பாகற்காயின் கசப்பு அதிகம் தெரிகிறதா ...இதோ உங்களுக்கான டிப்ஸ்

பாகற்காயை கசப்புத் தன்மை  இல்லாமல் எவ்வாறு பயன்படுத்தலாம் ...?

ஆங்கிலத்தில் Bitter Guard  என்று அழைக்கப்படும் பாகற்காய் நம் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய். சுவைகள் ஆறு அந்த அறுசுவையில் மிக முக்கியமான நன்மை அளிக்கும் சுவை கசப்பு. இது அனைவராலும் விரும்பத்தகாத வகையில் இருந்தாலும் உயரிய நன்மைகளைக் கொண்டது. அந்த கசப்பு சுவைக்கு பெயர் பெற்ற காய் பாகற்காய். கசப்பு சுவையானதாக இருந்தாலும் அதில் உள்ள நன்மைகள் உடலுக்கு இனிப்பான நன்மை அளிக்கக் கூடியவை. பாகற்காய் கொடி வகையை சார்ந்தது. பாகற்காய் நிறம் வடிவம் அளவு அவைகளுக்கு ஏற்ப பெயர்கள் உண்டு. இந்தியாவில் மிதிப்பாவை மற்றும் கொம்பு பாவை பரவலாக அறியப்படும்  வகைகள் ஆகும்.

பாகற்காயின் வகைகள் உண்டா...?

 மிதிப்பாவை அளவில் மிகவும் சிறியது. ஆனால் மிகுந்த ருசியை உடையது. கொம்பு பாவை சற்று நீண்டதாக இருக்கும். மேலும் இதன் விதைகள் சற்று பெரிய அளவில் இருக்கும். சில கொம்பு பாவைகள் இன் முனைகள் மழுங்கியதாகவும் காணப்படும். இது பச்சை, அடர் பச்சை மற்றும் வெளிர் நிறத்திலும் காணப்படும். பழுத்தப் பாகற்காய் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். பழுத்தப் பாகற்காயின் உள்ளே நல்ல சிவப்பு நிறமாக காணப்படும்.

பிள்ளை பெற்ற இளம் தாய்மார்களுக்கு பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது அவர்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்.  பாகற்காய் நன்மைகள் மற்றும் அது எவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்வது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.





நன்மைகள்:

சர்க்கரை உள்ளவர்களுக்கு பாகற்காய் இயற்கை அழித்த கொடை . வயிற்றுப்புண் மற்றும் வயிறு உபாதைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வு. வயிற்றில் உருவாகும் பூச்சிகளை அழித்து வயிற்றை சுத்தம் செய்வதில் பாகற்காய்களுக்கு தான் முதலிடம். பாகற்காயில் உள்ள கசப்பு நுண்ணுயிர் மற்றும் பூச்சிகளுக்கு எதிரியாக கருதப்படுகிறது. இது உடலை திடகாத்திரமாக வைக்க உதவும். பாகற்காய் விதைகளிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளது. பாகற்காயின் விதைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
பாகற்காயின் நிலைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும்  பாகற்காயின் விதைகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்க உதவுகின்றன. பாகற்காய் விதைகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் உருவாக்குகிறது.


பாகற்காயில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. எனவே பாகற்காய் ஜூஸ் தினம் குடிப்பவர்களுக்கு உடலுக்குத் தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது.

 நற்பயன் அடங்கிய பாகற்காய் எல்லா காலத்திலும் எல்லா இடங்களிலும் எளிமையான விலையில் கிடைக்கக்கூடிய காய் என்பதால் அனைவரும் இதை பயன்படுத்தலாம்.  பாகற்காயில் ஜூஸ் செய்தும் குடிக்கலாம். சூப் வைத்தும் குடிக்கலாம். அல்லது பாகற்காயை குழம்பு பொரியல், வறுவல், கூட்டு, குழம்பு, மசியல் என அனைத்து வகைகளிலும் தயாரிக்கலாம். ஆனால் இதில் உள்ள கசப்பு தன்மையின் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் இதை விரும்பி உண்ணுவதில்லை.

அனைவரும் பாகற்காய் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு அதன் கசப்பு தன்மையை குறைத்து அதன் சுவையை அனுபவிக்க ஒரு அருமையான டிப்ஸ் இங்கு பதிவிட்டுள்ளோம். 


பாகற்காயின் கசப்புத் தன்மையை குறைப்பது எப்படி...?

 பாகற்காயை சமைக்கும் பொழுது அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்க்கும் பொழுது பாகற்காயின் கசப்பு சுவை குறைக்கப்படுகிறது. உதாரணமாக பாகற்காயை வறுவல் செய்யும்பொழுது பாகற்காய் சேர்த்த பின்பு அதனுடன் சில எலுமிச்சை துளிகளை சேர்க்க வேண்டும். பாகற்காய் வறுவல் கசப்பு இன்றி மிகுந்த சுவையுடன் இருக்கும். இவ்வாறு பாகற்காயை எவ்விதமாக சமைத்தாலும் அதில் சில எலுமிச்சை துளிகளை சேர்க்கும் பொழுது பாகற்காயின் கசப்பு முழுவதும் எலுமிச்சையினால் எடுக்கப்பட்டு கூடுதல் சுவை அளிக்கிறது . பாகற்காயில் வறுவல் பொரியல் பாகற்காய் மசாலா பாகற்காய் கூட்டு மற்றும் பாகற்காய் குழம்பு என அனைத்து வகைகளிலும் பாகற்காய் உணவில் சேர்க்கப்படுகிறது

