இப்பகுதியை எடுத்து தான் பொருள்கள் செய்யப்படுகிறது. கருங்காலி மரத்தின் பட்டை பிசின் மரம் என அனைத்தும் பயன்பெறக்கூடியவை. முன்பு உலக்கை, பலகைகள் இம்மரத்தில் இருந்து தான் செய்யப்பட்டுள்ளன.
கருங்காலி மரம் நவகிரகங்களில் செவ்வாயுடன் தொடர்புடையது. செவ்வாயின் ஆதிக்கம் பெற்றிருப்பதால் பல நன்மைகளை தருவதாக இருந்தாலும் நீங்கள் கோபப்படும் பொழுது அது இரட்டிப்பு மடங்காக மாறும்.
இது மின்காந்த அலைகளை ஈர்க்கும் திறன் பெற்றிருப்பதால் இதனால் செய்யப்பட்ட சிற்பங்களை அல்லது குச்சிகளை வீட்டில் வைக்கும் பொழுது நம்மை சுற்றி நேர்மறையான ஆற்றல் உருவாகும். அந்த காலத்தில் மரப்பாச்சி பொம்மைகள் கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டிருக்கும். அந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு விளையாட கொடுக்கும்பொழுது குழந்தைகள் அதை வாயில் வைத்தால் கால்சியம் குழந்தைகளுக்கு சென்று அடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமின்றி குழந்தைகளை எந்தவித எதிர்மறை ஆற்றலும் தாக்காது ஆரோக்கியமாக இருப்பர்.
கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட மாலைகளை அணிவதால் உடலில் எதிர்மறையான எண்ணங்கள் விலகி நேர்மறையான எண்ணங்கள் தோன்றி நல்ல சிந்தனையை தோற்றுவிக்கும். .
கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட மாலைகளை அணியும் பொழுது செவ்வாய் ஆதிக்கம் பெற்றிருப்பதால் இல்லற வாழ்க்கை நலமாக இருக்கும். செவ்வாயின் தாக்கம் அதிகம் இருப்பதால் ரத்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் இது நல்ல பலன்களை கொடுக்கும். ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். கருங்காலி மரம் சேர்த்து கொதிக்க வைக்கப்பட்ட நீரை அருந்தும் போது வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். கொழுப்பு குறையும்.
கோவில் கும்பாபிஷேகத்தின் பொழுது கலசத்தின் உள்ளே கருங்காலி மரப்பட்டை போடுவர். இதன் மூலம் அந்த ஊரானது இடி மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் எந்தவித பாதிப்பையும் அடையாது.
பல நல்ல பயன்களை தரக்கூடிய இயற்கை அளித்த வரப்பிரசாதமான கருங்காலி போன்ற பல நாட்டு மரங்களின் நல்ல பலன்களை அறிந்து எதிர்வரும் தலைமுறையினருக்கு அதை அளிப்பது மட்டுமே நாம் அவர்களுக்கு செய்யும் கடமையாகும்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்டில் பதிவு செய்யவும். இது போன்ற தகவல்கள் அறிந்திட எங்கள் பக்கத்தை தொடரவும்.






No comments:
Post a Comment