வெண்டைக்காய் மூளை செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுபவர்களுக்கு மூளையின் செயல் திறன் அதிகமாக இருக்கும். மூளையின் செயல்திறன் அதிகமாக இருப்பதால் வெண்டைக்காய் சாப்பிடுபவர்கள் நல்ல புத்தி கூர்மையுடன் செயல்படுவர். எனவேதான் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் வெண்டைக்காய் பரிந்துரைக்கப்படுகிறது.
அதிலும் கணக்கு வரவேண்டும் என்றால் வெண்டைக்காய் சாப்பிடும் பழக்கம் நம்மிடையே அதிகமாக உள்ளது. மறதி அதிகமாக உள்ளவர்கள் வெண்டைக்காயை அதிகமாக உண்பதன் மூலம் வராமல் தடுக்கலாம். ஏனெனில் மூளையில் உள்ள நரம்புகளின் இயக்கம் தூண்டப்பட்டு மறதிக்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது. வெண்டைக்காயில் உள்ள போலிக் அமிலம் மூளை வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது.
வெண்டைக்காயில் சத்துக்கள் ஏராளம். அதற்கேற்றால் போல் அதன் ருசியும் அற்புதமாக இருக்கும். ஆனால் வெண்டைக்காயை சமைப்பது ஒரு பக்குவம். இல்லை என்றால் அதிலிருக்கும் குழகுழப்புத் தன்மை வெண்டைக்காயை சாப்பிட விடாமல் செய்துவிடும். தொண்டை சளி பிரச்சனைகளுக்கு வெண்டைக்காயின் சூப் நல்ல தீர்வாகும்.
வெண்டைக்காய் செல்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கிறது. எனவே வெண்டைக்காய் சாப்பிடும் பொழுது தீய செல்கள் அளிக்கப்பட்டு புதிய செல்கள் உருவாக காரணமாகிறது.
வெண்டைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டும் அல்லாமல் ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தத்தையும் குறைத்து உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. உடல் எடையை சரியான அளவில் வைத்திருக்க நினைப்பவர்கள் வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது. அதிக சத்துக்கள் உள்ள வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வரும் போது நிறைய பலன்கள் கிடைக்கும் என்றாலும் இந்த குளிர்ச்சி வகை காய்கறியை தினமும் சாப்பிடும் போது சிலருக்கு சளி தொந்தரவு ஏற்படலாம். எனவே சிறிதளவு கவனமும் தேவை.
வெண்டைக்காயில் உள்ள குழகுழப்புத் தன்மை காரணமாக சிலருக்கு வெண்டைக்காய் என்றாலே பிடிக்காது. வெண்டைக்காய் ஒரு குளிர்ந்த வகை காய்.
வெண்டைக்காயில் உள்ள இரும்பு சத்து குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அதிக உறுதியையும் ஆரோக்கியத்தையும்
கொடுக்கும். வெண்டைக்காயை எளிய முறையில் குழகுழப்புத் தன்மை அல்லாமல் ருசியாக செய்வது எவ்வாறு என்பதை கீழே காணலாம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
தேங்காய் - ஒரு டீஸ்பூன் (துருவியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி அதன் ஈரப்பதம் போகும் வரை உயர்த்தி விட்டு பின்ப வேண்டிய அளவில் சிறிது சிறிதாக வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக கழுவிக்கொண்டு சிறிய அளவில் நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் சட்டி சூடானதும் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட வேண்டும் கடுகு பொரிந்த உடன் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை பொரிந்த உடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் நறுக்கிய வெண்டைக்காயை போட வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்
வெண்டைக்காயை சமைக்கும் பொழுது மூடிக்கொண்டு மூடக்கூடாது.
தண்ணீர் தெளிக்க கூடாது.
வெண்டைக்காய் அந்த எண்ணெயிலேயே சுருள வதக்க வேண்டும். சில சமயம் வெண்டைக்காய் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கும் அல்லது சிறிதளவு குழகுழப்பு தன்மை வெளிப்படும். அதற்காக நாம் எதையும் சேர்க்கத் தேவையில்லை. அது எண்ணெயிலேயே வதங்கி வரும். அப்படி கடைசி வரை குழகுழப்பு தன்மை போகவில்லை எனில் சிறிதாக அரிசி மாவு கொஞ்சம் தூவிக்கொள்ளலாம். முடிந்தவரை எண்ணெயிலேயே அது வேகுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஓரளவுக்கு நன்கு வெந்ததும் வெண்டைக்காய் தனித்தனியாக பிரிந்து இருக்கும். அப்பொழுது மிளகாய்த்தூளை தூவி கிளறி அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து மீண்டும் வதக்க வேண்டும். உப்பு அளவு பார்த்துக்கொண்டு தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். நன்கு வெந்தவுடன் துருவிய தேங்காயை தூவி விட வேண்டும். தேங்காய் தூவி இரண்டு மூன்று நிமிடங்களில் இறக்கி வைக்க வேண்டும். எளிய முறையில் வெண்டைக்காய் பொரியல் ரெடி. சாம்பார் சாதம், தயிர் சாதம் என அனைத்து வகை சாதங்களுக்கும் இது ஏற்ற வகை பொரியல். வெண்டைக்காயை விரும்பி உண்பவர்கள் இந்த பொரியல் செய்து பார்க்கலாம். வெண்டைக்காயை பிடிக்காதவர்களும் இந்த பொரியலை விரும்பி உண்பர்
இதில் எந்தவித சத்துக்களும் வீணாவதில்லை. வெண்டைக்காயின் ருசியும் அபாரமாக இருக்கும். வீட்டில் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யவும். வெண்டைக்காயை மறுபடி மறுபடி சூடு செய்து சாப்பிடக்கூடாது. சமைத்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். அதிக செலவில்லாமல் குறைந்த நேரத்தில் சமைத்து முடிக்கக்கூடிய பொரியல் வகைகளில் இதுவும் ஒன்று
மேலும் இது போன்ற தகவல்களை அறிந்திட எங்கள் பக்கத்தை தொடரவும்.
சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்..






No comments:
Post a Comment