தங்கள் கனவு இல்லத்தை வடிவமைப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை உண்டு. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசை இல்லாத நபர்களே கிடையாது. அவ்வளவு சீக்கிரமாக எல்லோருக்கும் சொந்த வீடு அமைவது கிடையாது. சில பேர் நிறைய சொத்துக்காரர்களாக கையில் பணம் நகை உடையவர்களாகவும் இருந்தாலும் சொந்த வீடு இல்லாமல் நம்மில் பலர் உள்ளனர். அதற்கென்று ஒரு யோகம் தேவை. ஏனெனில் எலி வளையானாலும் தனி வளை வேண்டும். வீடு என்பது சொத்து என்பதையும் தாண்டி உணர்வு பூர்வமாக நம்முடன் தொடர்புடையது. ஆனால் தற்காலங்களில் நிலத்தில் வாங்கி வீடு கட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல. அதனால் தான் நமது பெரியவர்கள் வீட்டை கட்டிப்பார் ... கல்யாணத்தை பண்ணிப்பார்... என்ற பழமொழியை கூறிவந்துள்ளனர்.
அந்த இல்லமானது மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பதற்கு தங்களால் இயன்ற அனைத்து வகையான முயற்சிகளையும் செய்கின்றனர். எந்த வகையிலும் பணத்தை அநாவசியமாக செலவு செய்யாமல் அதே சமயம் தாங்கள் செய்யும் செலவுக்கு ஏற்றவாறு வீடு அமைய வேண்டும் என்பது மட்டுமே அனைவரின் விருப்பமாக இருக்கும்.
இதில் கட்டுமானம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தங்களுக்கு ஏற்றார் போல் தங்கள் இல்லத்தை வடிவமைத்துக் கொள்கின்றனர். ஆனால் கட்டுமானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் தங்கள் பணத்தை பல்வேறு வழிகளில் இழக்க நேரிடலாம்.
எனவே உங்கள் வீட்டை கட்டத் தொடங்கும் முன் சில முக்கிய தகவல்களை அறிந்து கொண்டு துவங்குவது நல்லது.
அந்த வகையில் உங்கள் கனவு இல்லத்தை வடிவமைத்துக்கொள்ள மிகச்சிறந்த 8 வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதை ஆய்ந்து அறிந்த பின்னர் உங்களுக்கான இல்லத்தை கட்டத் தொடங்குவது சிறந்தது.
1. காற்றோட்டமான போக்குவரத்து வசதி உள்ள மனைகள்/நிலங்கள்.
வீடு கட்டுவதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் மனைகள் அல்லது நிலங்கள் நல்ல காற்றோட்டமானதாகவும் சுத்தமான சுற்றுப்புறத்தை கொண்டதாக இருக்க வேண்டும். சுத்தமான சுற்றுப்புறத்தை கொண்டிருக்கும் பொழுது சுகாதாரம் மேம்படும். குப்பைத்தொட்டி, குப்பை கொட்டும் இடம், பொது கழிப்பறை, சாக்கடை வாய்க்கால் போன்றவைகள் நம் வசிக்கும் இடத்தின் அருகில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அங்கே கொசுக்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும் பொழுது தொற்று நோய்கள் எளிதில் பரவக்கூடும். இது போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு தான் அதிகளவில் மலேரியா டெங்கு காய்ச்சல்கள் வருகிறது.
