பொதுவாக பெண்கள் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளும் பராமரிப்பு முறைகளை கர்ப்ப காலத்திற்குப் பின்பு அதை கைவிட்டு விடுகின்றனர். கர்ப்ப காலத்திற்கு பின்பும் குழந்தைக்கும் தாய்க்கும் அதிக கவனிப்பு மிகவும் அவசியம்.
முதலில் குழந்தை பிறந்த 30 நாட்கள் வரை தாய் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு காரம் புளிப்பு பாதி அளவே இருக்க வேண்டும். 30 நாட்கள் கழித்த பின்பு சாதாரண உணவு வகைகளை எடுத்துக் கொள்ள தொடங்க வேண்டும். ஏனெனில் இவைகள் குழந்தையின் செரிமானத்தை பாதிக்கலாம். எனவே எளிய உணவு வகைகளை மிகக் குறைந்த அளவில் உப்பு காரம் புளிப்பு சேர்த்து உண்ண வேண்டும். 30 நாட்கள் கழித்து சிறிது சிறிதாக அதிகரித்து சாதாரண உணவுகளை பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குள் இருக்கும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் உணவுதான் குழந்தைக்கும் அந்த தாய்க்கும் நெடுங்காலத்திற்குரிய ஊட்டச்சத்தை அளிக்கின்றன. அந்த வகையில் சில விஷயங்கள் செய்யும் போது நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
பச்சிளம் குழந்தையை பராமரித்தல் நம் முன்னோர்கள் ஒரு கலையாக செய்து வந்தனர். வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பொழுது குழந்தையை குளிக்க வைப்பதில் இருந்து மொத்த பராமரிப்பும் அவர்களுடைய பொறுப்பில் இருந்து விட்டது.
ஆனால் தற்போதைய காலங்களில் குடும்பங்கள் மிகவும் குறுகிய நிலையில் உள்ளன. பெரும்பாலும் வேலைக்கு செல்லும் குடும்பத்தார்களுக்கு இது போன்ற விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதுவும் நோய் பரப்புவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
பச்சிளம் குழந்தை வைத்திருப்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மாலை நேரங்களில் சூரியன் மறைந்த பின்பு ஏற்பட்டிருக்கும் இருள் குழந்தைகளுக்கு ஒத்து வர நீண்ட நாட்கள் எடுக்கும். எனவே குறைந்தது மூன்று மாதங்கள் வரை குழந்தைகளை மாலை நேரங்களில் வெளியே கொண்டு செல்வது கூடாது. அதேபோல் குழந்தைகளை இருளில் வைத்திருக்கவும் கூடாது.
பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது ஈரத் தலையுடன் பால் கொடுக்க கூடாது இது குழந்தைகளுக்கு எளிதில் சளி பிடிக்க நேரிடலாம்.
பொதுவாக குழந்தைகளுக்கு தங்களுக்கு ஏற்படும் உபாதைகளை வெளியில் சொல்ல இயலாமல் அழுது கொண்டே இருப்பர். அல்லது அவர்களின் நடவடிக்கைகளில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படலாம். எனவே பெரியவர்கள் அல்லது தாய் மட்டுமே அதை உணர்ந்து அவர்களுக்கு பிரச்சினையை சரி செய்ய இயலும். எனவே எப்பொழுதும் குழந்தையின் நடவடிக்கைகளில் அதிகம் கவனம் தேவை
தாய்மார்கள் மிகவும் குளிர்ந்த வகை உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. சில வகைப் பொருள்களினால் குழந்தைகளுக்கு மாந்தம் எனப்படும் வயிற்று பேதி உருவாகும் எனவே அதை தாய்மார்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதில் முக்கியமான ஒன்று மாம்பழம். ஆனால் இது போன்ற உணவுகளை சிறிது சிறிதாக சேர்த்து குழந்தைக்கு பழக்கப்படுத்த வேண்டும். இல்லையெனில் மொத்தமாக குழந்தைக்கு சேராமல் போய்விடும்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது குழந்தையை பொதுவாக மடியில் வைத்திருப்போம். அப்பொழுது தலையை சொரிய கூடாது. தலையை சொரியும்போது தலையில் இருந்து பொடுகு அல்லது பேன் குழந்தைக்கு எளிதில் பரவக்கூடும்.
