குழந்தைகளை தூக்கும் பொழுது கைகளை சுத்தமாக வைத்திருப்பது உறுதி செய்ய வேண்டும். வெளி ஆட்கள் குழந்தைகள் தூக்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தூக்கும் பட்சத்தில் சுத்தமாக கையாள வேண்டும். குழந்தைகளின் ஆடைகள் தூய்மையாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை அவர்கள் துணிகளை தனியாக துவைக்க வேண்டும். சுடுதண்ணியில் துவைத்து டெட்டாலில் ஊற வைத்து நல்ல வெயிலில் காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும். அவர்கள் மலம் சிறுநீர் கழிக்கும் ஆடைகளை தனியாக துவைத்து வெயிலின் காய வைக்க வேண்டும்.
பொதுவாக பிறந்த குழந்தைகள் முதல் ஆறு மாத குழந்தைகள் வரை மலம் கழிப்பதற்கு நேரம் காலம் கிடையாது. புதிதாகப் பிறந்த குழந்தை அதாவது பிறந்த இரண்டு மூன்று நாட்கள் வரை குழந்தைகள் கருப்பு அல்லது அடர் நிறத்தில் மலம் கழிப்பர். சில குழந்தைகள் அடிக்கடி மலம் கழிப்பர். சில குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு தடவை அல்லது இரு நாட்களுக்கு ஒரு தடவை என்ற வகையிலே மலம் கழிப்பர். தாய்ப்பால் அருந்துவதால் இது நடக்கலாம்.
குழந்தைகளுக்கு பெரும்பாலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் அதிகமாக புட்டிப் பால் கொடுப்பதால் ஏற்படலாம். குழந்தைகள் குறைந்தது இரண்டு முதல் ஏழு முறை வரை மலம் கழிக்கின்றனர். இது இயல்பு. மூன்று மாதங்களுக்குப் பின்பு அவர்கள் மலம் கழிப்பதை சாதாரண நிலைக்கு அதாவது சுழற்சி நிலைக்கு கொண்டு வர வேண்டும். ஒரே நேரத்தில் தினமும் மலம் கழிக்கும் பயிற்சியை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும். குறைந்தது இது ஆறு மாதங்களுக்கு மேல் தான் சாத்தியமாகும்.
அதே சமயம் வேறு நிறங்களில் அதாவது பச்சை, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் மலம் கழித்தால் குழந்தைக்கு பேதி அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கக்கூடும். அதுவும் அதிக முறை அதாவது ஐந்துக்கு மேற்பட்ட முறை மலம் கழிக்கும் போது அது குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டு பண்ணும். தொடர்ந்து மலம் கழித்தல் அடிக்கடி வயிற்றுப்போக்கு இவைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் போது குழந்தையின் எடை குறைய தொடங்கி வளர்ச்சி அதிகமாக பாதிக்கப்படும் குழந்தைக்கு ஊட்டச்சத்தில் ஜிம் குறைபாடு அதிகமாக இருக்கும் பொழுது குழந்தைகள் வயிற்று போக்கால் பாதிக்கப்படுகின்றனர் பெரும்பாலும் தாய் எடுத்துக் கொள்ளும் மனதில் குறைபாடு அல்லது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் உணவுகள் போன்ற விட்டால் தான் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர் இதனால் குழந்தைகள் மிகவும் சோர்வு நிலையை அடைந்து விடுவார்
இதுபோன்ற பிரச்சனைகள் வரும் பொழுது நாம் வீட்டு பெரியவர்கள் உடனே மருத்துவரை அணுகாமல் வீட்டு வைத்தியங்கள் மூலமே சரி செய்கின்றனர். குழந்தை சுத்தமாக பேணி காத்து வரும்போது இது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டாலும் பாலூட்டும் தாய் எவ்வித உணவை எடுத்துக் கொள்கிறார்களோ அதை பொறுத்துதான் குழந்தை மலம் கழிக்கிறது.
