புளிக்காத மாவை உணவிற்கு உபயோகப்படுத்தும் பொழுது அது வயிற்று பிரச்சினைகளையும் உருவாக்கும். குறிப்பாக இட்லி வராமல் துணியுடன் அதாவது பாத்திரத்துடன் ஒட்டிக் கொள்ளும். நல்ல சுவை வரவேண்டும் எனில் மாவானது அரைத்த நாலு முதல் ஆறு மணி நேரத்திற்குள் புளிக்க வேண்டும்.
ஆனால் மழைக்காலத்தில் மாவானது புளிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் மாவானது அதன் சுவையை இழந்துவிடும். இதற்கு அருமையான டிப்ஸ் ஒன்று உள்ளது அதனை இங்கு பதிவிடுகிறோம்.
ஒரு படி அரிசி போட்டு அரைக்கும் மாவிற்கு ஒரு இளநீரை வாங்கி அதில் உள்ள நீர் அனைத்தையும் மாவில் ஊற்றி வைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும். இளநீரில் உள்ள நொதிமங்கள் மாவை சீக்கிரம் நொதிக்க செய்கிறது. அந்த மாவு இட்லி தோசைக்கு கூடுதல் சுவை அளிப்பதுடன் நீண்ட நேரத்திற்கு சுவை குறையாமல் இருக்கும்.
அந்த மாவில் காம்புடன் கூடிய பச்சை மிளகாய் ஒன்று போட்டு மூடி வைத்தால் அதன் பின் அந்த மாவு புளிக்காது. தேவைப்படும் பொழுது உபயோகப்படுத்தலாம்.
இந்தப் பதிவில் வரும் சந்தேகங்களுக்கு கீழே கமெண்டில் பதிவு செய்யவும்.
இது போன்ற குறிப்புகளை உடனடியாக அறிய எங்கள் பக்கத்தை தொடரவும்.






Wow
ReplyDelete