இதுவரை பல உலகளாவிய போட்டிகளில் வெற்றி பெற்ற இவர் 2023ல் உலக கோப்பை செஸ் விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் 18-ஆவது வயதில் சதுரங்க உலகக் கோப்பை இறுதிச் சுற்றை அடைந்த இந்தியாவின் மிக இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இறுதிச் சுற்றை அடைந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் அடைந்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் பயின்றவர். வேலம்மாள் வித்யாலயா பள்ளி பல சதுரங்க வீரர்களை உருவாக்குகிறது. இங்கு சதுரங்க போட்டிக்கு என்று தனி பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.
இந்த இளம் வயதில் சாதனையை புரிந்த பிரக்யானந்தாவை இந்திய மக்கள் கொண்டாடி வரும் வேளையில் இதுபோன்ற சாதனையாளர்கள் தமிழர்கள் என்பதில் நாமும் பெருமிதம் கொள்வோம்.
இது போன்ற தகவல்களை அறிய எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களை கமெண்டில் பதிவு செய்யவும்






No comments:
Post a Comment