழி கேற்ப ஆரோக்கியமான உணவுகளை உண்டு எந்தவித நோயும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் அவர்களின் வாழ்வியல் முறைகளை பின்பற்றாமல் இன்று பலரும் பல உடல் உபாதைகளுடன் நீண்ட ஆயுள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படி நம் தவறவிட்ட முறைகளில் ஒன்று பச்சை காய்கறிகளை அதிகமாக சேர்ப்பது.
தினமும் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டு வரும்போது உடல் உறுதியுடன் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் எந்தவித நோயும் இல்லாமல் இருக்கலாம்.
அந்த வகையில் காய்கறிகள் அனைத்தும் மிகவும் சத்து வாய்ந்தது. உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் காய்கறிகளில் அதிகமாக உள்ளது. இறைச்சி அதிகமாக உண்பவர்களை காட்டிலும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்பவர்களுக்கு எந்த வித நோயும் அண்டாது. காய்கறிகளை நம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் பொழுது உடம்பில் சர்க்கரை உப்பு ஆகிய அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கும். இளம் வயதில் தாக்கும் நோய்கள் அண்டாது. முடி வளர்ச்சி வயதிற்கு ஏற்ப உடல் வளர்ச்சி என அனைத்தும் சரியான அளவில் இருக்கும். இவ்வளவு நன்மைகள் வாய்ந்த காய்கறிகளில் மிகவும் சத்து வாய்ந்த எளிமையாக கிடைக்கக்கூடிய வெண்டைக்காய் பற்றி இப்பதிவில் காணலாம்.
வெண்டைக்காய்
வெண்டைக்காயின் நன்மைகள்
வெண்டைக்காயை எவ்வாறு உண்ணலாம் மற்றும் வெண்டைக்காயை எதனால் உண்ணக்கூடாது என்பதனை பற்றி இந்தப் பதிவில் ஆலோசிக்கலாம
மலச்சிக்கல்
வெண்டைக்காய் என்றாலே அனைவராலும் அறியப்படுவது அதிலிருக்கும் நார்ச்சத்து. ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து பலவகையான அற்புதங்களை அளிக்கிறது. வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து உடல் பருமனுக்கு நல்ல ஒரு தீர்வாகும். வெண்டைக்காயின் நார்ச்சத்து உள்ள உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பினை கரைத்து உடல் எடையை குறைப்பதில் உதவி புரிகிறது. நார்ச்சத்து உடைய பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது செரிமான பகுதிகளின் இயக்கம் நன்றாக இருக்கும். அதனால் மலச்சிக்கல் வருவது தவிர்க்கப்படுகிறது. அது போல வெண்டைக்காயில் இருக்கும் நார்ச்சத்து குடல் பகுதிகளுக்கு நல்ல இயக்கத்தை அளித்து மலச்சிக்கல் வர விடாமல் பாதுகாக்கிறது. இப்போதைய காலங்களில் மலச்சிக்கல் என்பது பெரும்பாலானோருக்கு இருப்பதால் அனைவரும் இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கலை தவிர்க்கலாம். மலச்சிக்கல் தான் பிற பெரிய நோய்களுக்கு ஆதாரமாக இருக்கிறது.
சர்க்கரை நோய்
வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்து உண்டு வரும் பொழுது சர்க்கரை நோய் நம்மை தாக்காது. அதுபோல சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை அதிகளவு உட்கொள்ளும் பொழுது சர்க்கரையின் அளவு கட்டுப்பாடுடன் இருப்பதாக கூறப்படுகிறது. யூனோஜெல் எனப்படும் வெண்டைக்காயில் உள்ள ஒரு பொருள் நீரிழிவு வராமல் தடுக்கப்படுவதாக தகவல்கள் உள்ளன.
