இன்று பெரும்பான்மையோர் கொத்தனார் மூலமாக வீடு கட்டுவதை விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் சதுர அடிக்கு 2000 ரூபாய்க்கு குறைந்த செலவிலேயே வீடு கட்டித் கொடுக்க தயாராக இருக்கின்றனர். சதுர அடிக்கு 2000 ரூபாய்க்கு குறைந்து வீடு கட்டிக் கொடுப்பது என்பது லாபமான ஒன்றுதான். கொத்தனாரை விட வல்லுனர்களுக்கு கொடுக்கப்படும் தொகையானது அதிகம் தான் என்றாலும் வல்லுனர்களை வைத்து கட்டும் பொழுது வீடு கட்டும் மொத்த செலவில் கணிசமான தொகையை சேமிக்க முடியும்.
ஒரு நல்ல இன்ஜினியரை வைத்து கட்டும் பொழுது கட்டுமான பொருட்களின் மீது அதிக அளவு பணத்தை சேமிக்க முடியும். ஏனெனில் இவர்களுக்கு கட்டுமான பொருட்களின் பயன்பாடு பற்றி அதிக அளவு தெரிந்திருக்க கூடும்... தேவையான தரமான கட்டுமான பொருட்கள் மற்றும் குறைந்த அளவில் உபயோகிக்கும் விதம் ஆகியவற்றை நன்கு அறிந்திருப்பார்.
நாளுக்கு நாள் கட்டுமான பொருட்களின் விலையானது அதிகரிக்க கூடும். நல்ல கட்டிடக்கலை வல்லுநர்கள் இதை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றார் போல் வேலைகளை தொடங்குவர். சில நேரம் காலதாமதம் கூட அதிகமான செலவை உண்டு பண்ண கூடும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் கட்டி முடிக்க சிறந்த திட்டமிடுதல் மிகவும் அவசியம்.
கட்டுமான பொருட்களின் செலவு, குறிப்பிட்ட நேரத்தில் கட்டிடம் முடித்தல், திறமையான வேலையாளர்கள், கட்டுமான பொருட்களின் தரம், மனைகளை மாதிரியின் படி வடிவமைத்தல் போன்ற காரணங்களை மனதில் கொண்டு வல்லுநரை தேர்ந்தெடுக்க வேண்டும். இது போன்று திட்டமிடுதலில் கொத்தனாரை விட இன்ஜினியரை நியமிப்பது மேற்குறிப்பிட்ட செலவுகளில் இருந்து பெரும் கணிசமான தொகையை சேமிக்க முடியும்.
கொத்தனார்கள் சதுரடிக்கு குறைந்த பணத்தை கூறினாலும் கட்டுமான பொருட்கள், காலக்கெடு, தொழிலாளர்களை நியமித்தல் போன்ற காரணங்களில் பெருந்தொகையை செலவழிக்கலாம்.
கட்டிட வரைபடத்தை இன்ஜினியரிடமிருந்து பெற்று விட்டு கொத்தனார் மூலம் கட்டிடத்தை எழுப்ப நினைப்பவர்கள் அதிக தொகையை செலவழிக்க வாய்ப்புள்ளது. வரைபடம் உருவாக்கும் வல்லுநர்கள் மூலமே கட்டிடம் எழுப்புவது மிகவும் நல்லது.
கட்டிடத்துறையில் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இன்ஜினியரை விலைக்கு வாங்கி
வீடு கட்டலாம்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்டில் பதிவு செய்யவும்.
இதுபோன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும்...






No comments:
Post a Comment