அதிக வகையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து இருப்பது இந்த உலர் கொட்டைகளில் தான். விலை சற்று உயர்ந்ததாக இருந்தாலும் இந்த உலர் கொட்டைகள் மக்களால் விரும்பி உண்ணப்படுவதன் காரணம் இதன் சத்துக்களும் ருசியும் தான். இது ஒரு பணக்கார பொருளாக பார்க்கப்படுவதற்கு இதன் விலை ஒரு காரணம் என்றாலும் இதில் உள்ள சத்துக்களும் ஒரு காரணமே.
உலர் கொட்டைகளான பாதம், முந்திரி, பிஸ்தா மற்றும் வால்நட் போன்ற பல பொருட்கள் உடல் எடை அதிகரிப்புடன் தொடர்புடையவை. இதில் உள்ள நல்ல கொழுப்புகள் உடல் எடையை சீர்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உலர் கொட்டைகளை ஊறவைத்து உண்ணும் பொழுது புற்றுநோய் வராமல் காக்கும். பொதுவாகவே இந்த உலர் கொட்டைகளை ஊறவைத்து உண்ணும் பொழுது வயிற்றுப் பகுதியில் உள்ள உள்ளுறுப்புகளின் இயக்கம் சிறப்பாக இருக்கும். செரிமான பகுதிகளில் ஏற்படும் பிரச்சனை வராமல் தடுக்கப்படும்
உலர் கொட்டைகளை காலையில் தினமும் உண்பவர்களுக்கு இதய மற்றும் சர்க்கரை நோய் அண்டாது. உலர் கொட்டைகளில் பாதாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அனைத்து சத்துக்களும் போதிய அளவில் கிடைக்கின்றன.
இதை குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பொழுது குழந்தையின் வளர்ச்சி வயதிற்கு ஏற்றார் போல் சரியான அளவில் இருக்கும். சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பாதாம் கொட்டைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
பொதுவாக உலர் கொட்டைகளை நீரில் ஊற வைத்து உண்ணும் பொழுது அதன் பலன் இரு மடங்கு ஆகிறது. அவர் ஊற வைத்து உண்ணும் பொழுது அதில் உள்ள அதிகப்படியான கொழுப்பானது வெளியேறி
சிறந்த புரத பொருளாக கிடைக்கிறது. அந்த வகையில் சில உலர்க கொட்டைகளை ஊறவைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு காணலாம்.
பாதாம்:
ஊர்க் கொட்டைகளில் மிக சுவையானதும் மிக அதிக சத்து வாய்ந்ததும் ஒன்றாக பார்க்கப்படுவது பாதாம். பாதாமை அப்படியே சாப்பிடுவதால் எண்ணற்ற பலன்கள் உள்ளன. இது இனிப்பு மில்க் ஷேக் மற்றும் உப்பு போட்டு வறுத்து என பல்வேறு விதமாக உணவு வகைகளில் சேர்த்தாலும் அப்படியே சாப்பிடுபவர்களும் உண்டு.
இதயத்தின் செயல்பாட்டில் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாமில் உள்ள சத்துக்கள் இதயத்தின் செயல்பாட்டை நன்கு அதிகரிக்க உதவுகிறது. பாதாமில் செய்யப்படும் எண்ணெய் சருமத்திற்கும் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடலுக்கு நன்மை அளிக்கின்றன. பாதாமை பல வகைகளில் உணவில் சேர்த்தாலும் அதை ஊற வைத்து சாப்பிடுவது மிகச் சிறந்தது. தேவையான அல்லது ஆறு முதல் 8 பாதம் கொட்டைகளை இரவில் நன்கு கழுவி விட்டு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அந்தத் தோலை உரித்து விட்டு சாப்பிட்டு விட வேண்டும். இதனால் எண்ணற்ற ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. உடல் எடை அதிகரிக்க கூடும் என்று நினைப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தலாம்.
இதில் மற்றும் ஒரு முறை தினமும் மூன்று முதல் எட்டு பாதாம் கொட்டைகளை பசும்பாலில் ஆறு மணி நேரம் ஊற வைத்து தோலினை உரித்து புரத குறைபாடு உடையவர்கள், மெலிந்த தேகம், சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது நல்ல மாற்றத்தையும் வளர்ச்சியையும் காணலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் இதை தினமும் எடுத்துக் கொள்ளும் போது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது. பாலில் ஊற வைத்து உண்பதால் கால்சியமும் அதில் சேர்ந்து முழுதாக கிடைக்கிறது.
