பெண்களுக்கான பூங்கார் அரிசி... ஒரு முறை உபயோகித்து பாருங்கள்...
அந்த வகையில் மிகச் சிறப்பான ஒரு அரிசியை பற்றி இப்பதிவில் காணப் போகிறோம். அவை பாவைருக்கான அரிசி எனப்படும் பூங்கார் அரிசி. பெண்களின் நலனில் முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்களுக்கு வரும் அனைத்து விதமான பிரச்சினைகள், பரம்பரை நோய்கள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் என அனைத்துக்கும் இது ஒரு நல்ல தீர்வானதாகும். இந்த அரிசியின் பயன்களை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பூங்கார் அரிசி:
முன் காலத்தில் வேளாண்மையில் பலவிதமான அரிசிகளை விவசாயம் செய்து வந்தனர். அதில் நிறைய அரிசி வகைகளை நாம் இழந்துவருகிறோம். அப்படி இழந்த அரிசிகளில் முக்கியமான அரிசி பூங்கார் அரிசி.
பூங்கார் அரிசி சிவப்பு நிறத்தில் சாதாரண அரிசி போன்று ஆனால் கொஞ்சம் பருமனாக பெரியதாக காணப்படும். இந்த அரிசி எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் பயிறிட முடியும். இது மாப்பிள்ளை சம்பா போன்று இருப்பதால் சிலர் தவறாக இந்த அரிசியை தவறாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு உண்டு. இதற்கு அறுபாதம் கொடை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
இவ்வளவு நன்மைகளா...?
பூங்கர் அரிசியில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், தயமின், சிங்க், தாது சத்துக்கள் என பல வகையான சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. ஆனால் இதில் உள்ள அதிகப்படியான சத்துக்களின் காரணமாக பெண்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறைந்தது வாரத்துக்கு ஒரு முறை இதை உணவில் சேர்த்து வரும் பொழுது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..
கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் சிறந்தது...?
கர்ப்பிணிப் பெண்கள் இந்த அரிசியை கஞ்சியாக செய்து தினமும் உணவில் சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுக்கு பிரசவத்தை எளிதாக்குகிறது.
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் தடுப்பதோடு செரிமான உறுப்புகள் நன்கு இயங்கவும் உதவுகிறது. இது எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுப் பொருள் என்பதால் குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம். இந்த அரிசி பாலிஷ் செய்யப்படாமல் தான் கடைகளில் கிடைக்கிறது.
பாவையர் அரிசி :
இந்தப் பூங்கார் அரிசி பெண்களுக்காகவே படைக்கப்பட்ட அரிசி என்று கூறலாம். இது கருப்பையில் ஏற்படும் தொந்தரவுகளான கட்டி, வீக்கம் சினைப்பையில் ஏற்படும் கட்டி, வீக்கம், மாதவிடாயில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வேறு வித பிரச்சனைகளான உடல் பருமன், ரத்த அழுத்தம், எலும்புகள் தேய்மானம் என அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்கிறது. மேலும் மாதவிடாயின் போது ஏற்படும் அதிக வலி மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை இது உடனடியாக நிவர்த்தி செய்யக் கூடியது.
இந்த அரிசி பெண்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு நல்ல உணவுப் பொருளாகும். அதாவது பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த அரிசியில் தீர்வு உண்டு. இது கருப்பை கட்டிகள் மார்பக புற்று நோய், சினைப்பையில் வரும் கட்டிகள், நீர்கட்டிகள், வலியுடன் கூடிய மாதவிடாய் சுழற்சி, கருப்பையில் ஏற்படும் அலர்ஜி, கருப்பை தொற்று நோய் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள், கர்ப்ப காலங்களில் ஏற்படும் எதிர்ப்பு சக்தி குறைபாடு, தாய்ப்பால் குறைந்த அளவில் சுரத்தல் என பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்யும் தீர்வு இந்த அரிசிக்கு உண்டு. என்பதால் இது பெண்களின் அரிசி என்று அனைவராலும் அறியப்படுகிறது.
இது செலியாக் எனப்படும் நோயிலிருந்து குணமடைய உதவுகிறது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தத்தை விருத்தி அடைய செய்கிறது. பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் இரத்த குறைபாடு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இவ்வரிசியை அவர்கள் தொடர்ந்து உண்டு வரும் பொழுது ரத்த குறைபாடு நோய் சரி செய்யப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் பாதிக்கப்படும் mood swings எனப்படும் எண்ணங்கள் சமநிலை அற்ற தன்மையில் இருந்து விடுபட இது உதவுகிறது. இந்த அரிசி கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு உதவுவதால் உடல் பரும நோயினால் பாதிக்கப்படுபவர்கள் இந்த அரிசியை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
எவ்வாறு உண்ணலாம் ...?
