பேன் தொந்தரவா...? சீதாப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா.... ?

சீதாப்பழத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா...?

அனோனா ரெட்டிகுலேட்டா என அறிவியல் பெயரைக் கொண்ட சீதாப்பழ மரம் ஒரு நடுத்தர அளவிலான மரமாகும். பளபளப்பான பச்சை இலைகளைக் கொண்ட இம்மரத்தின்  பழமும் பச்சை நிறத்திலேயே உருண்டை வடிவில் ஆப்பிள் போன்ற அளவில் காணப்படும்.  இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சில அமெரிக்க நாடுகளில் இந்த மரமானது செழித்து வளர்கிறது. மரம் வளர்வதற்கு நல்ல சத்துள்ள மண்ணும், வெப்பநிலை மற்றும்  மழைப்பொழிவு என அனைத்தும் இன்றியமையாதது. குளிர் பிரதேசங்களில் குளிர்காலத்தில் இந்த மரங்கள் வளராது. இம்மரத்தின் பழங்கள் மிகுந்த சுவையுடையது.
 மற்றும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுவதால் இப்பழத்தின் பெயரிலேயே  மரமானது அழைக்கப்படுகிறது. அது மட்டும் இன்றி இம்மரத்தின் இலைகள் மற்றும் வேர்கள் அனைத்தும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகின்றன.  சீதா பழத்தை பற்றி மட்டும் தெரிந்தவர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சீதாப்பழம் மட்டும் அல்ல அதில் உள்ள இலைகளும் கொட்டைகளும் கூட நல்ல பயன்களை அளிக்கும்... பொதுவாக அனைத்திடங்களையும் வளரக்கூடியது. எளிதாக எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது என்றாலும் இதன் முழு பலனையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை இதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.


உள்ளடக்கம்:

1. சீதாப்பழத்தின் நன்மைகள்

2. சர்க்கரைக்கு மாற்று

3. முடி வளர்ச்சியில் சீதாப்பழத்தின் பங்களிப்பு

4. தலைப் பேன்களும் சீத்தாப்பழ         கொட்டைகளும்

5. சீத்தாப்பழம் இலைகளின் பயன்கள்


சீதாப்பழத்தின் நன்மைகள்:

பல்வேறு ஊட்டச்சத்துக்களை அடங்கிய சீதாப்பழம் மிகவும் இன்ப சுவை உடையது. மாவு தன்மை கொண்ட இந்த பழம் எடை அதிகரிப்போடு தொடர்புடையது. இப்பழத்தின் முதன்மையான நற்குணம் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான பகுதிகளை நன்கு இயங்க வைக்கிறது. இதனால்  ஜீரண சக்தி மலச்சிக்கல்  வராமல்  பாதுகாக்கிறது. சீதாப்பழத்தை நம் உணவில் சேர்க்கும் போது  மேலும் பல நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. இதில் விட்டமின் சி விட்டமின் பி நார்ச்சத்து தாது உப்புக்கள் என பல்வேறு வகையான சத்துக்கள் இப்பழத்தில் அதிகமாக உள்ளன. இந்த பழத்தில் உள்ள  பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பேணுவதில் முதன்மை வகிக்கிறது. இதில் காணப்படும் விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கிறது. மற்ற பழங்களை விட சீதாப்பழத்தில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகள் உறுதியானதாகவும் வலிமையானதாகவும் இருப்பதற்கு உதவுகிறது.

சர்க்கரைக்கு மாற்று:

 தற்பொழுது நிறைய மக்கள் சர்க்கரைக்குப் பதிலாக  சீதாப்பழ சதைகளை இனிப்பாக பயன்படுத்துகின்றனர்.பழகக்கூழ் மற்றும் இனிப்பு பானங்களை தயார் செய்யும் பொழுது அதில் சர்க்கரைக்கு பதிலாக சீதாப்பழ சதைகளில் செய்யப்படும் பொடிகளை மாற்றாக உபயோகிக்கின்றனர். எனவே இனிப்பு விரும்பிகளுக்கு ஒரு நல்ல சத்தான இனிப்பு பொருள் இந்த சீத்தாப்பழத்தின் உலர்ந்த பொடி...


முடி வளர்ச்சியில் சீதாப்பழத்தின் பங்களிப்பு:

உடல் வளர்ச்சிக்கு நன்மை அளிப்பதோடு மட்டும் அல்லாமல்  முடி வளர்ச்சிக்கும் நன்மை அளிக்கிறது. சீதாப்பழத்தின் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு அழுத்ததை கொடுத்து முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது...