சில உணவுப் பொருட்கள் சேராமல் போனால் குழந்தைக்கு மாந்தம் ஏற்படும். இது ஏற்படும் போது குழந்தை பச்சையாக தொடர்ந்து மலம் கழிக்கும். இவ்வாறு கழிப்பதனால் குழந்தை ஆரோக்கியம் தடைபடுகிறது. பிறந்த குழந்தைகள் அதிகமாக மலம் கழிக்கும் பொழுது அவர்களுக்கு சேர வேண்டிய சத்தானது உடலில் சேராமல் அவர்களின் வளர்ச்சி முழுவதுமாக தடைப்பட்டு விடும்
இது வளர்ச்சியையும் தடுத்து விடும். எனவே இதை உடனே சரி செய்வது நல்லது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஒரு எளிய வீட்டு வைத்தியம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு மாந்தம் போன்றவைகள் ஏற்படும் போது முடிந்தவரை வீட்டு வைத்திய முறை மூலம் சரி பண்ணுதல் சிறந்தது. அது போன்று அடிக்கடி மலம் கழித்தல் அல்லது ஐந்து முறைக்கு மேல் மலம் கழித்தல், மலம் தண்ணியாக போவது, மலம் பச்சை நிறத்தில் போவது அல்லது மலத்துடன் சளியும் சேர்ந்து போவது போன்ற அறிகுறிகள் இருக்கும். குழந்தைகளுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
வயிற்றுப்போக்குக்கான கை வைத்தியம்:
காசிக்கட்டி என்றால் என்ன?
காசிக்கட்டி என்பது அகாசியா கேடெச்சு தாவரத்தில் இருந்து பெறப்படும் சாறு அல்லது பிசின் போன்ற வகையாகும். இந்தத் தாவரம் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வகையாகும்... இது ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு பொருளாக இருக்கிறது. பொதுவாக வயிறு சார்ந்த பிரச்சனைகள் புண்கள் மற்றும் தோல் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது. வயிற்று மற்றும் குடல் புழுக்களுக்கு காசு கட்டி ஒரு நல்ல மருந்தாக பார்க்கப்படுகிறது காசு கட்டி அந்த புழுக்களை அளித்து வயிற்றுப் பகுதியை பாதுகாக்கிறது. காசிக்கட்டி வயிற்றுப்போக்குக்கு மட்டும் அல்லாமல் இரத்தபேதி மற்றும் சீதபேதி போன்றவற்றிற்கும் நல்ல தீர்வு கொடுக்கிறது. தேனுடன் காசு கட்டி பொடி சேர்த்து உண்ணும் பொழுது இரத்தபேதி சீதபேதி நின்றுவிடும். காசி கட்டிக்கு வயிற்றுப் புண் குடல் புண் ஆற்றும் பண்புகளும் உள்ளன.
ஆயுர்வேதத்தில் காசு கட்டிக்கொண்டு செய்யப்படும் மருந்து புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு நல்ல மருந்தாக உபயோகிக்கப்படுகிறது
காசிக்கட்டி எனப்படும் பொருள் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். அதை வாங்கி குழந்தைகள் இருக்கும் வீட்டில் வைத்துக் கொள்வது சிறந்தது. காசி கட்டியை மிகவும் கவனமாக உபயோகப்படுத்தவும். இது பிறந்த குழந்தைகளுக்கு சிறு மிளகு அளவு எடுத்துக் கொண்டாலே போதும். இது கருப்பு கலரில் கடைகளில் கிடைக்கும். காசி கட்டி பற்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாகும்.. காசி கட்டியை கொண்டு செய்யப்படும் பொடி பல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
மிளகு அளவு காசிக்கட்டியை எடுத்து தாய்ப்பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து அதை கரைத்து குழந்தைக்கு புகட்ட வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை கொடுத்து வந்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
இதுபோல மூன்று மாதம் முதல் ஆறு மாதம் காசி கட்டியின் அளவை சற்று அதிகரிக்க வேண்டும். மூன்று மாத குழந்தை என்றால் இரண்டு மிளகு அளவு எடுத்துக் கொண்டால் போதும் உள்ளது. ஆறு மாத குழந்தைகளுக்கு மூன்று மிளகு அளவுக்கு எடுத்து தாய்ப்பாலில் கரைத்து புகட்ட வேண்டும். ஒரு வருட குழந்தைகளுக்கு நான்கு மிளகு அளவு வரை காசு கட்டியை எடுத்து தாய்ப்பாலில் கரைத்து கொடுக்கலாம். தாய்ப்பால் புகட்ட இயலாதவர்கள் காசி கட்டியை சுடு தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அதன் பின்பு கரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
அதிகபட்சமாக இரண்டு நாட்களுக்கு இதைத் தொடரலாம். அதற்கு மேல் வயிற்றுப்போக்கு நிற்காவிட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது. சாதாரணமான வயிற்று வலி இல்லாத வயிற்றுப்போக்கு அல்லது அதிக முறை மலம் கழிக்கும் குழந்தைகளுக்கு காசிக்கட்டி சிறந்த மருந்து.
இதுபோன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும்.. சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்ய வேண்டும்






No comments:
Post a Comment