மேலும் அந்த இடமானது போக்குவரத்து வசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும் அல்லது சாலைகளுடன் தொடர்புடைய இடமாக இருக்கும் பொழுது எதிர்காலத்தில் போக்குவரத்து சம்பந்தப்பட்ட செலவுகளை தவிர்க்கலாம். சிலருக்கு நகரத்தின் மையத்தில் வீடு கட்டுவதற்கு ஆசை இருக்கலாம் ஆனால் நகரத்தின் மையம் பல வசதிகளை கொண்டிருந்தாலும் ஒரு இயற்கைச் சூழல் வாய்ந்த வசதிகளை தர இயலாது எடுத்துக்காட்டாக அந்த மாதிரி இடங்களில் காற்றானது அதிக அளவு மாசுபாடு அடைந்திருக்கும் காற்று மாசுபாடு மற்றும் ஒலி மாசுபாடு நகரத்தின் முக்கிய இடங்களில் அதிகமாக இருக்கும் தரமான மண் நல்ல காற்று இயற்கையான சுற்றுச்சூழல் நகரத்தின் மையங்களில் கிடைப்பது அரிது எனவே இது போன்ற காரணங்களை முதன்மைப்படுத்திக் கொண்டு இடம் மற்றும் அணைகளை வாங்குவது நல்லது
2. திறமையான தொழிலாளர்கள் (தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் கிடைத்தால் இன்னும் சிறப்பு)
வீடு கட்டத் தொடங்கியவுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த வீட்டை முடிக்கும் பொழுது பணத்தை நிறைய வழிகளில் சேமிக்கலாம். பணி புரியும் தொழிலாளர்கள் உரிய நேரத்தில் வேலைகளை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்க வேண்டும் எனில் தொழிலாளர்கள் குறிப்பிட்ட தொலைவில் இருக்க வேண்டும். அல்லது தங்கி பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது வேலை நேரம் கெடாது.. அதாவது ஓய்வு நேரம் போக மீத நேரங்களில் வேலையானது சீக்கிரம் முடிக்க முடியும்.
இதுவே தொலைவில் அல்லது வேறு ஊர்களில் இருந்து தினமும் வரும் தொழிலாளர்களுக்கு சிறிது நேரம் கால தாமதம் ஆகலாம். பயணத்தினால் ஏற்படும் களைப்பின் காரணமாக வேலையின் வேகம் குறையலாம். இதை தவிர்க்க தங்கி பணிபுரியும் தொழிலாளர்களை தேர்ந்தெடுப்பது அல்லது மிக அருகில் இருக்கும் தொழிலாளர்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
3. மொத்தமாக கட்டுமான பொருட்களை வாங்குதல்.
பொதுவாக வீடு கட்டுதலில் பல நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையிலும் பலவிதமான கட்டுமான பொருட்கள் தேவைப்படும். எனவே வேலைக்கு ஏற்ப அவ்வபோது பொருட்களை வாங்குவது சிறந்தது. கடைசியாக முடிக்க வேண்டிய வேலைக்கு முதலிலேயே கட்டுமான பொருட்களை வாங்கி போடுவது சிறந்தது கிடையாது. ஏனெனில் பணத்தை அதில் முன்னாடியே முதலீடு செய்வது அடுத்தடுத்த வேலைகளுக்கு சிரமம் ஏற்படும்
அதுபோல தேவையான கட்டுமான பொருட்களை முடிந்த வரை ஒரே இடத்தில் மொத்தமாக வாங்குவது சிறந்தது. அதாவது சில்லறை சில்லறையாக வாங்காமல் வேலைக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி விடுவதால் விலையில் தள்ளுபடி கேட்கலாம்..
இதில் முக்கியமான ஒன்று குறைந்த விலைக்கு பொருள்களை வாங்குவது சிறந்தது என்றாலும் பொருள்களின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது. தரமான பொருட்களையே முதன்மையாக கொள்ள வேண்டும். பின்பு தான் அதன் விலையை கருத்தில் கொள்ள வேண்டும். தரமான பொருட்களைக் கொண்டு வீடு கட்டும்பொழுது எதிர்காலத்தில் கட்டிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கலாம். எனவே அது வீடு கட்டும் பொழுது விலையில் சற்று அதிகமானாலும் எதிர்காலத்தில் வரும் பெரிய செலவை வரவிடாமல் தடுக்க முடியும்.
4. சிறந்த கட்டுமான தொழில்நுட்ப வல்லுநர் மட்டும் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.