பெண்களின் தலைமுடி சீக்கிரமாக அழுக்கு படியும் தன்மை கொண்டது. அதுவும் தற்போதைய காலங்களில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக போக்குவரத்து புகை, மாசுபட்ட காற்று போன்ற காரணங்களால் தலைமுடியானது அதன் மென்மையை இழந்து எளிதில்  அழுக்கு படிந்து விடுகிறது.

 உடனே அந்த அழுக்கானது பொடுகாக மாறி தலையில் பேன் அதிகமாக வளர்வதற்கும் காரணம் ஆகிறது. தலையில் பேன் அதிகமாக இருப்பதால் தலைமுடி சுத்தம் இல்லாமல் அதிகமாக கொட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது தலையில் அலர்ஜியையும் உருவாக்கும்.


 இந்தப் பிரச்சினையை எளிதில் தீர்ப்பதற்கு  சீத்தாப்பழத்தின் இலைகளும் கொட்டைகளும்  சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகிறது.

தலைப் பேன்களும் சீத்தாப்பழ கொட்டைகளும்:

 சீதா பழத்தின் கொட்டைகளை  அரைத்து அதை பொடியாக்கி கொள்ள வேண்டும். தலைக் குளிக்கும் பொழுது அந்த பொடியை நீரில் கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்து தண்ணீரைக் கொண்டு அலச வேண்டும்.  இதை வாரத்திறகு இரண்டு முறை செய்து வரலாம். இவ்வாறு உபயோகப்படுத்தி வரும் பொழுது தலையில் உள்ள பொடுகு  மற்றும் பேன்களும்  முற்றிலுமாக நீங்கிவிடும்.  நீண்ட நாட்களாக இந்த முறை கடைபிடிக்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் நெடுங்காலமாக நம் மக்கள் இம்முறையை பயன்படுத்தி வருகின்றனர். 

 ஆனாலும் தற்போது மருத்துவத் துறையில் சீதாப்பழத்தின் கொட்டைகளை கொண்டு தலைமுடியை அலசும் பொழுது அது கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வு அறிக்கைகள் உள்ளன. சீதாப்பழக்கொட்டையில் இருக்கும் ஒரு சில நச்சு பொருள்கள் தலைக்கு குளிக்கும் போதுகண்ணில்  படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே இவை கண்களை பாதிக்கலாம் என மருத்துவர்கள் சிலர் கூறியுள்ளனர்.

எனவே கொட்டைகளை அரைத்து தலைக்கு பூசும் பொழுது தங்களுடைய மருத்துவரை கலந்து யோசித்து பின்பு பயன்படுத்தலாம்.


சீத்தாப்பழம் இலைகளின் பயன்கள்:

மற்றொரு முறையான  சீதாப்பழ இலைகள், வேப்பிலை மற்றும் துளசி இது மூன்றையும் அரைத்து தலையில் ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் தலையில் உள்ள பேன் மற்றும் பொடுகானது  ஆகியவை நீங்கிவிடும். அல்லது இது மூன்றையும் அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை தனியாக எடுத்துக் கொள்ளவும். அந்தச் சாற்றை உச்சந்தலையில் இருந்து முடியின் நுனிவரை மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் நன்கு ஊறியவுடன் சீப்பு  கொண்டு சீவூம் பொழுது தலையில் இருக்கும் பேன்கள் அனைத்தும் வந்துவிடும். அதன் பின்பு மைல்ட் ஷாம்புவால் தலையை அலசினால் மீதமுள்ள பேன்களும் வந்து விடும்.

 இதை வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு இரு முறை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். இது தலைக்கு மிகுந்த குளிர்ச்சி அளிப்பதால் குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாதவர்கள் சோதனைக்குப் பின்பு தொடர்வது அல்லது தவிர்ப்பது நல்லது.

சீதாப்பழம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சீதாப்பழம் மற்றும் மரத்தின் ஏனைய பொருள்கள்  சிலருக்கு அலர்ஜி போன்ற காரணங்களை ஏற்படுத்துவதால் ஒருமுறை உபயோகப்படுத்தி தெரிந்து கொண்ட பின்பு இதைத் தொடர்வது நல்லது. 

 இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களைப் பெற எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகத்திற்கு கமெண்டில் பதிவு செய்யவும்


Share:

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Labels

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.