பூங்கர் அரிசியை சாதாரண அரிசியை போன்று அனைத்து வழிகளிலும் உபயோகப்படுத்தலாம்.
கஞ்சி
பூங்கார் அரிசியை நன்கு கழுவிக்கொண்டு ஒன்றில் மூன்று பங்கு தண்ணீரைக் பானையில் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதி வந்தவுடன் அதில் கழுவி சுத்தம் செய்த பூங்கார் அரிசியை போட்டு நன்கு குழைய வேக வைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளலாம். கஞ்சி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். தண்ணீரை வடிகட்ட கூடாது. ஆரிய உடன் ஊறுகாய் அல்லது ஏதேனும் துவையல் சேர்த்து உண்ணலாம்.
பொங்கல்:
சாதாரணமாக செய்யும் பொங்கலை போன்று இதிலும் செய்யலாம் அதற்கு பூங்கார் அரிசியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரிசியின் அளவில் பாதியளவு பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெருங்காயம் சீரகம் சிறிதளவு மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். நன்கு குழைய வந்தவுடன் இறக்கி விட வேண்டும். பின்பு ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி அதில் கடுகு சீரகம் மிளகு கறிவேப்பிலை மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி பொங்கலில் சேர்க்க வேண்டும். இப்போது சுவையான பூங்கார் பொங்கல் ரெடி. இதனுடன் சட்னி சாம்பார் சேர்த்து உண்ண நன்றாக இருக்கும்.
இட்லி, தோசை மாவு -:
இந்த அரிசியில் இட்லி மாவு தோசை மாவு தயார் செய்து இட்லி தோசையும் செய்யலாம். அதற்கு மூன்று டம்ளர் பூங்கார் அரிசியையும் ஒரு டம்ளர் பச்சரிசியும் எடுத்து நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் . ஒரு டம்ளர் உளுந்து நான்கு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து அதையும் நன்கு ஊற வைக்க வேண்டும். இவை இரண்டையும் ஊற வைப்பதற்கு முன்பு நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னர் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறியவுடன் இதை மாவு போல இட்லி பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து புளிக்க வைக்க வேண்டும். 8 மணி நேரத்தில் மாவு நன்கு புளித்து விடும். அதன் பின்பு இட்லியோ தோசையோ சமைத்துக் கொள்ளலாம்.
கூழ்:
பூங்கர் அரிசியும் கம்பு கேழ்வரகு போன்று கூழ் செய்து சாப்பிடலாம். அதற்கு பூங்கார் அரிசியை நன்கு கழுவி விட்டு சிறிது நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து அதை கூழ் போல காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பிறகு ஆற வைக்க வேண்டும். நன்கு ஆறிய உடன் அதில் கொஞ்சம் தயிர் சேர்த்து மூடி வைத்துவிட வேண்டும். காலையில் பூங்கார் அரிசி கூழ் குடிப்பதற்கு ஏற்றவாறு இருக்கும்.
காலை சிற்றுண்டி:
பூங்கார் அரிசியை மொத்தமாக வாங்கி நன்கு கழுவி காய வைக்க வேண்டும். காய வைத்த பின்னர் கடையில் கொடுத்து அரைத்து வைத்து கொழுக்கட்டை இடியாப்பம் புட்டு போன்ற காலை சிற்றுண்டிகளையும் செய்து கொள்ளலாம்.
ஆக அனைத்து சத்துக்களும் அடங்கிய நம் பாரம்பரிய உணவு பொருட்கள் மிகக் குறைந்த விலையில் நம் கண் முன்னே விளைவிக்க முடிந்தும் அந்நிய உணவுப் பொருட்களை நாம் தேடுவதே பெருகிவரும் நோய்களுக்கு காரணம். நம் மரபு சார்ந்த வேளாண் பொருட்களை மீட்டெடுத்து எதிர்கால தலைமுறையினருக்கும் அளிப்பதே நமது தலையாயக் கடமை.
இது போன்ற தகவல்கள் அறிய எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்ட் பதிவு செய்யவும்...






No comments:
Post a Comment