பொதுவாக குழந்தை மடியில் அல்லது அருகில் வைத்து இருக்கும் பொழுது நாம தலையில் கையை வைக்கவே கூடாது. பெரும்பாலான நோய் தொற்று தலைவலியாகவே குழந்தைகளுக்கு பரவுகின்றன மேலும் சிறு முடி கூட குழந்தைக்கு நோய் தொற்றை ஏற்படுத்தலாம்.
குழந்தையை குளிக்க வைக்கும் பொழுது பெரும்பாலான தாய்மார்கள் குழந்தையின் தலையை கீழே வருமாறு உடற்பகுதி அதாவது கால் மேலே வருமாறு தமது காலில் வைத்து குளிப்பாட்டுவர். அது தவறு குழந்தையின் தலை கீழ்நோக்கி இருக்கும்பொழுது குழந்தையின் எடை முழுவதும் கீழ் நோக்கி செல்கிறது. இதனால் குழந்தையின் குடல் ஏறுவதற்கு வாய்ப்பு உளளது. மேலும் குழந்தையின் இந்த நிலை குழந்தைக்கு அசௌகரியத்தை உண்டு பண்ணும். சில குழந்தைகளுக்கு குமட்டல் வரவும் ஏதுவாகிறது.
நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த நாட்டு மருந்து சிலவற்றை வீட்டில் வைத்திருப்பது நல்லது. ஏனெனில் காய்ச்சல் வயிற்று வலி போன்ற உபாதைகளுக்கு உடனே மருத்துவரை அணுகாமல் சில விஷயங்களை வீட்டிலே செய்து பார்த்துவிட்டு பலனளிக்காவிட்டால் மருத்துவரை நாடுவது நலம்.
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு நிற்காமல் போகிறது என்றால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் பெரும்பாலான குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படும் பொழுது அவர்களின் நீர்ச்சத்து முழுவதுமாக குறைந்து உயிரிழப்பு நேரிட வாய்ப்ப அதிகம்.
பாலூட்டும் தாய்மார்கள் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். ஏனெனில் பாலூட்டுவதால் ஒட்டுமொத்த நீர் சத்தும் உடலில் குறைந்து விடும். உடலில் நீர்ச்சத்து குறைவதால் உடல் வெப்பம் அதிகரிப்பு, மலச்சிக்கல், மூலம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.
பெரும்பாலும் தாய்மார்கள் மூலநோயால் பாதிக்கப்படுவதற்கு பாலூட்டும் காலங்களில் சரிவர நீர் அருந்தாததே காரணம். சராசரியாக குடிப்பதை விட இரு மடங்கு நீர் அதிகமாக அருந்த வேண்டும். பழச்சாறு, சூப் போன்ற பானங்களை அதிகமாக பருக வேண்டும்.
நல்ல சத்துள்ள பொருட்களை உண்ணுவதுடன் நார்ச்சத்துள்ள பொருட்களை உண்பது குழந்தைகளுக்கு மலம் கழிப்பது போன்றவற்றில் சிக்கலை உண்டு பண்ணாமல் தவிர்க்கும்.
குழந்தைகள் காரணம் இல்லாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பது
தொடர்ந்து தூங்குவது என இரண்டுமே ஏதாவது ஒரு பாதிப்பின் அறிகுறி.
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தால் வயிற்று வலி அல்லது காது வலி போன்ற ஏதாவது ஒன்று காரணமாக இருக்கலாம். எனவே குழந்தைகள் மருத்துவரை உடனடியாக அணுகுவது சிறந்தது.