வால்நட்:
பார்ப்பதற்கு முரடாக இருக்கும் வால்நட் மிகவும் மிருதுவானது. உலர் கொட்டைகளிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த கொட்டைகளில் வால்நட் முக்கியமான ஒன்றாகும். இதில் உள்ள நல்ல கொழுப்பு உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கர்ப்பிணிகளின் கர்ப்ப காலங்களில் எடுத்துக் கொள்ளும் பொழுது குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். பொதுவாக இந்த வகை ஒமேகா கொழுப்பு கடல் உணவுப் பொருட்களில் மட்டும் இருப்பதால் சைவப்பெரியர்கள் அதை எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு மாற்றாக வால்நட் எடுத்துக் கொள்ளலாம். அதில் கிடக்கும் கொழுப்பு அமிலம் இதில் அதிகமாக உள்ளது. இதை பாதாம் அளவுக்கு நீண்ட நேரம் ஊற வைக்க தேவையில்லை. இதை சுத்தமான தண்ணீர் அல்லது பசும்பாலில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வரை ஊற வைத்து அந்த தண்ணீருடன் சேர்த்து உண்ணலாம். இதை தினமும் சாப்பிட்டு வரும் பொழுது மலச்சிக்கல், ஆண்மை குறைபாடு மற்றும் மன மற்றும் உடல் அழுத்தங்களில் இருந்து விடுபடலாம்.
உலர் திராட்சை:
உலர் திராட்சையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். அது மட்டுமில்லாமல் இரத்த விருத்திக்கு உலர் திராட்சை ஒரு நல்ல தீர்வாகும். இது ரத்த அழுத்தத்தை சீரமைத்து காலையிலேயே இதை உண்பதால் அன்றைய நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. கருப்பு அல்லது வெளிர் உலர் திராட்சைகளை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு உலர் திராட்சைகளை சாப்பிடும் பொழுது ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் மலச்சிக்கல் வரவிடாமல் தடுக்க செய்கிறது. உலர் திராட்சைகளை காய வைத்து பதப்படுத்தும் பொழுது அதன் தோளில் தேவையில்லாத குப்பைகள் ஒட்டி இருக்க வாய்ப்புண்டு. இதை ஊற வைத்து உண்ணும் பொழுது தேவை இல்லாதவை உடலுக்குள் சேர்வது தடுக்கப்படுகிறது.
பேரிச்சை பழம்:
பேரிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகளவு இருந்தாலும் மனவளம் காப்பதில் பேரிச்சம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
பேரிச்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது போதைக்கு அடிமையாகும் எண்ணம் குறைக்கப்படுகிறத. புகை மற்றும் மது பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கும் பொழுது பேரிச்சம் பழத்தை அதிகமாக உண்டு எளிதாக அதிலிருந்து விடுபடலாம். இது மனவளத்தை அதிகரிக்க உதவுகிறது. பேரிச்சை பழத்தில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளித்து உடல்நலம் சீராக இருப்பதற்கு உதவுகிறது. மேலும் இது ரத்த விருத்திக்கு சிறந்ததாகும். பேரிச்சை பழத்தை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை உண்ணும் பொழுது உடலில் உள்ள செரிமான பகுதி மற்றும் வயிற்று உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும். அஜீரண கோளாறு, வாயு கோளாறு போன்ற பிரச்சனைகளில் இருந்து தடுத்து வயிற்றுப் பகுதிகளை வலுப்படுத்தும். ஹார்மோன் சார்ந்த பருவப் பிரச்சினைகளை சரி செய்யவும் பேரிச்சம் பழம் நல்ல தீர்வாகும். எனவே பருவ வயதினர் பேரிச்சம் பழத்தை அதிகளவில் எடுத்துக் கொண்டால் ஹார்மோன் சுரப்பு நன்றாக இருக்கும். சத்துக் குறைபாடு உடைய குழந்தைகள், மெலிந்த தேகம் உடையவர்கள் மற்றும் முதியவர்களுக்கு பேரிச்சம் பழத்தை மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் வரை பசும்பாலில் ஊற வைத்து பின்பு அதை மிக்ஸியில் அரைத்து கொடுக்கலாம். இதை தினமும் சாப்பிட்டு வரும் பொழுது உடல் வளர்ச்சி மற்றும் நோய்கள் எதுவும் அண்டாமல் சிறப்பாக இருக்கும்...
பொதுவாகவே உலர் பழ மற்றும் கொட்டைகளை அப்படியே சாப்பிடுபவர்களே அதிகம். அதை அப்படியே சாப்பிட்டாலும் இல்லை ஏதாவது ஒரு உணவு வகையில் சேர்த்துக் கொண்டாலும் மிகவும் சிறந்தது. இன்னும் சற்று படி மேலே அதை தண்ணீரிலோ பாலிலோ ஊறவைத்து உண்ணும் பொழுது இன்னும் அதிக பலன்களை பெறலாம்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்கள் அறிந்திட எங்கள் பக்கத்தை தொடரவும். மேலும் சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவ செய்யவும்.






No comments:
Post a Comment