எலும்பு வளர்ச்சி
வெண்டைக்காயில் காணப்படும
விட்டமின்கள் எலும்பின் உறுதித் தன்மைக்கு உதவுகின்றன. வெண்டைக்காயில் உள்ள விட்டமின் கே எலும்பு வளர்ச்சிக்கும் எலும்பு உறுதியாக இருப்பதற்கும் உதவுகின்றன. எலும்பில் கால்சியம் குறைபாடு, lஎலும்புகள் உறுதியின்மை போன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்து வரும் பொழுது குறிப்பிட்ட மாறுதலை காணலாம்
நினைவு சக்தி
வெண்டைக்காயில் உள்ள சத்து மூளை வளர்ச்சிக்கும் குழந்தைகளின் நுண்ணறிவு வளர்ச்சிக்கும் முக்கியமான காயாக உள்ளது. இது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து புத்துணர்வுடன் செயல்பட உதவுகிறது. வெண்டைக்காயை அதிகமாக உண்பவர்கள் நல்ல நுண்ணறியுடன் மூளையின் செயல்பாடு அதிகமாக இருக்கும்
இது குளிர்ச்சி நிறைந்த காயாக இருப்பதால் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்துகிறது. மேலும் இது உடலில் ஏற்படும் திரவ இழப்பை சரி செய்து உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்துகிறது.
கவனிக்க வேண்டியவை
ஆனால் இது சமைக்கும் விதம் கொஞ்சம் பக்குவமாக செய்ய வேண்டும். இல்லை எனில் அதில் உள்ள குழ குழப்பு தன்மை சமையலில் ருசி இல்லாமல் செய்து விடும்.
அதுபோல வெண்டைக்காயை அதிகமாக உண்பதால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. மேலும் இது குளிர்ச்சி வகை வகையான காய் என்பதால் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது குளிர்ச்சியான உடல் சளி பிடிக்க வாய்ப்பு உண்டு.
கர்ப்பிணிகளுக்கு
இதில் உள்ள நார்ச்சத்து கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் வரக்கூடிய மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. மூன்றாவது மாதத்தில் கர்ப்பிணிகள் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டு வரும் பொழுது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். மேலும் இந்த மாதத்தில் தான் குழந்தையின் நரம்பு வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் வெண்டைக்காய் உட்கொள்ளப்படும் பொழுது நரம்பு மண்டலம் வலுவானதாக உருவாகிறது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயை வரவிடாமல் தடுத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு எந்த வித நோயும் வரவிடாமல் தடுக்கிறது மேலும் கருவில் இருக்கும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். போலிக் அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கிறது. எனவேதான் கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு போலிக் அமில மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள். இந்த போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகள் அது எடுத்துக் கொள்ளும் பொழுது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் கர்ப்பிணிகளின் ரத்த ஓட்டத்திற்கும் நன்மை செய்கிறது.
மேலும் இது கர்ப்பிணிகளின் மன அழுத்தம் நல்ல தூக்கம் பதட்டம் ஆகியவற்றை குறைத்து புத்துணர்வை வழங்குகிறது.
வெண்டைக்காய் தண்ணீர்
இரவு தூங்கும் முன் வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு வைத்து காலை எழுந்ததும் அந்த தண்ணீரை குடித்துவிட்டு அந்த வெண்டைக்காயை மென்று சாப்பிட்டு விட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்து விடும். மேலும் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் இந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் எடையை குறைக்கலாம். எலும்பில் கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் அருந்துவதால் நல்ல பலம் கிடைக்கும்.
பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடலாமா... ?
இந்த காயானது மிகவும் குளிர்ச்சி வாய்ந்தது இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடலாமா என்று கேள்வி எல்லோருக்கும் உள்ளது.வெண்டைக்காய் குளிர்ச்சி மிகுந்த காய் என்பதால் பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடும் பொழுது குழந்தைக்கு சளி பிடிக்கும் மற்றும் குழந்தை மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படும் அதாவது மலமானது குழ குழப்பு தன்மையுடன் வெளியேறும். இதனால் பிறந்த குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம். அதாவது இரண்டு மாதங்களுக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்து பழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஆரம்பத்தில் மலத்தில் ஏதேனும் குழ குழப்புத் தன்மை வெளிப்பட்டால் குறைத்துக் கொண்டு பின்பு சேர்த்துக் கொள்ளலாம்.






No comments:
Post a Comment