பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தவிர நாம் எந்த உணவும் கொடுப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு போதிய அளவு ஊட்டச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், மற்றும் வைட்டமின்கள் என அனைத்தும் தேவைப்படும். இவை அனைத்தும் தாய்ப்பாலிலே இருப்பதால் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி திறனோடு ஆரோக்கியத்துடன் இருப்பர்.
தாய்ப்பால் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு உடல் பரும பிரச்சனைகள் பிற்காலத்தில் வருவதில்லை தாய்ப்பால் உட்கலும் குழந்தைகளுக்கு எந்தவித செரிமான பிரச்சனைகளும் வருவதில்லை. ஏனெனில் இது குழந்தைகளின் செரிமான உறுப்புகளுக்கு ஏற்றவாறு எளிய வகை உணவாகும் பொதுவாக தாய்ப்பால் உட்கொள்ளும் குழந்தைகள் குண்டாக இருக்க மாட்டார்கள் ஆனால் அவர்களின் உடல் உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும் ஏனெனில் தாய்ப்பாலை கொழுப்புச்சத்தை விட பிறச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் சரி. தாய்மார்களுக்கும் சரி அதிக நோய் எதிர்ப்பு திறன் உருவாகிறது.
ஆராய்ச்சியின் படி தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பு புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது. தாய்ப்பாலில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் குழந்தைகளின் பற்களுக்கும் எலும்புகளுக்கும் உறுதியையும் நீண்ட ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றன.
மேலும் இது குழந்தைகளுக்கும் தாய்க்கும் இடையே மனரீதியான உடல் ரீதியான அதிக நெருக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. அதிகமான நாட்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு உடல் எடை சீக்கிரமாக அதிகரிக்காது. பொதுவாக கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்கு பின்பு பெண்களின் உடல் அதிகரிக்கச் செய்யும். ஆனால் தாய்ப்பால் அதிக அளவில் அதிக நாட்களுக்கு கொடுக்கப்படும் பொழுது உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படுகிறது. பிரசவத்திற்கு பின்பு பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு.. ஆனால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம் வருவதில்லை. தாய்ப்பால் கொடுத்தலின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது.
அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாய்ப்பால் ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு ஒரு சரிவிகித உணவாகும். மருத்துவர்களால் இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது ஆறு மாதங்கள் கட்டாயம் என அறிவுறுத்தப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடால் ஏற்படும் நோய்களிலிருந்தும் ஊட்டச்சத்துக் குறைபாடு இறக்கும் நிலையில் இருந்து விடுபடுகின்றனர்
தாய்ப்பால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது குழந்தை எந்தவித நோய் நொடியும் இன்றி ஆரோக்கியத்துடன் இருக்கும்.
ஆனால் தற்போதைய காலங்களில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் போதிய அளவில் இல்லாத காரணத்தினால் குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் கொடுக்கப்பட இயலவில்லை. ஃபார்முலா மில்க் எனப்படும் புட்டிகளில் அடைக்கப்பட்ட பவுடரைக் கொண்டு தான் தற்காலங்களில் கொடுக்கப்படுகிறது. நம் வீட்டு பெரியவர்கள் அந்த காலத்தில் சாதாரண உணவு மூலமாகவே சரி செய்துள்ளனர். தாய்ப்பால் சுரப்பதில் பலவகையான உணவுப் பொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதில் பூண்டு மிக முக்கியமான ஒன்று. பூண்டு அதிகமாக உட்கொள்ளும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகமாகவும் நீண்ட நாட்களுக்கும் இருக்கும். ஏனெனில் பூண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல் அடர்ந்த பாலாகவும் கொடுக்கிறது. அவ்வாறு பூண்டு மூலம் செய்யும் கஞ்சி ஒன்றுதான் இங்கு தீர்வாக கூறப்பட்டுள்ளது.
வீட்டில் இருக்கும் பொருளை வைத்து கஞ்சி செய்து காலை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது தாய்ப்பால் சுரப்பு போதிய அளவில் நீண்ட நாட்களுக்கு சுரக்கும்.
அந்த கஞ்சியை செய்யும் விதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது இருவர் காலை உணவாக எடுத்துக் கொள்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள அளவு
தேவையான பொருட்கள்:
வெள்ளைப் பூண்டு - 10
பச்சரிசி - ஒரு டம்ளர்
அல்லது
வரகு அரிசி - ஒரு டம்ளர்
வெந்தயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சோறு வேக வைப்பது போல் இந்த கஞ்சியும் மிகவும் எளிதானது முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் கஞ்சி பதத்திற்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதி வந்தவுடன் தண்ணீரில் பச்சரிசி, பூண்டு மற்றும் வெந்தயம் மூன்றையும் உப்பு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். அது ஒன்றுடன் ஒன்று இணைந்து மசிந்து வரும் வரை வேக வைக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் கஞ்சி பதத்திற்கு வரும். இப்பொழுது அடுப்பை அணைத்து கஞ்சியை ஆற வைத்து ஏதாவது துவையலுடன் இதை உண்ணலாம்.
இதில் பச்சரிசிக்கு பதிலாக வரகரிசி சேர்த்தாலும் சுவை நன்றாக இருக்கும். வரகரிசி சீக்கிரமாக வெந்துவிடும்.
அதற்கு பதிலாக வேறு ஏதாவது சிறுதானியங்களும் சேர்த்துக் கொள்ளலாம். சிறுதானிய வகை சேர்த்து இந்த கஞ்சி செய்யும் பொழுது தண்ணீர் கொஞ்சம் அதிகமாக வைக்க வேண்டும். இது தாய்மார்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அனைவரும் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம் சிறு தானிய வகை சேர்த்து இந்த கஞ்சி வைக்கப்படும் போது அது மிகச்சிறந்த காலை உணவாக பார்க்கப்படுகிறது.
தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது வாரத்திற்கு இருமுறையாவது குறைந்தது எடுத்துக் கொள்ள வேண்டும். இதை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் பொழுது தாய்ப்பால் குறைபாடு வரவே வராது. கர்ப்பத்திற்கு பின்பும் எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் சுரப்பு நீண்ட காலம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். ஏதேனும் துவையலுடன் இதை சேர்த்து சாப்பிடும் போது ருசியும் நன்றாக இருக்கும். புதினா துவையல் இன்னும் உகந்ததாக இருக்கும்
இதுபோன்ற தகவல்களை அறிந்திட எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்






No comments:
Post a Comment