குழந்தைகளை குளிப்பாட்டும் பொழுது மிகவும் கவனமாக குளிப்பாட்ட வேண்டும். எடுத்துக்காட்டாக குழந்தை தண்ணீர் குடிக்காமல் அதே சமயம் காதில் தண்ணீர் செல்லாமல் குளிக்க வைக்க வேண்டும்.
தண்ணீரில் நிறைய நேரம் வைத்திருக்கக் கூடாது. வேக வேகமாக குளிக்க வைத்து துடைத்து விட வேண்டும். தலையில் நீர் அதிக நேரம் இருக்கக் கூடாத. தலையில் நீர் சென்று விடக்கூடாது என்பதற்காக உச்சியில் விபூதி வைப்பர். இது குழந்தையின் தலையில் பொடுகை உருவாக்கி புண்கள் வரச் செய்து விடும். இதற்கு பதிலாக பால் சாம்பிராணி வாங்கி குழந்தைகள் முடியை காய வைக்கலாம். குழந்தைக்கு அதிகபட்சமாக ஒரு வருடத்திற்குள் மொட்டை எடுக்க வேண்டும். ஏனெனில் வயிற்றிலிருந்து உருவான பொழுது இருந்த முடி தலையில் அதிக நாட்களுக்கு வைத்திருக்கும் பொழுது குழந்தைகளுக்கு நோயை உண்டு பண்ண கூடும். அதிக முடி இருப்பது அதிக வியர்வைக்கு காரணமாகிறது. அதிக வியர்வை குழந்தைக்கு சளி பிடிக்க முக்கிய காரணம்.
அதுபோல குழந்தைகளுக்கு அடிக்கடி ஏதாவது ஒரு நோய் திரும்பத் திரும்ப உடல் நல குறைபாடு ஏற்பட்டு கொண்டே இருந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதாக எடுத்துக் கொள்ளலாம். எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இருந்தால் குழந்தையின் உயிருக்கு சக்தி குறைவாக உள்ளதாக
ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. மருத்துவர் அனுமதி இல்லாமல் எந்தவித மருந்தையும் குழந்தைகளுக்கு அளிக்கக்கூடாது. வீட்டு வைத்தியம் கை வைத்தியம் போன்றவை தேவை இல்லாமல் குழந்தைகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால் ஒழிய எதையும் கொடுக்கக் கூடாது.
குழந்தைகளுக்கு அதிக நேரம் டயாபர் அணிவித்தல் கூடாது. அது குழந்தைகளுக்கு எரிச்சல், தோல் சிவத்தல் மற்றும் தோல் காயம் போன்றவை ஏற்படக் கூடும். டயபர் குழந்தைகளுக்கு அசௌகரியமான ஒன்று.
முடிந்த அளவு சிரமம் பார்க்காமல் காட்டன் நாப்கின்கள் அல்லது துணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மலம் சிறுநீர் கழிக்கும் பொழுது துணிகளை உடனுக்குடன் மாற்ற வேண்டும். எப்பொழுதும் ஈரத்துடன் குழந்தைகளை வைக்கக்கூடாது அவர்கள் மேனி எப்போதும் உலர்ந்ததாக இருக்க வேண்டும்.
கோடை காலங்களில் குழந்தைகளுக்கு பருத்தியிலான நூலாடைகள் வாங்கி அணிவிப்பது சிறந்தது. குழந்தையிடம் காணப்படும் மாறுபாடுகளை உடனுக்குடனே கவனித்து சரி செய்வதே குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான ஒன்றாகும்.
தாயும் சேயும் நலமாக இருக்க நம் முன்னோர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுவதை மட்டும் தொடர வேண்டும். நாமாக எதையும் செய்யாமல் ஆரோக்கியத்துடன் குழந்தையை வளர்ப்போம்.
இதுபோன்ற பதிவுகளுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.






No comments:
Post a Comment