நம் வீடு கட்டும் பொழுது நல்ல ஒரு சிறந்த பொறியாளரை தேர்ந்தெடுத்து விட்டால் எதைப் பற்றிய கவலையும் நமக்கு தேவை இருக்காது. ஏனெனில் சிறந்த கட்டிடக்கலை வல்லுநர்கள் குறைந்த செலவில் தரமான பொருட்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவில் கட்டிடத்தை கட்டி கொடுப்பவர் ஆக இருக்கும் பொழுது எந்தவித பிரச்சினையும் இல்லாமல் கட்டிடம் சிறப்பானதாக அமையும்.
5. வெளியூர் மற்றும் வெளிப்பகுதிகளிலிருந்து கட்டுமான பொருட்கள் மற்றும் தொழிலாளர்களை தேர்ந்தெடுப்பதை தவிர்ப்பது நல்லது.
சில நேரம் நமது கட்டிடத்தின் அருகிலயே இருக்கும் கடைகளில் கட்டுமான பொருட்கள் எடுத்தாலும் விலை சற்று அதிகமாக இருக்கலாம். இந்த காரணத்தினால் நாம் வெளியூர் மற்றும் பிற பகுதிகளில் கட்டுமான பொருட்களை வாங்க நேரிடும். அவ்வாறு வாங்கும் பொழுது போக்குவரத்து செலவு என ஒரு பெருந்தொகையை செலவழிக்க நேரிடலாம். இது பணச் செலவு மட்டும் இல்லாமல் அலைச்சல் மற்றும் நேரத்தையும் வீணடிக்கலாம்.
6. தடையில்லாத தூய்மையான நீர் மற்றும் மின்சார வசதி.
தற்காலங்களில் நீர் மட்டுமல்லாமல் மின்சார வசதியும் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. எனவே தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் 24 நேரமும் தண்ணீர் வசதியுடன் இருக்கும் இடங்களில் வீடு கட்டுதல் சிறந்தது. அது மட்டுமல்லாமல் இன்னும் சில இடங்களில் மின்சார வசதி கிடைக்காமல் இருக்கிறது. அது போன்ற இடங்களை தவிர்த்து எப்போதும் மின்சார வசதி மற்றும் குடிநீர் கிடைக்கும் இடங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. இவைகள் இரண்டும் இல்லாத இடங்களில் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இது எதிர்காலங்களில் பல பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.
7. கட்டுமான பொருட்களை சரியான அளவில் நேரத்தில் உபயோகித்தல்.
தரமான கட்டுமான பொருட்களை வாங்கியவுடன் தரமான வீடு கட்டலாம் என்ற எண்ணத்தில் இருந்து விடக்கூடாது. அந்த பொருட்களை எவ்வாறு உபயோகப்படுத்துவது எந்தெந்த வேலை நிலைகளில் அதை உபயோகிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது கட்டிட வல்லுநரைச் சார்ந்தது என்றாலும் நாமும் இதை கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.
8. குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிடத்தை முடித்தல்.
கட்டிடம் கட்டும் முன்பே கட்டிடத்திற்கான ஒப்பந்தத்தில் அதற்கான கால கெடுவையும் சேர்த்து ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஏனெனில் நம் வாடகை போன்ற வீடுகளில் இருந்து நாம் கட்டிய வீட்டிற்கு செல்வதற்கு தாமதமானால் வாடகை கொடுக்க நேரிடலாம். இது போன்ற செலவுகள் மற்றும் பிற செலவுகளை தவிர்க்க குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிடத்தில் முடிப்பது நல்லது.
கட்டிட வரைபடம் - 2D Plan
கட்டமைப்பு வரைபடம் - Structural Drawing
வெளிப்புற உட்புற வடிவமைப்பு - Interior and Exterior Designs
கட்டிட ஒப்பந்த பத்திரம் - Construction Agreement.






No comments:
Post a Comment