பாகற்காயில் குழம்பு, பொரியல்,  மசாலா மற்றும் பாகற்காய் வறுவல் என பலவிதமான ரெசிபிகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதன் கசப்பு தன்மையை குறைக்க மற்றொரு வழி ஒன்று உள்ளது. பாகற்காயை சமைப்பதற்கு முன்பு நன்கு கழுவி விட்டு துண்டுகளாக  நறுக்கி அதனை புளித்த மோரில்  சில நிமிடங்கள்  ஊற வைக்க வேண்டும். பத்து முதல் 15 நிமிடங்கள் வரை அதை மூடி ஊறவைத்து பின்பு  சமையலுக்கு பயன்படுத்தலாம். இதனால் பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை குறைந்து உணவின் ருசியை அதிகரிக்கிறது.


பக்க விளைவுகள்:

என்னதான் காய்கறிகளும் பழங்களும் உணவில் அதிக அளவு சேர்த்துக் கொண்டாலும் ஒரு அளவிற்கு மேல் சேர்த்துக் கொள்ளும் பொழுது அது உடலுக்கு ஆரோக்கியக் சீர் கேடை உருவாக்குகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அதுபோல எவ்வகையான சத்துக்களாக இருந்தாலும் அதை அளவுக்கு மீறி சேர்க்கும் பொழுது நமது உடலில் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையை உருவாக்கலாம். எனவே உடலுக்கு ஏற்றவாறு அதனை சேர்த்துக் கொள்ளுதலே சிறந்தது. அந்த வகையில் பாகற்காயையும் அளவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதுவும் இது கசப்பு சுவை பொருந்திய காய்கறி என்பதால் மிக குறைந்த அளவில் அதேசமயம் அடிக்கடி எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சிலருக்கு இன்னும் நன்மை அளிக்கும். பாகற்காயை அதிகமாக உணவில் சேர்க்கும் பொழுது குடலில் உள்ள குடல்  உறிஞ்சிகள் அதன் சத்துக்களை  உட்கிரகிக்காமல் செரிமான குறைபாட்டை உண்டு பண்ணலாம். இதனால் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு உருவாக காரணமாகலாம். ஏனெனில் சிலரின் உடலுக்கு கசப்பு சுவை ஒத்துக் கொள்ளாது. இந்த கசப்பு சுவை ஒத்துக் கொள்ளாதவர்கள் பாகற்காயை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் எடுத்துக் கொள்வது சிறந்தது. இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காயை சேர்த்துக் கொள்ளலாம் என்பது பொதுவான கருத்து என்றாலும் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் சிறந்த மாறுபாட்டை உருவாக்குவதால் அதனை கவனத்துடன் உட்கொள்ள வேண்டும். எனவே ரத்த சர்க்கரைக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது பாகற்காயை எடுத்துக் கொள்ளலாமா என்பதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பாகற்காய் கரு சிதைவுக்கு காரணமாகலாம் என்ற ஒரு பொதுவான கருத்து நம்மிடையே உண்டு. எனவே கர்ப்பிணி பெண்கள் பாகற்காயை அதிகளவு உணவில் சேர்க்கக்கூடாது. மேலும் மாதவிடாயின் போது பாகற்காய் சாப்பிடும் பொழுது அது ரத்தப்போக்கை அதிகரித்து உடலை பலவீனமடைய செய்யலாம். எனவே பெண்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அளவுடன் எடுத்துக் கொள்வது சிறந்தது. பாலூட்டும் தாய்மார்களுக்கு இது சிறந்தது என்றாலும் கசப்பு சுவை பொருந்தியதால் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்  கொள்பவர்களுக்கு சில வரையறைகள் உண்டு. அந்த வகையில் அவர்கள் கோழிக்கறி, அகத்திக்கீரை மற்றும் பாகற்காய் போன்ற பொருட்களை உணவில் சேர்க்கக்கூடாது. பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது சித்தா மருந்துகள் பலனளிக்காமல் செய்துவிடும். எனவே நீண்ட நாள் வைத்தியம் செய்பவர்கள் மற்றும் சித்தா மருந்துகளை உட்கொள்பவர்கள் பாகற்காயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

உடலில் அலர்ஜி, ஒவ்வாமை, சொரி மற்றும் சிரங்கு பிரச்சனை உள்ளவர்கள் பாகற்காயை தவிர்த்தல் நல்லது. ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்பு ஒருவித நச்சு தன்மையை ஏற்படுத்தக் கூடும். இந்த நச்சுத்தன்மையால் மேற்குறிப்பேற்ற பிரச்சினைகள் இன்னும் அதிக அளவில் பெரிதாகலாம்.

இது போன்ற சமையல் குறிப்புகளை  காண நமது பக்கத்தை பார்வையிடுங்கள். உங்கள் விமர்சனங்களை இங்கு கீழே கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Labels

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.